Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
இன்னைக்கு ஊரே பாராட்டப் போற ராசிக்காரர் இவர் தான்... இது உங்க ராசிதானே?...
நாம் ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப் போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. இதை சிலரால் நம்பாமல் இருக்கவே முடியாது. இன்று உங்களுடைய நாள் எப்படி இருக்கப் போகிறது என்ற பார்ப்போம்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
உடல் நலத்தில் இதுவரைக்கும் இருநு்து வந்த இன்னல்கள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வேலை வாய்ப்புகளில் இதுவரை இருந்து வந்த தடைகள் எல்லாம் அகலும். பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். செய்கின்ற வேலைகளில் பதட்டங்கள் ஏதுமின்றி, கவனத்துடன் செயல்படவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்து பிரச்னைகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களுடைய உதவியினால் தொழிலில் வாய்ப்புகள் அமையும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். பொது இடங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் நீல நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
உங்களுடைய சிந்தனையின் போக்கில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சற்று பொறுமையைக் கடைபிடியுங்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து முன்னேற்றங்கள் உண்டாகும். மூத்த உடன் பிறப்புகளின் மூலம் உங்களுக்கு சாதகமான சூழல் கிடைக்கும். இணையதளம் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் மேன்மையான சூழல்கள் உருவாகும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நிர்வாகத்தில் செய்யும் மாற்றங்களில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
உங்களுடைய உடமைகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தந்தையின் வழி உறவினர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். பணியில் பிறரின் தலையீடுகளால் மனக்கசப்பு நேர வாய்ப்புகள் உண்டு. உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
பொது சேவையில் ஈடுபடுகிறவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். பிறருடைய பிரச்னைகளில் தலையிடுவது உங்களுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளினால் பெரியோர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டு எந்த முடிவுகளையும் எடுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையும் மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
மாணவர்களுக்கு முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையும். கூட்டாளிகளால் பெருமைகள் உண்டாகும். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்கு கிடைக்கும். வர்த்தக வியாபாரங்களில் பண வரவு தாராளமாகக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையும் தெற்கு திசையும அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
நீண்ட நாட்களாக உங்களுக்கு தடைபட்ட செயல்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனம் சஞ்சலத்தினால் நெருக்கமானவர்களிடம் மனக்கசப்பு உண்டாக நேரிடலாம். போட்டித் தேர்வுகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
புதியவர்களுடைய அறிமுகத்தினால் லாபங்கள் உண்டாகும். வாக்கு வன்மையின் காரணமாக பிறரால் புகழப்படுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும்போது சிந்தித்து செயல்படுங்கள். குழந்தைகளால் அனுகூலமான பயன்கள் உண்டாகும். வீட்டில் பொருள் சேர்க்கையும் ஆபரணச் சேர்க்கையும் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
தன வரவுகள் கிடைக்கும். நீர் நிலைகளில் சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். செயல்பாடுகளுடைய வேகம் மிக அதிகமாகும். உறவினர்களுடைய அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனைகளில் புதிய வீடுகள் கட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களிடம் நற்பெயர் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
தொழிலில் உங்களுடைய மறைமுக எதிர்ப்புகளை எளிமையாக சமாளித்து சிறப்பாக செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வீடு, மனை சம்பந்தமான பிரச்னைகளில் உங்களுக்கு சுமூகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்களினால் அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
புதிய நபர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்கவும். எளிதில் முடியும் என்று எதிர்பார்த்திருந்த பணிகள் கால தாமதமாகும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் வந்துசேர கால தாமதமான சூழல்கள் இருக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











