Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
உங்களுடைய ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட எண் தெரிஞ்சிக்கணுமா?... இத படிங்க...
daily horoscope 8.7.18 , 8.7.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
தொழில் சம்பந்தமாக முக்கய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும் வாய்ப்புண்டு. உங்களுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி அதன் மூலம் பெண லாபம் பெறுவீர்கள். மன மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, மனம் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வெளியிடங்களில் எதிர்பார்த்திருந்த கடனுதவிகள் கைக்கு வந்து சேரும். சொந்த ஊருக்கு பயணஙகள் மேற்கொள்வீர்கள். நினைத்த செயல்களை செய்து முடிப்பதில், கொஞ்சம் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இனறு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம்அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
புதிதாக அறிமுகம் ஆகின்ற நபர்களின் மூலம் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களுடைய முழு ஆதரவும் கிடைக்கும். மறுமணம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் இந்த சமயத்தில் வரன் தேடுவது நல்ல பலனைத் தரும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் மூத்தவர்களின் ஆலோசனை கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்
பரம்பரை சொத்துக்களைப் பிரிக்கும் சூழல் உண்டாகும். அப்போது பங்காளிகளிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடித்தால், வீண் கைகலப்புகளைத் தவிர்க்கலாம். அலைச்சல்கள் இருநு்தாலும் அதன் மூலம் சேமிப்புகள் உயரும். எந்த பொருளைக் கையாண்டாலும் அதில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாதத் திறமையினால் லாபம் உண்டாகும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் கிடைக்கப் பெறுவதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
வீட்டில் உள்ளவர்கள் அனைவருடைய தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதை செய்தும் முடிப்பீர்கள். இதனால் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகும். பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள்.ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். எந்த காரியமாக இருந்தாலும் அதில் நிதானமாக செயல்படுங்கள். தொழில் முன்னேற்றத்துக்கான அத்தனை முயற்சிகளையும் மேறகொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் இருக்கிறது.

கன்னி
வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். எதிர்பாராத பொருள் சேர்க்கைகள் உண்டாகும். கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய கூர்மையான பேச்சுக்களால் எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
வீட்டுக்கு உறவினர்களுடைய திடீர் வருகை உண்டாகும். இது வீட்டில் உள்ளவர்களை மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. உறவினர்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொது சேவைகளில் ஈடுபடுகிறவர்களுக்கு நற்பெயர் உண்டாகும். வாங்கிப் போட்டிருந்த மனைகளில் வீடு கட்டுவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

விருச்சிகம்
எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் கைக்குக் கிடைக்கும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் கொஞ்சம் அனுசரித்துப் போவது நல்லது. தங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்துப் போவது நல்லது. வேலைப்பளுவின் காரணமாக உங்களுடைய முழு திறமையும் வெளிப்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 9 ஆகவும் அதிா்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

தனுசு
எந்த விஷயமாக இருநு்தாலும் துணிச்சலுடன் புதிய செயல் திட்டங்களைத் தீட்டுவீர்கள். குழந்தைகளால் வீண் விரயச் செலவுகள் உண்டாகும். மாணவர்களுடைய நினைவாற்றலில் அபார ஆற்றல் பெருகுவதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மனதில் புதுப்புது எண்ணங்கள் உண்டாகும். பரம்பரை சொத்துக்களால் தன லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
கால்நடைகள் மூலம் லாபங்கள் பெருக ஆரம்பிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உருவாகும். வீட்டில் உள்ள மூத்தோர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். நெருக்கமான உறவினர்களிடம் தேவையில்லாத வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளுடைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கிறது.

கும்பம்
சொந்த தொழில் செய்பவர்களுக்கு உங்களுடைய பேச்சுத் திறமையினால் தன லாபம் உண்டாகும். வீட்டில் குழந்தைகளுடைய உதவியினால் தொழிலிலும் முன்னேற்றம் உண்டாகும். கூட்டாக தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

மீனம்
அரசாங்கம் சம்பந்தப்பட்ட, எதிர்பார்த்திருந்த அனுகூலமான செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். மனை சம்பந்தப்பட்ட சுப வரயச் செலவுகள் உண்டாகும். உங்களுடைய தொழில் திறமையின் மூலம் வெளியிடங்களில் பிரபலமடைவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் வாகன முதலீடு கொண்டிருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications