Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
இந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு ஏதாவது ஒரு கோவிலுக்கு போயிட்டு வாங்க... எல்லாம் ஜெயமாக முடியும்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
புதிய தொழில் முயற்சினளால் உங்களுக்கு மேன்மை உண்டாகும். பொது சபைகளில் உங்களுக்கு மேன்மை உண்டாகும். உங்களுடைய உடைமைகளில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேள்விகளில் கலந்து கொண்டு, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் குழந்தைகளின் வழியில் உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
கலைத்துறையில் இருப்பவர்கள் உங்களுடைய முழுத் திறமைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய வெளிப்படையான பேச்சுக்கள் மூலம் மனதில் தெளிவு பிறக்கும். மிக நுட்பமான சிந்தனைகள் உங்களுடைய மனதுக்குள் மேம்பட்டு நிற்கும். வெளியூர் பயணங்களின்மூலம் புதிய அனுபவமும் லாபமும் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளினால் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். நினைத்த காரியங்களில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். உங்களுடைய தொழில் கூட்டாளிகளால் லாபங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் கூடுதல் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறுகிய தூர பயணங்களினால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் தொழிலில் கொஞ்சம் முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். புதிய பொருள்களை வாங்குவதற்கான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
வழக்கத்தை விடவும் கொஞ்சம் கூடுதல் தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் அனுகூலமான செய்திகள் உண்டாகும். பொது சேவைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். விளையாட்டு வீரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். கால்நடைகளிடம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுடைய குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உங்களுடைய பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுவீர்கள். வாகனங்களால் உங்களுக்கு வீண் விரயங்களும் செலவுகளும் உண்டாகும். புதிய வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகள் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய பிள்ளைகளின் மூலம் தொழிலுக்கு கொஞ்சம் கூடுதல் ஆதரவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வெளியூரில் இருந்து சுப செய்திகள் வந்து சேரும். எதிர்பாலின மக்களிடம் கொஞ்சம் கவனம் வேண்டும். நுணுக்கமான புதிய தொழில் நுட்பங்களைப் பயில்வீர்கள். தொழில் வகையில் எதிர்பார்த்த கடனுதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். தண்ணீர் சம்பந்தப்பட்ட பணியில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் லாபகரமான நாளாக இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வீட்டில் பிள்ளைகளிடம் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். புதிய நபர்களின் உதவியினால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உறவுகளுடைய ஆதரவு உங்களுக்குப் பெருகும். மனதுக்கு நெருக்கமானவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
வாகனப் பயண்ஙகளில் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். வணிகம் சம்பந்தமான தொழில் செய்கின்றவர்களுக்கு கொஞ்சம் மந்தமான சூழ்நிலை உண்டாகும். உங்களுக்கு இன்று பிரபலமானவர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் கொஞ்சம் அனுகூலமான சூழ்நிலை உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மகரம்
நீங்கள் எதிர்பார்க்காத தன வரவினால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறைய ஆரம்பிக்கும். பணியிடத்தில் தலைமை அதிகாரியினுடைய பாராட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய சிந்தனைகள் மேலோங்கி இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்
முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கு இருக்கும் போட்டிகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உங்களுடன் பிறந்த சகோதரர்களால் உங்களுக்குச் சாதகமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். பணியில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை நிலுவையில் இருந்து வந்த பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்
தாய்வழியிலான உறவினர்களின் மூலம் உங்களுக்கு பெரும் ஆதரவு உண்டாகும். முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் நிர்வாகத்தில் பல புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். பொது சேவைகளில் ஈடுபடுபவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சுயதொழில் சம்பந்தமான புதிய முடிவுகள் உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியோர்களுடைய ஆலோசனைகள் உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications