இந்த ராசிக்காரர்கள் எங்க போனாலும் அங்க ஒரே பஞ்சாயத்துதான்... இது உங்க ராசி இல்லயே?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும்.

horoscope

எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும். அன்றைய கிரக நிலைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றபடி அன்றைய தினத்தைத் திட்டமிட்டாலே போதும் இது சிறப்பான நாளாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலைகளை மிகவும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகப் பெரியோர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். வாகனங்களில் பயணம் செய்கின்ற பொழுது சின்ன சின்ன பழுதுகள் உண்டாகலாம். புது இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள். சமூகம் சார்ந்த பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் மன மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பணிபுரிகின்ற சக பணியாளர்களிடம் உங்களுடைய மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். பணிபுரிகின்ற இடங்களில் உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

தொழிலில் புதிய யுக்திகளைச் செயல்படுத்தி வெற்றி அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட தேடலில் பிரபலங்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த தனவரவு மகிழ்ச்சியை அளிக்கும். சுய தொழில் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் உங்களுக்கு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

வீட்டில் குழந்தைகளின் செயல்பாடுகளால் உங்களுக்குப் பெருமை உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமாகவே எல்லா விஷயங்களும் நடக்கும். பொருளாதாரத்தை அதிகப்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். இணையம் சம்பந்தப்பட்ட துறைகளில் இருக்கின்றவர்களுக்கு நிறைய புதிய வாய்ப்புகள் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

வேகமாக முடியும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த வேலைகள் முடியாமல் இழுத்தடிக்கும். நண்பர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். சின்ன சின்ன சண்டைகள் வந்துபோகும். பரம்பரை சொத்துக்களின் மூலமாக சில விரயச் செலவுகள் உண்டாகலாம். வுலை செய்யும் இடங்களில் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த எதிர்பார்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். தொழிலில் பல புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பெற்றோர்களின் உறவினர்கள் மூலமாக உங்களுக்கு தேரவான நிலை உருவாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

செய்யும் செயலில் கொஞ்சம் திருப்திகரமான சூழல் அமையும். வேலையில் இருந்து வந்த மந்த நிலை சரியாகும். நீங்கள் எதிர்பாராத பண வரவு கைக்கு வந்து சேரும். சுறுசுறுப்பாக காட்சியளிப்பீர்கள். உடன் பணிபுரிகின்ற சக பணியாளர்களினால் உங்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சின்ன சின்ன சண்டைகள் மாறி, நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். தொழிலில் உங்களுடைய நெருக்கமான அறிவின்மூலம் நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கிப் போகும். உயர் கலிவ் பயில்கின்ற மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். கால்நடைகளின் மூலம் உங்களுக்கான லாபங்கள் பல மடங்கு உயர ஆரம்பிக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். வெளிநாட்டுக்குப் பயணங்கள் மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு நிறைய புதிய வாய்ப்புகள் உருவாகும். அடுத்தவர்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சிகளை அதிகரிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீல நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

நினைத்த காரியங்கள் சின்ன சின்ன தடைகளுக்குப் பிறகு நிறைவேறும். பயணங்களின் வழியில் நிறைய லாபங்கள் உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். பெரியவர்களுடன் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய மன தைரியத்துக்கு ஏற்றபடி நிறைய புதிய புதிய திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்த முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

வீட்டில் உள்ளவர்களின் ஆதரவினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் இது. அதை உணர்ந்து கொண்டால் பெரும் லாபத்தை அடையலாம். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த அமைதியான சூழல்கள் உருவாகும். மனதுக்குள் இருக்கும் சின்ன சின்ன கவலைகள் குறைந்து போகும். சேமிப்புகள் உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் உண்டாகும்.

மீனம்

மீனம்

எந்த வேலையாக இருந்தாலும் அதை மிகச்சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். முக்கியப் பணிகளில் இருப்பவர்கள் உங்களுடைய உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியம் முன்பைவிட மேம்பட்டு நிற்கும். சுயதொழில் புரிகின்றவர்களுக்கு செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். முக்கியப் பணியில் இருப்பவர்களுக்கு செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். உங்களுக்கான சரியான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion