Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இன்னைக்கு எந்த ராசிக்கெல்லாம் பிரியாணி கிடைக்கிற யோகம் இருக்கு?...
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
பூர்வீக சொத்துக்களால் சுப விரயம் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். விவாதங்களைத் தவிர்க்கவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

ரிஷபம்
வாகனப் பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் வரும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 7, அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்

மிதுனம்
சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். புாட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபட முயற்சிகள் மேற்கொள்வீர்கள். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - கருப்பு நிறம்

கடகம்
எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்

சிம்மம்
சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படவும். பயணங்களை மேற்கொள்வீர்கள். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்

கன்னி
கூட்டுத் தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

துலாம்
மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகமாகும். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்ப

விருச்சிகம்
பிள்ளைகளால் சுப விரயம் உண்டாகும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் லாபம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பூாவீக சொத்து சம்பந்தமான சுப விரயங்கள் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்

தனுசு
உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை

மகரம்
உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்களால் தனலாபம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருள்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்கவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

கும்பம்
புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்குள் புகழப்படுவார்கள். சுயதொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு லாபம் அடைவார்கள். இளைய சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்

மீனம்
பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். அறச்செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் வரும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்
ரம்ஜான் பிரியாணி யாருக்கு கிடைக்கும்?
இந்த ராசி அந்த ராசி என நீங்க எந்த ராசியாக வேண்டுமானாலும் இருக்கலாம். வருடத்தில் ஒரு நாள் கிடைக்கும் ரம்ஜான் பிரியாணி யாருக்கு தெரியுமா கிடைக்கும்?... இஸ்லாமிய நண்பர்கள் கொண்டிருக்கிற ராசிக்காரர்களுக்கும், இஸ்லாமியர்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கிற ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் ரம்மியமான ரம்ஜான் வாய்க்கும். மற்றவர்கள் மன ஆறுதலுக்காக பணம் கொடுத்து ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டுக் கொள்ள வேண்டியது தான். வெஜிடேரியன் சாப்பிடுபவர்கள் வெஜிடபிள் பிரியாணியில் உள்ள பீன்ஸையே எலும்புது் துண்டாக நினைத்து சாப்பிட்டு மகிழலாம்.



Click it and Unblock the Notifications











