இன்னைக்கு முழு சுபிட்சமும் இந்த ராசிக்காரருக்கு தான்ப்பா... நீங்க அந்த ராசி இல்லையா?...

daily horoscope 24.6.18, 24.6.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்?

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். அப்படி இன்று என்ன ராசிக்காரர்குளுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

புதிய நண்பர்களுடைய அறிமுகம் கிடைக்கும். அவர்களின் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்களும் அனுகூலமும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களின் மூலம் உங்களுடைய மனம் மகிழ்ச்சியடையும். தொழிலில் புதிய புதிய யுக்திகளைச் செயல்படுத்திப் பார்க்க வேண்டுமென்ற திட்டங்களைத் தீட்டுவீர்கள். இதுவரை இருந்து வந்த நிலத் தகராறுகள் ஒரு முடிவுக்கு வரும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும். மொத்தத்தில் உங்களுக்கு இன்று சுபிட்சமான நாளாகவே அமையும்.

ரிஷபம்

ரிஷபம்

வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொண்டால் பிரச்னையைத் தவிர்க்கலாம். உங்களுடைய வேலைகள் புதிய உத்வேகத்துடன் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். தொழிலில் இருக்கும் உங்களுடைய மறைமுக எதிரியை அடையாளம் கண்டு கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

வீட்டில் குழந்தைகளால் கலகலப்பான சூழல் நிலவும். உங்களுடைய பேச்சுத் திறமை மற்றும் நேர்மையான வார்த்தைகளால் அதிக லாபம் அடைவீர்கள். பணியிடங்களில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் நீண்ட நாள் ஆசைகளை பூாத்தி செய்து வைக்கும் வாய்ப்பு உண்டாகும். வீட்டில் உள்ளவர்களுடைய முழு ஒத்துழைப்பும் ஆதரவும் உங்களுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் இருக்கும்.

கடகம்

கடகம்

அம்மாவழி வந்த உறவினர்கள் மூலம் உங்களுடைய தொழிலுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய திறமைகளின் மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். உங்களுடைய எண்ணங்கள் மற்றும் சிந்தனையில் புதிய தெளிவு பிறக்கும். தொழில் ரீதியாக பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும். மொத்தத்தில் வாய்ப்புகளும் அதன்மூலம் லாபமும் அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

உத்தியோகத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். இதுவரை உங்களுடைய பணிகளுக்குத் தடையாக இருந்து வந்த சின்ன சின்ன விஷயங்களும் விலகும். கணவன், மனைவிக்கு இடையே கூடுதல் நெருக்கம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கிறது. மன மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கிறது.

கன்னி

கன்னி

தொழில் ரீதியாக உறவினர்களிடம் எதிர்பார்த்திருந்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபடுபவர்களும் பேரும் புகழும் அதிகரிக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் நீங்கள் நினைத்தபடியே அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலில் உங்களுக்கு பலருடைய ஆதரவுகளும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக இருப்பது 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். எண்ணங்கள் ஈடேறும் நாளாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை தானாகவே உணர்ந்து அதை நிவர்த்தி செய்வீர்கள். முக்கிய உத்தியோத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் இதுவரை இருந்து வந்த பகையை மறந்து நட்பு பாராட்டுவீர்கள். குடும்பம், நட்பு தவிர்த்து மற்ற வெளிவாட்டரங்களிலும் உங்களுடைய செல்வாக்கு உயரும். வீட்டில் பொருளுக்கு ஆபரணச் சேர்க்கையும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும். புதிய நட்புகளின் மூலம் உங்களுடைய தேவைகள் நிறைவேறும் நாளாக இருக்கும்.

தனுசு

தனுசு

உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். அறிமுகம் இல்லாதவர்கள் மூலமாக மன வருத்தங்கள் உண்டாகும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களால் பணிகளில் சில தடங்கல்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமாக பல புதிய யுக்திகளை கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வீட்டுக்கு புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். ஆக மொத்தத்தில் சிறுசிறு மன வருத்தங்களும் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்னையும் வரும்.

மகரம்

மகரம்

எந்த வேலை செய்தாலும் அதில் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் பேசுகிறபோது பேச்சில் கவனமும் நிதானமும் வேண்டும். பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்கள் புதிய முதலீடுகளில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வாகனங்களில் பயணம் செய்யும் போது, கொஞ்சம் விழிப்புணர்வோடு இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும். பணியிலும் பேச்சிலும் கொஞ்சம் கவனம் தேவை.

கும்பம்

கும்பம்

மனதில் உண்டாகும் சஞ்சலங்கள் மனதில் வந்து போகும். நீங்கள் இயல்பாக இருந்தாலும் உங்களுடைய நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம். தொழில் வகையான உங்களுக்கு இருந்து வந்த போட்டிகளைச் சமாளிப்பீர்கள். நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் எஞ்சிய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும். நிதானமாகவும் அமைதியாகவும் இருந்தால் வெற்றி உண்டாகும்.

மீனம்

மீனம்

நீங்கள் இதுவரை இருந்து வந்த தொழிலையும் தாண்டி, சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுக்க முயற்சி செய்வீர்கள். பணி நிமித்தமான பயணங்களில் கவனம் தேவை. பெரியவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் உள்ள பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கின்ற போது நிதானம் வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும். ஆக மொத்தத்தில் இன்று எந்த திட்டம் போட்டாலும் கொஞ்சம் கவனமாக போடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, June 24, 2018, 9:27 [IST]
Desktop Bottom Promotion