Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...!
இன்று இந்த ராசிக்காரருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியும் அதிர்ஷ்டமும் காத்திருக்கு... அட உங்க ராசிதாங்
ஒருவர் ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது.சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில்
ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம். அந்த ஜோதிடத்தின் மூலம் நாம் வாழ்க்கையில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்பது வரை மிகத் தெளிவாக ஜோதிடத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
ஜோதிடம்
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அதனால் எந்த விஷயத்திலும் நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நமக்கு நிச்சயம் தான். நம்பிக்கை இல்லையென்றால் அதைப்பற்றி சிந்தித்து நம்முடைய நேரத்தைக் கடத்தக்கூடாது. ஒரு விஷயத்தின் மீதான நம்பிக்கைத்தன்மை அந்த விஷயத்தின் முழுமையை நமக்குப் புரிய வைக்கும்.

மேஷம்
பயணங்களின் மூலமாக லாபம் உண்டாகும். புதிய ஆடை சேர்க்கையும் ஆபரணச் சேர்க்கையும் உண்டாகும். ஆன்மீகத்தில் மனம் லயித்துப் போவீர்கள. மன மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் பெரியோர்களின் ஆசிர்வாதமும் ஆதரவும் கிடைக்கும். அப்பாவின் வழி உறவினர்கள் மூலம் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டாகும். அதனால் சேமிப்பும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 7 ம் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

ரிஷபம்
தொழிலை அபிவிருத்தி செய்ய முயற்சி செய்வீர்கள். இதற்கான முழு ஒத்துழைப்பும் உங்களுடைய கூட்டாளிகளிடம் இருந்து கிடைத்தாலும் கூட, உங்களுக்கு தான் சுப விரயச் செலவு உண்டாகும். அதற்காக கவலைப்படத் தேவையி்லலை. நிச்சயம் செலவழித்ததை விட பல மடங்கு லாபம் கிடைக்கும். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்களுக்கு ஆதரவு கிடைக்கும். மனதில் இதுவரை இருந்து வந்த வீண் கவலைகள் குறையும். உங்களுடைய தொழிலில் புதிய நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 5ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மிதுனம்
இதுவரை தடைபட்டு வந்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய முயற்சிக்கு உரிய வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். பெற்றோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டகும். உங்களுடைய ஒட்டுமொத்த திறமைகளையும் வெளிப்படுத்துவீர்கள். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட எண் 2, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை நிறம்.

கடகம்
தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் பெருகும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பணிகள் சிறப்பாக நடைபெற்று முடிய சற்று கால தாமதமாகும். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரவிருக்கிற எண் 1 ஆகவும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சும் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் இருக்கப்போகிறது.

சிம்மம்
உங்கள் வீட்டுக்குப் புதிய உறவினர்கள் வந்து சேருவார்கள். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி
இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்னைகளை உடனே தீர்க்க போதுமான முயற்சிகளை
மேற்கொள்வீர்கள்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.திறமைகளை வெளிப்படுத்தும் நாள். இன்று கிழக்கு திசை உங்களுக்கு அதிஷ்டம் தரும் திசையாகவும் 9 அதிர்ஷ்ட எண்ணாகவும் ஆரஞ்சு அதிர்ஷ்டம் தரும் நிறமாகவும் அமையும்.

கன்னி
கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகாது. பொறுமை தேவைப்படும் நாள். எந்த விஷயமும் வெற்றி உண்டாக கால தாமதமாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையோடு நடந்து கொள்ளுங்கள். உறவினர்களால்
அலைச்சல்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - பச்சைநிறம்

துலாம்
குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சாதுர்யமான பேச்சுக்களால் தன லாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மையடையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணியாளர்கள் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படவும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - அடர் மஞ்சள்

விருச்சிகம்
பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக
ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும்.
விவசாயிகளுக்கு பாசன வசதியால் லாபம் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான நாள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்

தனுசு
உடன் பிறந்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன்,
மனைவிக்கிடையே இதுவரை இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். புனித
யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். குலதெய்வ வழிபாடு அவசியம். ஆரோக்கியத்தில்
முன்னேற்றம் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிஷ்ட திசை - தெற்கு, அதிஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

மகரம்
நண்பர்களின் மூலம் நிரந்தர வருமானத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் நிம்மதியடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்

கும்பம்
பூர்விக சொத்துக்களைக் கொண்டு புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்

மீனம்
உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பயணங்களால் தேவையில்லாத விரயச் செலவுகள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை



Click it and Unblock the Notifications











