Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
மகாலட்சுமி அனுகிரகத்தால் இந்த ராசிக்கு இன்று பணமழை தான்...
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
தொழில் சார்ந்த எண்ணங்கள் உங்களுக்கு மேம்படும். அரசு சம்பந்தப்பட்ட செயல்களில் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு சம்பந்தப்பட்ட பயணங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு பல காரியங்களைச் செய்து முடித்து, எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கைகூடி வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் பேச்சு வார்த்தைகளில் கொஞ்சம் அமைதி தேவை. சேமிப்பில் சில தைடைகள் வந்து போகும். எடுத்த செயலை செய்து முடிப்பதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். ஆன்மீக எண்ணங்கள் உங்களுக்கு மேலோங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரங்கள் தொடர்புடைய பயணங்களினால் கால தாமதமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளுடைய ஒத்துழைப்பினால் நன்மை கிடைக்கும். செய்கின்ற தொழிலில் திருப்தியான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
உறவினர்களுடைய வருகையினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். ஒப்பந்தம் சம்பந்தமான முடிவுகளை பெரியோர்களிடம் ஆலோசித்து எடுப்பது தான் சிறந்தது. உடல் ஆரோக்கியத்தில்நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புனித யாத்திரைகள் செல்வதற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உருவுாகும். எதிர் பாலினத்தவர்களால் அனுகூலமான சூழல்கள் உருவாகும். இதுவரை தடைபட்டு வந்த செயல்களால் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் உறவுகளால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொதுப்பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் நீலநிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
வீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் உள்ள பெரியுார்களிடம் கொஞ்சம் அமைதியாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ளுங்கள். மனதுக்குள் ஒருவிதமான பதற்றங்கள் உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கச் செய்யும். உடல் ஆரோக்கியத்துக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
குடும்பத்தில் சுப செய்திகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வேலை தேடுகிறவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதற்கான பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
பணிபுரியும் இடங்களில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். பெற்றோர்களின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். பிறருடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
உங்களுடைய வாக்கு வன்மையினால் லாபம் அதிகரிக்கும். செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்பில் நாட்டம் செலுது்துவீர்கள். இணைய தளப் பணிகளில் கொஞ்சம் முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமைகள் அதிகரிக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
தொழில் சம்பந்தமான புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். பொருளாதார மேன்மைக்கான முயற்சிகள் மேன்மையைத் தரும். புதிய நபர்களுடைய அறிமுகுத்தால் கொஞ்சம் கூடுதல் ஆதாயங்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
எண்ணிய செயல்களை எண்ணியபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த தனவரவுகள் கொஞ்சம் திருப்திகரமாக இருக்கும். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். இன்று புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களுடைய ஆதரவுகள் கிடைக்கும். தன வரவு மேம்படும். புதியவர்குளின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தினருன் விருந்துகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். மூத்த சகோதரர்குளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வாக்கு வனக்மையால் பாராட்டு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











