Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
நாளைக்கு புரட்டாசி பிறக்குது... இன்னைக்கு எந்த ராசிக்கு சந்திராஷ்டமம் வருது தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
அரசாங்கத் தரப்பிடம் இருநு்து உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேற சற்று கால தாமதங்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் நண்பர்களிடம் தேவையில்லாத வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வந்து சேரும் சுப செய்திகளால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
உங்களுடைய பேச்சுக்களினால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். புதிய உறவுகளினால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கடல்வழிப் பயணங்களின் மூலமாக, உங்களுக்கு லாபங்கள்உண்டாகும். பெரிய பெரிய மகான்களுடைய அறிமுகம் கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்களுடைய ஆதரவினால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பிரௌன் கலர் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
சம வயதினரிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. மனைவியிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. தொழிலில் உள்ள புாட்டிகளைச் சமாளித்து வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். உடன் பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் தற்போது நிறைவேறும். இன்று உங்களுடைய நீண்ட நாள் ஆசை ஒன்று இன்று நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
உங்களுக்குள் புதிய சிந்தனைகள் தோன்றும். போட்டிகளில் ஈடுபடுகின்ற போது, கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளினால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் காணாத உறவினர்களுடைய வருகையினால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
தலைமைப் பதவியில் உள்ள அதிகாரிகளிடம் சற்று நிதானடாக நடந்து கொள்ளுங்கள். செய்யும் வேலைகளில் சற்று கவனத்துடன் செயல்படுங்கள். தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பதன் மூலமாக, பல்வேறு நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் பிள்ளைகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
வாகனப் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உண்டாகும். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்கான சூழல்கள் உருவாகும். வீட்டுக்குப் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வீடு மற்றும் மனை விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். எதிலுமே கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
உங்களுடைய எடுத்துரைக்கின்ற பேச்சுத் திறமையினால் பெரும் லாபம் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். நண்பர்களுடன் வெளியூர்ப் பயணங்களினால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் லாபம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தன லாபங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
பெரியோர்களுடைய முழு ஆதரவினால் உங்களுடைய பரம்பரை சொத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் சற்று குறையும். உயர் அதிகாரிகளுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய முழு முயற்சிகளால் சேமிப்புகள் உயரும். கடிதப் போக்குவரத்தின் மூலமாக உங்களுக்குச் சாதகமான செய்திகள் வந்து சேரும். பொருள் சேர்க்கைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
நீங்கள் நினைத்த முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். அறக் காரியங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். தந்தையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். நண்பர்களுடைய உதவியினால் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். விவாதங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீல நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
தூர தேசப் பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். பிள்ளைகளின் மூலமாக உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். சர்வதேச வணிகத்தில் நீங்க்ள எதிர்பார்த்த மேன்மை உங்களுக்குக் கிடைக்கும். உறவுகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
உங்களுடைய சேமிப்புக்ள அதிகரிக்க ஆரம்பிக்கும். வேளாண்மை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று தேக்க நிலை ஏற்படும். சொத்து சேர்க்கைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடைய வருகையின் காரணமாக மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உயர் பதவிகளுக்கான வாய்பபுகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரைச் சந்திக்கும் வாய்பபுகள் உண்டாகும். வெளியூர்ப் பயணங்களால் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்கு செல்வாக்குகள் அதிகரிக்கும். புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பயணங்களின் போது, கொஞசம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications