Latest Updates
-
Diwali 2026: பட்டாசுப் பொறிகள் கண்களில் பட்டால் இந்தத் தவறுகளைச் செய்யாதீர்கள்! கண் மருத்துவர் எச்சரிக்கை! -
Diwali 2026: தீபாவளி பட்டாசு தீப்பொறி சருமத்தில் பட்டால் என்ன செய்வது? மருத்துவர் கூறும் முதலுதவி வழிகள்! -
குண்டூர் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
தீபாவளி ஸ்பெஷல் பாய்வீட்டு மட்டன் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 07, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிசயங்கள் நடக்கும் நாளாக இருக்குமாம் -
சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைந்திருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுதாம் - உங்க ராசி என்ன -
தீபாவளிக்கு இந்த பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணியை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
Skin Care: தக்காளி எப்படி உங்கள் சருமத்தை கண்ணாடி போல ஜொலிக்க வைக்கும் தெரியுமா? -
வார ராசிபலன் (08 November 2026-14 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
தீபாவளி ஸ்பெஷல் கேரளா ஸ்டைல் மனோகரம் முறுக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இனிப்பா சூப்பரா இருக்கும்
இன்னைக்கு வாயை கொடுத்தே வாங்கிக் கட்டிக்கப்போற ராசிக்காரர் நீங்க தான்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் சிலருக்கு காபியில் தொடங்கும். சிலருக்கு செய்தித்தாளில் ராசிபலன் பார்த்த பின்பு தான் எல்லாமே. அப்படிப்பட்டவர்களுக்காக இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோமா... அப்படி இன்னைக்கு மீன ராசிக்காரர்கள் எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத விவாதங்களையும் முன் பின் தெரியாத புதிய ஆட்களிடம் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
சர்வதேச வாணிகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறவர்கள் பெரும் லாபம் அடைவார்கள். பெரியவர்களுடைய ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. புதிய நட்பு வட்டாரங்கள் உருவாகும். உறவினர்களுடைய ஆதரவினால் உயர்வு உண்டாகும். வாகனப் பயணங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும்.இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
வேலையில் இதுவரை இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கி, சுறுசுறுப்பு அதிகரிக்கும். தாய் பற்றிய கவலைகள் வந்து போகும். புதிய புதிய கண்டுபிடிப்புகளின் உதவியினால் தொழிலில் பல புதிய வாய்ப்புகள் தோன்றும். பணி சம்பந்தமான இட மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களில் உறவினர்களுடைய ஆதரவினால் அனுகூலங்கள் உண்டாகும். உயர் பதவியில இருப்பவர்களுடைய நட்புகள் அதிகரிக்கும். வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான பண உதவிகள் கைக்கு வந்து சேரும். மனைவியின் மூலம் அனுகூலமான நிலை ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
உங்களுடைய பெருந்தன்மையான செயல்பாடுகளால் அனைவராலும் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவில் புதிய மேம்பாடுகள் உண்டாகும். திருமண வரன் தேடுகின்றவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் சார்நு்த பயணங்களின் மூலமாக அனுகூலங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
குடும்பத்தில் உள்ள புதிய நபர்களின் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடைய விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகளைத் தீர்க்க முழு முயற்சி செய்வீர்கள். செய்கின்ற தொழிலில் எதிர்பார்த்த லாபங்கள் ஏற்படும். நிர்வாக ஆற்றல் முழுமையாக வெளிப்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 4 ஆகவும் அதிர்ஷ்ட திசை மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் சுமூகமான நிலை உண்டாகும். செய்கின்ற வேலையில் நிம்மதியான சூழல்கள் உருவாகும். குழந்தைகளால் மேன்மை உண்டாகும். கலை சம்பந்தப்பட்ட துறையில் அறிவு மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கருநீல நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் நற்பெயர்கள் உண்டாகும். நினைத்த காரியங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும். சக ஊழியர்களுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். இறை வழிபாட்டில் மனம் அதிகம் ஈடுபடும். பணியில் புதுப்புது பணி வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
போட்டித் தேர்வுகளில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். நீங்கள் எடுத்துச் செல்லுகின்ற உடைமைகளின் மீது கவனமாக இருங்கள். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
கலைஞர்களுக்கு சாதகமான செய்திகள் வந்து சேரும். புதிய சூழலை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்நியர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பணியில் எதிர்பாராத தடைகள், தாமதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கல்வி அறிவினால், மேன்மையான சூழல்களும் மதிப்புகளும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெண்மை நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
அரசு சம்பந்தப்பட்ட செயல்களில் அனுகூலங்கள் ஏற்படும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். செய்கின்ற செயல்களுக்காக உங்கள் மீது பிறருக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நண்பர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான நிலை உண்டாகும். கலகலப்பான சூழலால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதில் சிறிது கால தாமதங்கள் உண்டாகும். சக ஊழியர்களுடைய வீண் விவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது. அக்கம் பக்கத்தில் உள்ள சாதகமற்ற சூழல் உருவாகும். விளையாட்டு வீரர்களுக்கு உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சில மனக்கசப்புகள் உண்டாகும். புத்திரர்களுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பெரியோர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலில் சிறிது கவனம் தேவை. பல தடைகளைக் கடந்து நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
