Latest Updates
-
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்
காசு, காதல் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் என்னென்ன?
daily horoscope 10.7.18 , 10.7.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடுமு்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாத விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கிறது.

ரிஷபம்
பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் உங்களைத் தேடி வரும். ஆராய்ச்சி சம்பந்தமான எண்ணங்கள் மனதில் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது மேன்மை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சுய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் மேலோங்கி நிற்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

மிதுனம்
வியாபாரம் சம்பந்தப்பட்ட கடனுதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கடகம்
மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயங்கள் உண்டாகும். பிறருக்கு உதவும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணப்புழக்கத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஸ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய எல்லா காரியங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பிறருக்கு எடுத்துரைக்கும் உங்களுடைய ஆற்றலால் நல்ல பயன்கள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்களில் அனுகூலங்கள் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி
உறவினர்களுக்கு இடையே உறவு நிலை மேம்பட்டு நிற்கும். பொன், பொருள் சேர்ப்பதற்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்குள் அதில் சிறுசிறு மாற்றங்களைச் செய்வதன் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழலை அமைத்துக் கொள்ள முடியும். போட்டிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞசு நிறமும் இருக்கும்.

துலாம்
விவாதங்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். ஆன்மீக வழியில் உங்கள் மனம் ஈடுபடும். புதிய நபர்களால் தொழில் வாய்பபுகள் அதிகரிக்கும். பெரிய பெரிய மகான்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் சுப விரயங்கள் உண்டாகும். பணிகளில் கொஞ்சம் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
தொழிலில் பங்குதாரர்களுடைய உதவியினால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு
வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதற்காக எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். இழந்த பொருள்களை மீட்க முயற்சி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியில் உள்ளவர்குள் சக ஊழியர்களிடம் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

மகரம்
வீட்டில்பிள்ளைகளின் மூலமாக சுப செய்திகள் உங்களைத் தேடி வரும். நிர்வாகத்தில் உங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவினால் பொருளுாதார மேன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிரஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்
நண்பர்களின் மூலமாக புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கால்நடைகளின் மூலமாக சில சில விரயச் செலவுகள் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பகள் உண்டாகும். தாயின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வாகனப் பயணங்களால் லாபம் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மீனம்
எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட தேடல்கள் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். உடன் பிறந்த சகோதரர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications