Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
குருபகவான் அருளால் கஷ்டங்கள் நீங்கி, பணவரவு உண்டாகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும்.

எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும். அன்றைய கிரக நிலைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு,அதற்கு ஏற்றபடி அன்றைய தினத்தைத் திட்டமிட்டாலே போதும் இது சிறப்பான நாளாக அமையும்.

மேஷம்
தொழில் சம்பந்தமாக இதுவரை இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சினைகள் நீங்கி, அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். வீட்டில் கலகலப்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். புதிய நட்புகள் உருவாகும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்கள் சாதகமான சூழலை அடைவார்கள். நண்பர்களுடன் விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குதூகலமாக இருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நாளாக இன்று அமையும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவைக் கொடுக்குமு். வியாபாரங்களில் உள்ள போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
வீட்டில் உள்ளவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நிறைவேற்றி வைப்பீர்கள். மனதுக்குள் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் தீரும். வீடு மற்றும் மனை விருத்திக்கான செயல் திட்டங்கள் உங்களுக்குச் சாதகமாகவே முடியும். நீங்கள் எதிர்பாராத சுப செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். அதனால் சுப விரயங்களும் இருக்கும். உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற பாராட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் இருக்கும்.

கடகம்
நண்பர்களின் மூலம் உங்களுக்கு வருமானத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதுக்குள் புதுவிதமான சிந்தனைகள் தோன்ற ஆரம்பிக்கும். நீங்கள் செய்யும் செயல்களால் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். உங்களுடைய நினைவாற்றலும் அதிகரிக்கத் தொடங்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் மற்றவர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்
விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களுடைய கவனக் குறைவினால் அடுத்தவர்களிடம் அவப்பெயர் உண்டாகலாம். அதனால் நிதானத்துடன் நடந்து கொள்வது சிறந்தது. வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயுற்சிகள் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிறிய பயணங்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுடைய சாதுர்யமான புச்சுத் திறனால் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் குழந்தைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

துலாம்
தொழில் சம்பந்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் யாவும் உங்களுக்குச் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உங்களுடைய உறவினர்களின் மூலமாக உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். வீடு மற்றும் மனைகள் வாங்குவது தொடர்பாக பல புதிய சிந்தனைகள் வந்து போகும். உயர்கல்வி பயில்கின்றவர்களுக்கு நல்ல ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் கிடைக்கப் பெறுவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு மேன்மை அடைவதற்கான வாய்ப்புகள் பெருகிக் கொண்டே இருக்கும். பெற்றோர்களுடைய உடல் நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் தீரும். உங்களுடைய பெற்றோர்களின் உடல் நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் தீர்ந்து போகும். உடன் பிறந்த சகோதரர்களின் வாயிலாக உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் செய்கின்ற வேலையில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

தனுசு
பெய வரவு விஷயத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்க்ள உங்களுக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். சுரங்கப் பணிகள் சம்பந்தப்பட்ட பணிகளில் இருக்கின்றவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

மகரம்
தொழில் மற்றும் லட்சியங்களில் புதிய இலக்குகளை தீர்மானித்து அதை செயல்படுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு பெரியோர்களுடைய முழு ஆசிர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டின் பொருளாதாரம் உயரும். தொழிலில் புதிய நபர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் பல புதிய தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய நீண்ட கால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களால் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உருவாகும். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மீனம்
பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு உண்டாகும். கலை சம்பந்தப்பட்ட அறிவும் திறமையும் அதிகமாகும். இறை வழிபாட்டின் மூலம் உங்களுடைய மனம் மகிழ்ச்சி அடையும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
