Latest Updates
-
சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
அன்னையர் தினத்தில் பூக்களுக்குப் பதில் இதை கொடுங்க… அம்மாவின் ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் பலமடங்கு உயரும்! -
ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க..- கூறும் டாக்டர். பிள்ளை! -
மே 7-ம் தேதி இந்த திசையில் மணி பிளாண்ட் வையுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? -
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இன்னைக்கு சனிக்கிழமை... எந்தந்த ராசிக்கு சனிபகவான் ஆசி வழங்குவார்... யாரை பழிவாங்குவார்
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உங்களுடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளினால் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். நினைத்த காரியங்களில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். உங்களுடைய தொழில் கூட்டாளிகளால் லாபங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
கலைத்துறையில் இருப்பவர்கள் உங்களுடைய முழுத் திறமைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய வெளிப்படையான பேச்சுக்கள் மூலம் மனதில் தெளிவு பிறக்கும். மிக நுட்பமான சிந்தனைகள் உங்களுடைய மனதுக்குள் மேம்பட்டு நிற்கும். வெளியூர் பயணங்களின்மூலம் புதிய அனுபவமும் லாபமும் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
புதிய தொழில் முயற்சினளால் உங்களுக்கு மேன்மை உண்டாகும். பொது சபைகளில் உங்களுக்கு மேன்மை உண்டாகும். உங்களுடைய உடைமைகளில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேள்விகளில் கலந்து கொண்டு, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் குழந்தைகளின் வழியில் உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கடகம்
வீட்டில் குழந்தைகளின் ஆதரவினால் உங்களுககு லாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத வீண் அலைச்சல்களால் உங்களுக்கு உடலும் மனமும் சோர்வு உண்டாகும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் வந்து போகும். உங்களுடைய முயற்சிக்ககான முழு பலன்களும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் கொஞ்சம் காலதாமதம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கப் போகிறது.

சிம்மம்
முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய உறவினர்களுக்கு இடையே உங்களுக்கான செல்வாக்குகள் உயரும். உங்களுடைய உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களால் உங்களுக்கான ஆதரவுகள் பெருகும். தாய்வழி உறவினர்களால் உங்களுக்கு அனுகூலங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற லாபம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். முக்கியப் பணியில் இருக்கின்றவர்கள் உங்களுடைய சக ஊழியர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்திடுவது நல்லது. தாய்மாமன் உறவினர்களின் மூலமாக, உங்களுக்கு லாபம் ஏற்படும். பயணங்களில் மிகவும் கவனத்துடன் இருங்கள். உங்களுடைய இளைய உடன் பிறந்தவர்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குழந்தைகளின் மூலம் உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். பிரபலமானவர்களுடைய நட்பை பெறுவீர்கள். விருநது நிகழ்ச்சிகளில் பங்கேற்று மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுக்குள் உதித்த எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய அதிாஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
கால்நடைகளின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். தாயின் வழி வந்த உறவினர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய சந்தேக எண்ணஙக்ளால் நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் விரிசல்களும் உண்டாகும். கவனாக இருங்கள். முக்கியப் பணிகளில் இருக்கின்றவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பழைய பிரச்சினைகளைப் பற்றி, குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பயணங்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் உங்களுடைய புதிய வாடிக்கையாளர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரங்களில் நீங்கள் எதிர்பாாத பெரும் லாபம் உங்களுக்கு உண்டாகும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். அப்படியே கொடுத்தாலும் யோசித்து முடிவெடுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் இருக்கும்.

மகரம்
உயர்கல்வி சம்பந்தமாக மாணவர்களுக்கு பெரியோர்களுடைய வழிகாட்டுதல் கிடைக்கும். வீட்டில் உள்ள குழந்தைகளால் எதிர்பாராத சின்ன சின்ன செலவுகள் உண்டாகும். தொழிலில் உங்களுடைய புதிய முயற்சிக்கு நினைத்தபடி லாபம் உண்டாகும். தொழிலில் பல புதிய யுக்திகளை முயற்சி செய்வீர்கள். அதில் வெற்றியும் அடைவீர்கள். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய மேலதிகாரிகளின் முழு ஆதரவும் மேன்மையும் உண்டாகும். தொழிலில் நீங்கள் செய்கின்ற புதுவிதமான யுக்திகளினால் நினைத்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களின் மூலமாகத் தொழிலில் நினைத்த வெற்றியை அடைவீர்கள். நண்பர்களின் மூலமாக உங்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். உங்களுடைய அனைத்து தொழில் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் அனைத்தும் மேலோங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்
வீட்டில் உள்ளவர்களுடைய அனைத்து தேவைகளையும் அறிந்து கொண்டு, அவற்றை நிறைவேற்றி வைத்து, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் உங்களுடைய புதிய வாடிக்கையாளர்களால் நீங்கள் எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். புதிய வேலையாட்களை நியமிப்பீர்கள். உங்களுடைய தந்தையின் உடல் நலத்தில் உங்களுக்கு கவனம் செலுத்துதல் வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications