Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
இன்று பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்?
சிலருக்கு இன்று வேலை வெளுத்து வாங்கும். ஆனால் சிலருக்கோ என்ன செய்வதென்றே தெரியாமல் ஜாலியாக படுக்கையில் இருந்து எழுந்திருக்காமலே இருப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் வெறும் சோம்பேறித்தனம் என்று நீங்கள் நினைத்தால் தவறு. இதற்கும் இவர்கள் இப்படி ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம். அந்த ஜோதிடத்தின் மூலம் நாம் வாழ்க்கையில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்பது வரை மிகத் தெளிவாக ஜோதிடத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
ஜோதிடம்
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அதனால் எந்த விஷயத்திலும் நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நமக்கு நிச்சயம் தான். நம்பிக்கை இல்லையென்றால் அதைப்பற்றி சிந்தித்து நம்முடைய நேரத்தைக் கடத்தக்கூடாது. ஒரு விஷயத்தின் மீதான நம்பிக்கைத்தன்மை அந்த விஷயத்தின் முழுமையை நமக்குப் புரிய வைக்கும்.

மேஷம்
கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகாது. பொறுமை தேவைப்படும் நாள். எந்த விஷயமும் வெற்றி உண்டாக கால தாமதமாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையோடு நடந்து கொள்ளுங்கள். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - பச்சைநிறம்

ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சாதுர்யமான பேச்சுக்களால் தன லாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மையடையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணியாளர்கள் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படவும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - அடர் மஞ்சள்

மிதுனம்
பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு பாசன வசதியால் லாபம் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான நாள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்

கடகம்
உடன் பிறந்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இதுவரை இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். குலதெய்வ வழிபாடு அவசியம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிஷ்ட திசை - தெற்கு, அதிஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

சிம்மம்
நண்பர்களின் மூலம் நிரந்தர வருமானத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் நிம்மதியடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்

கன்னி
பூர்விக சொத்துக்களைக் கொண்டு புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்

துலாம்
உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பயணங்களால் தேவையில்லாத விரயச் செலவுகள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை

விருச்சிகம்
சபை தலைவராக வீற்றிருக்கும் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். மனக்கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்களில் லாபம் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு

தனுசு
உடல் ஆரோக்கியத்தில் அவசியம் கவனம் தேவை. பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நல்லது. தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளினால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். அதற்கேற்ப லாபமும் உண்டு. இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிஷ்ட எண் - 7, அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்.

மகரம்
தொழில் சம்பந்தமாக நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடனுதவிகள் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள்சேர்க்கை, வாகனச்சேர்க்கை உண்டாகும். பொது தொண்டில் ஈடுபடுபவர்கள் பிறரால் புகழப்படுவீர்கள். . அறிவுத்தேடல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.. பணியில் மேன்மை உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

கும்பம்
உங்களுடைய திறமையான வாக்குவாதத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். நண்பர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உங்களுடைய அன்றாட செயல்பாடுகளில் இன்று நிறைய மாற்றங்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - இளம் ஆரஞ்சு

மீனம்
வாணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதையும் தெளிவாக எடுத்துரைக்கின்ற உங்களுடைய பேச்சுத்திறனால் புகழ் உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். பொருள்களைக் கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும். அதிர்ஷ்ட திசை - வடக்காகவும் அதிஷ்ட எண் - 1ஆகவும், அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications