Latest Updates
-
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
இந்த சண்டே 12 ராசிகளும் என்னெல்லாம் செய்யப் போகுதுன்னு தெரியுமா?...
இன்று 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஆடி வெள்ளியான இன்று என்னென்ன பலன்கள் உண்டாகப் போகின்ற என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப் போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்று எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்:
உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஊழியர்களுடன் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பொருள்களைக் கையாளுகின்ற போது, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். தொழிலில் பொருளின் தேக்க நிலைகள் உண்டாகும். பெரியோர்களுடைய உபதேசங்களினால், மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்:
தொழில் சம்பந்தப்பட்ட புதிய முடிவுகளை எடுப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். உடன் பணிபுரியும் சக ஊழியர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். விவாதங்களில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையும். புதிய தொழிலில் உண்டாகின்ற முயற்சிகளினால் உங்களுக்கு சுப விரயங்கள் உண்டாகும். போட்டிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்:
போட்டிகளில் நினைத்த காரியங்களை நினைத்த அளவில் வெற்றி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்காகத் திட்டமிடுவீர்கள். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு அவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். மனதுக்குள் இருக்கும் இனம் புரியாத புதிய புதிய எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்:
புதிய நபர்களுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களினால் உங்களுக்கு தொழிலில் லாபங்கள் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கங்கள் அதிகரிக்கும். புதிய எண்ணங்களுக்காக செயல் திட்டங்களைத் தீட்டி, அதனை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். முக்கியப் பணிகளில் இருக்கின்றவர்கள் தங்களுடைய திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

சிம்மம்:
திட்டமிட்ட காரியங்கள் உங்களுக்கு கைகூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் செய்யும் அதிரடியான செயல்களினால் உங்களுக்கு ஏற்படும் பெரும் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையிடத்தில் கொஞ்சம் அமைதியான சூழல்கள் உருவாகும். அலைச்சல் மற்றும் கோபங்கள் குறைய ஆரம்பிக்கும். எதிர்பார்த்திருந்த இடங்களில் இருந்து தனவரவுகள் உண்டாகும். வியாபாரங்களில் புதிய முதலீடுகள் செய்யும் நேரம் இது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கரும்பச்சை நிறமும் இருக்கும். அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.

கன்னி:
உங்களுடைய முழு அறிவுத் திறமையையும் வெளிப்படுத்தி, அதன் வெற்றி மூலம் பெருமை அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். எந்த ஒரு காரியத்தையும் மிக நிதானமாகச் செய்ய வேண்டும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். புதிதாக வேலை தேடுகிறவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம்அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்:
உங்களுடைய வாக்கு வன்மையினால் பொருளாதார நிலைகள் உயர ஆரம்பிக்கும். நீங்கள் இழந்த பொருள்களை மீட்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டில் ஆடை, அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். உறவினர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்புறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் ஆதரவு ஏற்படும். இதுவரை இழுபறியாக இருந்து வந்த வேலைகள் இனிதே நிறைவேற ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக தேன் நிறமும் இருக்கிறது.

விருச்சிகம்:
தொழில் ரீதியாக புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளின் ஆதரவினால் மன மகிழ்ச்சி உண்டாகும். புதிதாக வீடு, மனைகள் உண்டாவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

தனுசு:
உங்களுடைய பரம்பரை சொத்துக்களினால் சுப விரயங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளினால் உங்களுக்கு பெரும் ஆதரவு உண்டாகும். நட்பு வட்டாரத்தின் மூலம் சுப விரயங்கள் ஏற்படும். மனதின் குழப்பத்தினால் உங்களுக்கு மந்தத்தன்மைகள் உண்டாகும். வீட்டில் மனைவியிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். எதிர் விவாதங்களைத் தவிர்த்தல் நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

மகரம்:
கோவிலில் வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதினால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். தண்ணீர் சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களுக்கு மேன்மைகள் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பொது காரியங்களில் உங்களுக்கு பொதுநலன் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்:
முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாகக் கடைபிடியுங்கள். உங்களுடைய எண்ணங்களினால் மனம் சஞ்சலங்கள் உண்டாகும். மனதுக்குள் உள்ள எண்ணங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்:
விவாதங்களில் நீங்கள் நினைத்த முடிவுகள் கிடைக்கும். உங்களுடைய மேலதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு பாராட்டுக்கள் வந்து குவியும். புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களுடைய மகிழ்ச்சியான தருணங்கள் உங்களுக்கு அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications