Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
வாரத்தின் முதல்நாள் உங்க ராசிக்கு பலன்கள் எப்படி இருக்கப்போகுது ... நீங்களே வந்து பாருங்க
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மீனம்
தர்ம காரியங்களால் புகழ் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு தானே புகழ் தேடி வரும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். இதுவரை இழுத்துக்கொண்டிருந்த முக்கியமான அலுவலகக் காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம்- இளஞ்சிவப்பு

கும்பம்
தந்தையிடம் பொறப்பாக நடந்து கொள்ள வேண்டிய நாள். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் பிறரை விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தொழில் சம்பந்தமாக அலைய வேண்டியிருக்கும். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். சுமாரான பலன்கள் கிட்டும் நாளாகவே அமையும். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை நிறம்.

மகரம்
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வழக்ககளில் எதிர்பார்த்த முடிவுகள்கிடைப்பதில் கால தாமதமாகும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனத்துடன் கையாளுங்கள். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் தேவை. அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம்- இளம்பச்சை.

தனுசு
வாரிசுகளின் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். போட்டிகளில் வெற்றி கிட்டும் நாள். இளைய சகோதரர்களிடம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும் நாள். யாகங்களில் கலந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம்- ஆரஞ்சு நிறம்.

விருச்சிகம்
வீடு, மனைகளால் சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவால், சாதகமான சூழல் உண்டாகும். பேச்சுத் திறமையால் லாபம் உண்டாகும். சுய தொழிலில் மேன்மை உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 1
அதிர்ஷ்ட நிறம்- இளம்பச்சை

துலாம்
நீண்ட நாட்களாக, செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த காரியத்தை உடனடியாக செய்து முடிப்பீர்கள். இதுவரை இருந்து வந்த காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறையும். தொழில் முன்னேற்றுத்துக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயரதிகாரிகளின் உதவியால், தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 7
அதிர்ஷ்ட நிறம்- பல வண்ண நிறங்கள்

கன்னி
தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் அமையும். பயணங்களால் பலன் கிட்டும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம்- அடர்பச்சை.

சிம்மம்
தொழிலில் புதிய யுக்திகளைக் கையாண்டு, லாபம் அடைவீர்கள். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்துகளில் பங்கேற்பீர்கள். மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கும். அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்

கடகம்
கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாக்கு வன்மையால் லாபத்தை அடைவீர்கள். புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள். அந்நியர்களால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூா பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம்- மிதமான கறுப்பு

மிதுனம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும்.நண்பர்களுடன் கூடிப்பேசி, மகிழ்வீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் ஏற்படும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 7
அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை

ரிஷபம்
கலை அறிவு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணங்களால், அனுகூலம் உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் பங்கு கொள்வீர்கள். பொதுத் தொண்டின் மூலம், கீர்த்தி உண்டாகும். பொறுப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம்- ஆரஞ்சு நிறம்

மேஷம்
வர்த்தகப் பணியில் உள்ளவர்களுக்கு லாபம் உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். நீர் வழி தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் இழந்த பொருள்கள் மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - வடமேற்கு, அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம்- சாம்பல் நிறம்



Click it and Unblock the Notifications