Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
இந்த ராசிக்காரர் இன்னைக்கு பெரிய லாபம் பார்க்கப்போறார்... புதையல்கூட கிடைக்கலாம்...
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. எது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷம்
தொழில் சம்பந்தமான முதலீடுகளில் பெரியோர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நல்லது. யாரிடமும் வாக்குறுதிகளைக் கொடுத்து விடாதீர்கள். எவ்வளவு வரவு இருக்கிறதோ அதே அளவுக்கு செலவும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாாக இருங்கள். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல்களும் அதனால் சோர்வும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 9, அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட நிறம் மயில்நீலம்.

ரிஷபம்
உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் புதிய முயுற்சிகளைக் கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க கொஞ்சம் காலதாமதமாகும். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுத்திறன் பெரும் பாராட்டு பெறும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் மூலம் அதிக லாபம் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் அமைதியைக் கடைபிடியுங்கள். தொழிலில் லாபம் கொஞ்சம் மெதுவாகக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 4, அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட நிறம் காவி.

மிதுனம்
சுயதொழிலில் நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு பெரும் லாபம் உண்டாகும். மனதில் தோன்றும் கவலைகள் நீங்கும். நிலம் வாங்கும் யோகம் வரும். பிரபலமான ஆட்களின் உதவி கிடைக்கும். விவாதங்களின் மூலம் புகழையும் நன் மதிப்பையும் பெறுவீர்கள். தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு போதிய உதவிகளும் ஆதாயங்களும் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் எண் 5, அதிர்ஷ்ட திசை தென்கிழக்கு, அதிர்ஷ்டம் தரும் நிறமாக பிங்க் நிறமும் இருக்கிறது.

கடகம்
தொழிலில் இதுவரை இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அமைதியாக நடந்து கொள்வது அவசியம். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் செயல்படுவது அவசியம். பணியிடத்தில் நல்ல சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்
புண்ணிய வேள்விகளால் நற்பேறுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். நண்பர்களின் உதவியால் தொழிலில் சாதகமான சூழல் உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான ஆயுத்தப்பணிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுக்கு அதிாஷ்டத்தை தரும் திசையாக தெற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
பொது இடங்களில் புதிய நண்பர்களிடம் உங்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும். உடன் பிறந்த சகோதரர்களால் ஆதாயங்க்ள ஏற்படும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல்கள் ஒரு முடிவுக்கு வரும். வீண் கவலைகள் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்டம் தரும் எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கப்போகிறது.

துலாம்
தொழிலில் தேவையில்லாத அலைச்சல்க்ள உண்டாகும். அது மன சோர்வை உண்டாக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய திசையாக வடமேற்காகவும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
தொழில் ரீதியாக உங்களுடைய செல்வாக்கு உயரும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். பதவி உயர்வு கிடைப்பதற்கான முயற்சிகள் உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கலைஞர்களுக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 2 ம் அதிர்ஷ்டத்துக்கு உரிய திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக, ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

தனுசு
பணியில் உள்ள பல்வேறு பிரச்னைகளை சுமூகமாக முடிப்பதற்கான முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் உண்டாகும். வாகனப் பயணங்களால் மேன்மை உண்டாகும். அரசாங்க உதவிகள் பெறுவதில் கால தாமதம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக, கிழக்கு திசை அதிர்ஷ்ட திசையாகவும் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கப்போகிறது.

மகரம்
வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி அடைவீர்கள். பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்பபுகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீல நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் உதவிகளால் தொழிலில் உண்டான பிரச்னைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவு செய்வீர்கள். நிர்வாகப் பொறுப்பில், இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கப் போகிறது.

மீனம்
கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் கலந்து கொண்டு, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகளால் பெருமைகள் அடைவீர்கள். திருமணத்துக்கு வரன் தேடப்படுபவர்குளுக்கு சுப செய்திகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சாதகமான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











