Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இன்னைக்கு ஆடி வெள்ளி... உங்க ராசிக்கு என்னென்ன பலனைத் தரப்போகுது?...
இன்று 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஆடி வெள்ளியான இன்று என்னென்ன பலன்கள் உண்டாகப் போகின்ற என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்று எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
பணியில் உயர் அதிகாரிகளுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். அரசாங்கத் தரப்பிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த எல்லா உதவியும் உங்களுக்குக் கிடைக்கும்.உடன் பணிபுரிகின்ற ஊழியர்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும். மற்றவர்களிடம் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி வகையைச் சேர்ந்த உறவினர்கள் வீட்டுக்கு வருவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
தொழிலில் நீங்கள் இதுவரை இழந்த பொருள்களை முழுவதும் மீட்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். தொழிலில் உங்களுடைய வழக்கமான வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். வெகு நாளாக தடைபட்டு வந்த காரியங்கள் யாவும் சிறப்பாக நிறைவு பெறும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். செய்கின்ற தொழிலில் புதிய ஆட்களுடைய தலையீடுகளும் அறிமுகங்களும் உண்டாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற வழியில் லாபங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
சுய தொழில் செய்கின்றவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்தது போலவே நல்ல லாபம் உண்டாகும். பணியில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் நீங்கள் புசுவதற்கும் பொது மக்களிடம் பெரும் ஆதரவுகள் உண்டாகும். வேள்விகளில் கலந்து கொண்டு புண்ணியம் பெறுவீர்கள். வெளியூா வேலை வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து கொண்டிருந்தவர்கள் நினைத்தபடி உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். பிரபலமான நபர்களுடைய உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளுடைய உதவிகளின் மூலமாக தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். வியாாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவினால் உங்களுக்கு சாதகமான நிலை உருவாகும். உங்களுடைய வாக்குத் திறமையினால் லாபம் உண்டாகும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
வெளியூா் சம்பந்தப்பட்ட தொழில் முயற்சிகளில் லாபம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்த எண்ணங்களை செயல்முறைப் படுத்துவீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெறுவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வேள்விகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உங்களுடைய எண்ண ஓட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
மனதில் இதுவரை இருந்து வந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். பொது காரியங்களில் உங்களுக்கு பிறருடைய ஆதரவு கிடைக்காது. வீட்டில் குழந்தைகளின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வாகனங்கள் மூலம் சில சுப விரயச் செலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. தொழில் பங்குதாரருடைய ஆதரவினால் தொழில் அபிவிருத்தி ஏற்படும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம்அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
வீட்டில் உள்ளவர்களின் அனைவருடைய ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். வீட்டில் பெற்றோருடைய ஆதரவு உங்களுக்கு இருப்பதார் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். சர்வதேச வணிகத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
நண்பர்களுடைய உதவியினால் தொழிலில் உங்களுக்கு சாதகமான நிலையே உண்டாகும். வானனப் பயணங்களின் மூலமாக பொருளாதார லாபங்கள் உண்டாகும். உங்களுடைய பழைய கடன்களை அடைப்பதற்கான முயுற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர்ந்த பதவியில் இருக்கின்றவர்களுடைய நட்பும் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உறவினர்களால் உங்களுடைய லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
நிர்வாகம் சம்பந்தப்பட்ட புதிய புதிய முடிவுகளினால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். செய்கின்ற தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார லாபம் உங்களுக்குக் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளினால் உங்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு உங்களுடைய உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக பண உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களை கையாளுகின்ற போது, கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும். நண்பர்களுடைய உதவியினால் உங்களுடைய தொழிலை அடுத்த நிலைக்கு அபிவிருத்திக்கு எடுத்துச் செல்வீர்கள். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
எதிர் பாலினத்தவரால் உங்களுக்குப் பெரும் ஆதாயம் ஏற்படும். உங்களுடைய கவனக் குறைவினால் சிறிய அவப்பெயர் நேரிடலாம். வர்த்தகம் சம்பந்தப்பட்ட துறைகளில் உங்களுக்கு அனுகூலங்கள் ஏற்படும். உங்களுடைய பழைய கடன்களை அடைப்பதற்கான பொருளாதார வரவு உங்களுக்குக் கிடைக்கும். உறவுகளின் மூலம் வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
வீட்டில் உள்ள பிள்ளைகளிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்வது அவசியம். நீங்கள் எடுத்த காரியத்தை மிகவும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பாராத திருமண வரன்களால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய பணியில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் உங்களுக்கு கொஞ்சம் மந்தத் தன்மை ஏற்படும்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











