For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் ஒன்னு தேடிவரும்...

|

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள். அப்படி இன்றைக்கு மனமகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் சிலரைத் தேடி வரும். எந்த ராசிக்காரருக்கு அப்படி இன்னைக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் ஒன்னு தேடிவருதுன்னு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இதுவரை தள்ளிப் போய்க்கொண்டும் தடைபட்டுக் கொண்டும் இருந்த திருமணப் பேச்சுவார்த்தைகள்கைகூடி வரும் நேரம். நண்பர்களின் பெரும் ஆதரவுடன் தொழிலில் முன்னேற்றமான சூழல் அமைய வாய்ப்புண்டு. அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழில் விருத்திக்காக கேட்டு எதிர்பார்த்து காத்திருந்த இடத்தில், பண உதவிகள் கிடைக்கும். பூாவீக சொத்துக்கள் விவகாரத்துக்காக சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் உங்களுடைய திறமையான பேச்சுக்களின் மூலமாக, லாபம் உண்டாகும் நாளாக இன்று அமையும். அதேசமயம் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையால் அவப்பெயர் உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது. உங்கள் நாக்கில் இன்று சனி உட்கார்ந்து தாண்டவம் ஆடப்போறார். பேசும்போது மிகவும் நிதானமாகப் பேசுங்கள். போதுமான அளவு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். வாதத்திறமையால் பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 6, அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு.

மிதுனம்

மிதுனம்

இன்று ஒரே கூத்தும் கொண்டாட்டமுமாக நண்பர்களுடன் ஜாலியாக இருப்பீர்கள். வீட்டில் உள்ளவர்களின் குறிப்பாக, மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். தெய்வீகப் பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். வீட்டில் உள்ள பெற்றோர்களின் ஆதரவால் தொழில் விருத்திக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சிகளைக் கொஞ்சம் தள்ளி வைப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 9, அதிர்ஷ்டதிசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம் ஊதா நிறம்.

கடகம்

கடகம்

பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு மன நிம்மதி உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தொழிலில் இன்று நல்ல வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழில் லாபம் உண்டாகும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு கச ஊழியர்களுடைய ஒத்துழைப்புகள் கிடைக்கும். மற்றவர்கள் மத்தியில் உங்களுடைய செல்வாக்கு உயரும் நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 3,அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட நிறம் நீலநிறம்.

சிம்மம்

சிம்மம்

வேலை செய்யுமிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு அமோகமாகக் கிடைக்கும். உங்களுடைய சிந்தனைகள் புதுவிதமாக மெருகேறும். தொழிலில் பல புதிய திட்டங்களையும் சோதனைகளையும் முயற்சி செய்து பார்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் தனவரவும் லாபமும் உண்டாகும். பணியில் உடன் பணிபுரிபவர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்ப்பது வீண் பிரச்னைகளைத் தீர்க்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண் 9, அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

கன்னி

கன்னி

தொழிலில் நீங்கள் சேர்த்த புதிய கூட்டாளிகளால் போதிய அளவு லாபத்தைப் பெறுவீர்கள். வேள்வி மற்றும் கடவுள் வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். மனமகிழ்ச்சி உண்டாகும் நாளாக இருக்கும். உங்களுடைய பேச்சுத் திறனின் காரணமாக லாபம் உண்டாகும். வீட்டில் உள்ள மனைவி மற்றும் பிள்ளைகள் உங்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள். வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆலோசனைப் பெறுவது அவசியம். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண் 6, அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட நிறம் வெளிர் பச்சை.

துலாம்

துலாம்

குடும்ப உறுப்பினர்களுடன் உட்கார்ந்து பேசுங்கள். இதுவரை இருந்துவந்த பழைய பிரச்னைகளுக்கான சரியான முடிவை எடுக்க முயற்சி செய்யுங்கள்.வெளியூா பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட பணிகளைத் தொடங்கி மேற்கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களின் போதிய ஆதரவு கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண் 3, அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு நிறம்.

விருச்சிகம்

விருச்சிகம்

மனதில் இதுவரை நினைத்து வைத்திருந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். தன்னம்பிக்கை உண்டாகும் நாள். மனதில் தோன்றும் எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் உங்களுடைய நட்பு வட்டம் விரிவடையும். விளையாட்டுத் துறையினில் உள்ளவர்கள் சாதகமான சூழலில் வெற்றியை நோக்கிப் பயணம் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 7, அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட நிறம் நீலநிறம்.

தனுசு

தனுசு

பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் மிகுந்த கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுடன்இணைந்து சுற்றுலா செல்ல திட்டம் தீட்டுவீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். கூடுதல் பணிச்சுமை உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும். பல நாட்களாக இருந்து வந்த சிக்கல்களை அமைதியாகக் கையாண்டு முடிப்பீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண் 4, உங்களுடைய அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட நிறம் பச்சை.

மகரம்

மகரம்

வீட்டில் உள்ள குழந்தைகள் மூலம் தேவையில்லாத விரயச் செலவுகள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்குளிடம் சச்சரவுகள் இல்லாமல் அனுசரித்துப் போவது நல்லது. புதிய ஆடைகள். நகைகள் வாங்கிச் சேர்ப்பீர்கள். வேலையில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் மனதில் வந்து போகும். நீங்கள் செய்ய வேண்டிய செயல்களில் கவனமாகச் செயல்பட வேண்டும். உங்களின் திறமைகளை போதிய அளவுக்கு வெளிப்படுத்துவீர்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய எண் 5, உங்களுடைய அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட நிறம் அடர் நீலம்.

கும்பம்

கும்பம்

புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற சிறந்த வேலை கிடைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். உடல் நலத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்னைகள் நீங்கி, நலம் பெறுவீர்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளிடம் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். ஆடை, ஆபரங்கள் வாங்கிக் குவிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். உங்களுக்கு புதிய நபர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். உங்களைச் சுற்றியுள்ள நண்பர்களையும் உறவினர்களையும் நன்கு புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு இதிர்ஷ்டம் தரும் எண் 7 ஆகவும் அதிர்ஷ்ட திசை மேற்காகவும் அதிர்ஷ்ட நிறம் இளம்மஞ்சளாகவும் இருக்கும்.

மீனம்

மீனம்

தொழிலில் பல புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதரவுகள் கிடைக்கும். மன தைரியம் அதிகரிக்கும். சிறப்பாக செயல்பட்டு, காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணியில் உங்களுக்கு இருக்கும் பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாக செயல்படுவீர்கள். விரும்பிய பொருள்களை வாங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண் 3 ஆகவும் அதிர்ஷ்ட திசை வடக்காகவும் அதிர்ஷ்ட நிறம் வெள்ளையாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

horoscope for 25 April 2018 | daily horoscope | astrology | astrology today | horoscope predictions

There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people.
Story first published: Wednesday, April 25, 2018, 7:05 [IST]
Desktop Bottom Promotion