Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். ..
இன்றைய குஜால் ராசிக்காரர்கள் யார் யார்? என்னென்ன நடக்கப் போகிறது?
4.9.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்?
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
வீட்டில் உள்ளவர்களின் ஆதரவினால் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். புதிய செயல் திட்டங்களைத் தீட்டி, அதற்கான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டுத் துறை சம்பந்தப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
தொழில் மேம்பாட்டுக்காக நண்பர்களுடைய உதவிகளைப் பெறுவீர்கள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கைகள் உ்ணடாகும். அறிவு பெருகும். ஞானம் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சுய தொழில் செய்பவர்களுக்கு நீங்களே எதிர்பாராத வியாபாரங்கள் உண்டாகும். அயல்நாட்டு வேலை வாய்ப்புகளின் மூலம் லாபங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
பதவி உயர்வுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பொது கூட்டங்களில் நீங்கள் பேசும் பேச்சுக்கு ஆதரவுகள் பெருகும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட இலக்குகளினுடைய முடிவுகளால் சிந்தனையில் மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
நீங்கள் செய்யும் புண்ணிய காரியங்களால் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் நேர்மையானவராக இருந்தீா்கள் என்றால் உங்களுடைய மதிப்புகள் உயரும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். மனதுக்குள் இருக்கும் னவலைகள் தீரும். நில விருத்திகள் உண்டாகும். தொழில் மற்றும் வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
அந்நியர்களின் மூலமாக நீங்கள் எதிர்பாராத தனவரவு வந்து சேரும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். விவாதங்களில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வாக்குறுதிகளால் உங்களுக்கு கீர்த்தி உண்டாகும். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை வெளிப்படும் நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
மனதுக்குள் தோன்றுகின்ற பல்வேறு குழப்பங்களால் மனதில் சோர்வு உண்டாகும். உங்களுடன் பிறந்தவர்களால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பொருளாதார நெருக்கடியினால் மந்தத்தன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
மனதில் துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். பெரியோர்களுடைய ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். மனைவியின் உதவியினால் தொழிலில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். நிர்வாகத்தில் உள்ள குறைகளைக் களைவீர்கள். கால்நடைகள் மூலம் உங்களுக்கு லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
உங்களுடைய வாரிசுகளின் மூலமாக உங்களுக்கு சுப விரயச் செலவுகள் உண்டாகும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் வந்து போகும். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல்களின் மூலமாக சோர்வுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறங்களாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
மனதுக்குள் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். சர்வதேச வணிகம் சம்பந்தப்பட்ட பணிகளில் இழுபறி நிலை உண்டாகும். செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
தந்தையினுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத பேச்சுக்களிளைத் தவிர்ப்பது நல்லது. அந்நியர்களிடம் கவனத்துடன் இருக்க வேண்டும். மூத்த உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லுங்கள். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். கடிதத்தின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். தூர தேசப் பயணங்களின் மூலமாக உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
வாகனங்களின் மூலம் தனலாபம் உண்டாகும். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய ஆட்களுடைய நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் மூலமாக பெருமை அடைவீர்கள். திருமண வரன்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











