Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
இன்றைக்கு நெருங்கிய நண்பரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார்?
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
நீண்ட நாட்களாக மனதில் நினைத்து வைத்திருந்த காரியங்களை நிறைவேற்றுவதற்கான தருணம் கைகூடி வரும். ஏற்கனவே திட்டமிட்ட சில பயணங்களில் தடைகள் ஏற்படும். வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருக்கிற மனக்கசப்புகள் வந்து போகும். தொழிலில் புதிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். அப்படியே செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீட்டில் சுப செலவுகள் உண்டாகும். புதிய நபர்களுடைய அறிமுகம் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
பணியின் காரணமாக அலைச்சல்கள் உண்டாகும். ஆனால் அலைச்சல் இருந்தாலும் தொழிலில் மேன்மைதான் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். அதனால் சேமிப்பு உயர ஆரம்பிக்கும். தொழிலில் கூட்டாளிகளிடம் இருந்து வந்த இன்னல்கள் குறைந்து நிம்மதி உண்டாகும். தேவையில்லாத வீண் செலவுகளைக் குறைப்பதற்கன முயற்சிகளை மேற்கொள்வீர்கள். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். இன்ற உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 5ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்
மனதில் புதுப்புது எண்ணங்கள் உருவாகும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த பிரார்த்தனைகள் நிறைவேற ஆரம்பிக்கும். மனதில் நினைக்கும் காரியங்களை வேகமாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

கடகம்
நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அது சம்பந்தப்பட்ட பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்புகள் உயரும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கும் இருக்கும்.

சிம்மம்
முக்கிய ஆவணங்களைக் கையாளுகின்ற போது, கொஞ்சம் கவனமாக இருங்கள். மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மனதில் புதுப்புது எண்ணங்கள் உண்டாகும். உடல் நலத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். உங்களுடைய மேலதிகாரிகளிடம் பேசும்போது, கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய எணண்ாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக வடமேற்கும் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கன்னி
உறவினர்களின் மூலமாக, உங்களுக்கு நிறைய அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் மூலம் அபாரமான லாபம் கிடைக்கும். நண்பர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீரும். எதிர்பார்த்த தனவரவுகளின் மூலமாக உங்களுக்கு மனதில் திருப்தி உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கப்போகிறது.

துலாம்
வேலையிடத்தில் நிதானமாகச் செயல்பட்டு நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். புதிய நகைகள், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வீடு, மனை வாங்குவதற்கான செயல் திட்டங்களைத் தீட்டுவீர்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். உங்களுடைய நடை, உடை, பாவனை, செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் எண்ணாக 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கப் போகிறது.

விருச்சிகம்
வேலை செய்யும் இடங்களில் உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை உயர ஆரம்பிக்கும். வீட்டில் உள்ள குழந்தைகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்க கால தாமதம் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

தனுசு
வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்டட விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே தொம்பத்திய நெருக்கம் உண்டாகும். தொழிலை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகள் எதிர்பார்த்திருந்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். பணியிடங்களில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமாகவும் இருக்கும்.

மகரம்
பணியிடங்களில் உங்களுடன் பணிபுரிபவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். அடுத்தவர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். பெற்றோர்கள் மற்றும் அவர்களுடைய ஆரோக்கியம் குறித்த கவலை உண்டாகும். நெருங்கிய நண்பர்களுடன் பழகும்போது கூட கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கிறது.

கும்பம்
மாணவர்களுக்கு சாதகமான நாளாக இது இருக்கும். உங்களுடைய வாத திறமையால் புகழ் உண்டாகும். புதிய நண்பர்கள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்கள். கௌரவம் உயரும். உங்களுடைய பதவிகளின் காரணமாக மகிழ்ச்சி உண்டாகும். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் கை கூடி வரும் நேரம் இது. இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக அடர்ந்த பச்சை நிறமும் இருக்கப் போகிறது.

மீனம்
நீங்கள் என்ன தொழில் செய்தாலும் திரும்ப சுயதொழில் செய்யலாம் என்ற எண்ணங்கள் மேலோங்கி வரும். மேல் நிலை அதிகாரியாக இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் நீங்கள் காத்திருக்கும் சில விஷயங்கள் கால தாமதம் ஏற்படும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
