Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
எந்த ராசிக்காரர்கள் யார் யாரை நம்பலாம்?... யார் உங்களிடம் எப்படி நடந்துகொள்வார்கள்...
ஒருவர் ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில்
ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம். அந்த ஜோதிடத்தின் மூலம் நாம் வாழ்க்கையில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்பது வரை மிகத் தெளிவாக ஜோதிடத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

ஜோதிடம்
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அதனால் எந்த விஷயத்திலும் நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நமக்கு நிச்சயம் தான். நம்பிக்கை இல்லையென்றால் அதைப்பற்றி சிந்தித்து நம்முடைய நேரத்தைக் கடத்தக்கூடாது. ஒரு விஷயத்தின் மீதான நம்பிக்கைத்தன்மை அந்த விஷயத்தின் முழுமையை நமக்குப் புரிய வைக்கும்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
எந்த ஒ செயலையும் நிதானத்துடன்செய்து முடிக்க வேண்டும். தேவையற்ற வீண்அலைச்சல்கள் வந்து போகும். இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும். அரசு அதிகரிகளின் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் ஏற்படும். புதிதாக வேலை தேடுபவகளுக்கு சுப செய்திகள் வந்து சேரும். சுய தொழில் மேற்கொள்வதற்கான மேன்மையான சூழல்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2ம்அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
வெளிநாட்டு வேலைக்காக நீங்கள் எடுத்த முயுற்சிகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். உயர் கல்வி படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். கடல் வழி பயணங்களால் நன்மைகள் உண்டாகும். கால்நடைகள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் ஏற்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய பயணங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9ம் அதிர்ஷ்ட திசையக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பணியில்இதுவரை இருந்து வந்த இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். வெளியில் ஏதாவது முக்கியமான பொருள்களை எடுத்துச் சென்றால் அதில் கொஞ்சம் கவனமாக இருங்கள். பழைய நினைவுகளால் மன வருத்தங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
கலை சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். அரசாங்கத்தின் மூலம் போதிய அனுகூலங்கள் உண்டாகும். இறை வழிபாட்டில் உங்களுடைய மனம் லயிக்கும். தொழிலில் சிறு சிறு அலைச்சல்கள் இருந்தாலும் லாபம் உண்டாகும். நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திவையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அதனால் ஒருவயொருவர் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். யாருக்கேனும் வாக்குறுதிகள் கொடுக்கும் முன் நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். சுப செய்திகள் வந்து சேரும். அதேசமயம் சுப விரயங்களும் ஏற்படும். உங்களுடைய வாதத் திறமையினால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலமாக அனுகூலமான சூழல்கள் உண்டாகும். பிறருக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதநிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
உங்களுடைய எதிர்காலம் குறித்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர்களுடைய ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் தெளிவு பெறும். வம்பு, வழக்குகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான முயுற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளி வட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார உதவிகள் நண்பர்கள் மூலமாகக் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களுடைய நம்பிக்கைகளை தனதாக்கிக் கொள்வீர்கள். வீட்டில் குழந்தைகள் உங்களுடைய எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். இனறு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
மனைகளின் மூலமாக லாபங்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் புதிய அணுகுமுறைகளை கையாள்வீர்கள். உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
நினைத்த செயலை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த தன வரவுகளால் நன்மைகள் உண்டாகும். தொழில் போட்டிகளை மிக எளிதாக சமாளிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எந்த காரியத்தையும் தாமதமாகவே செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிலுவையில் இருந்து வந்த பணவரவுகள் வசூலாகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும்கவர்ந்திழுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
உங்களுடைய தேவைகள் யாவும் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். எதிர்பாராத பண வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் புத்துணர்ச்சி அதிகரிக்கும். அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். எதிர்பாலினத்தவரால் அனுகூலங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
சுப செய்திகள் வந்து சேரும். தொழிலில் பிரபலமானவர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடைய நம்பிக்கைக்கு ஆளாவீர்கள். அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உங்களிடம் மிகுந்த அனுசரணையோடு நடந்து கொள்வார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீல நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











