Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
இன்று பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் தெரியுமா?...
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். தொழிலில் புதுவித சலுகையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சாதுர்யமான புச்சுகளால் கீர்து்தி உண்டாகும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 7, அதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்.

ரிஷபம்
தேவையற்ற எண்ணங்களால் மனதில் குழப்பம் உண்டாகும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம் - காவி நிறம்.

மிதுனம்
தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உடன் பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிறரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனத்துடன் செயல்படவும். அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை.

கடகம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் அமையும். புதிய இடங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 8, அதிர்ஷ்ட நிறம் - நீல நிறம்.

சிம்மம்
இழந்த பொருள்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். புாட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகளால் சாதகமான முடிவுகள் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 8, அதிர்ஷ்ட நிறம் - மயில் நீலம்.

கன்னி
தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கி முன்னேற்றமான சூழல் உண்டாகும். அயல்நாட்டுப் பயணங்களால் சாதகமான நிலை உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்குவீர்கள். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 7, அதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்.

துலாம்
எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடை வளர்ப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்.

விருச்சிகம்
செய்யும் தொழிலில் உங்களின் மதிப்பு கூடும். ஆராய்ச்சிப் பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இளைய உடன் பிறப்புகளால் சாதகமான பலன் கிடைக்கும். ஆகாய மார்க்க தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்.

தனுசு
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம்கிடைக்க வாய்ப்புண்டு. செய்யும் தொழிலில் அந்த துறை சார்நு்தவர்களிடம் உங்களுடைய செல்வாக்கு உயரத் தொடங்கும். அரசு சார்பான பணிகளில் இதுவரை இருந்துவந்த தாமதங்கள் விலகும். தாய்வழி உறவினர்களா்ல சுப செய்திகள் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். எண்ணிய லாபம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை.

மகரம்
வாகனங்களால் லாபம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் கையாளும் புதுவிதமான யுக்திகளால் தொழிலில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம் - இளம் சாம்பல்.

கும்பம்
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனதில் தேவையற்ற கவலைகள் உண்டாகும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வாகனப் பயணங்களின் போது தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - அடர்மஞ்சள்

மீனம்
சந்திராஷ்டமம் நடைபெறுவதால் பேச்சுகளில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். பொருளாதார நிலையில் சாதகமற்ற சூழல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்.



Click it and Unblock the Notifications
