அனைவர் மத்தியில் உணவகத்தில் இளம் பெண் செய்த அருவருக்கத்தக்க செயல் - வைரல் வீடியோ!

By Staff
Subscribe to Boldsky

கடந்த ஓரிரு நாட்களாக இணையத்தில் ஒரு காணொளிப்பதிவு காட்சி வைரலாக பரவி வருகிறது, லைவ் லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த காணொளிப்பதிவு காட்சியில் டிம் ஹார்டன்ஸ் என்ற உணவகத்தில்... உணவருந்த வந்திருந்த பெண் ஊழியர் ஒருவருடன் சண்டையிடுகிறார்.

அவர்களது உரையாடலில் ஒரு தருணத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த பெண், தனது ஆடைகளை கழற்றி, பில் டேபிள் எதிரே மலம் கழித்து அதை ஒரு பேப்பரில் எடுத்து அந்த ஊழியர் மீது எறிகிறார். பிறகு மீண்டும் தனது ஆசன பகுதியை ஒரு பேப்பரில் துடைத்து அதையும் அதே ஊழியர் மீது விட்டெறிகிறார்.

Woman Poops and Throws Feces at Tim Hortan Employee

சிசிடிவியில் பதிவான இந்த காட்சி எப்படியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவில் பதிவாகியிருக்கும் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டிருக்கும் அந்த பெண் யார் எவர் என்ற தகவல்கள் அறியப்படவில்லை.

டிம் ஹார்டன்ஸ் என்பது கனடாவை சேர்ந்த ஒரு பிரபல உணவாகமாகும். AbbyNews என்ற இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதன் படி பார்த்தால். இந்த சம்பவம் லாங்க்லி என்ற கனடா நகரில் இருக்கும் டிம் ஹார்டன் உணவாக கிளையில் கடந்த நேற்று மாலை 6.15 மணியளவில் நடந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இந்த வீடியோ துவங்கும் போது, உணவகத்திற்கு வருவோர வரவேற்கும் பகுதியில் இருக்கும் டிம் ஹார்டன்ஸ் ஊழியரிடம் யாரோ ஒரு பெண் சண்டையிடுவது போல இருக்கிறது. உணவகத்தின் ஊழியர் அந்த பெண்ணை வெளியே செல்லுமாறு கட்டளையிடுகிறார். ஆனால், உணவகத்தை விட்டு வெளியாராமல் அந்த பெண் யாரும் எதிர்பாராத தருணத்தில் கண்ணிமைக்கும் நொடியில் தனது ஆடைகளை கழற்றி அனைவர் முன்னிலையில் அதே இடத்தில் மலம் கழித்து, அதை எடுத்து பில் கவுண்டரில் இருந்த நபர் மீது வீசி அருவருப்பான செயலில் ஈடுபடுகிறார்.

பிறகு, உணவாக ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து புகார் கொடுக்கவே. பார்க்கிங் ஏரியாவிலேயே அந்த பெண் கைது செய்டப்பட்டுவிட்டார். அருவருப்பான செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணிடம் தகுந்த அபராதம் விதித்து விடுதலை செய்ததாக அறியப்படுகிறது.

யூடியூப் முதல் ட்விட்டர் வரை இப்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த ஏன், எதற்காக இப்படியான அருவருப்பான செயலில் ஈடுபட்டார் என்று அறியப்படவில்லை. டிம் ஹார்டன்ஸ் உணவகத்தின் சார்பாக பேசியவர் அந்த பெண் மீது புகார் அளிக்கப்பட்டது குறித்தும். பிறகு கைது செய்து விடுதலை செய்யப்பட்டது குறித்தும் தான் கூறியுள்ளார்.

கோபம் ஒரு மனிதனை கொல்லும் என்று நாம் நிறைய பழமொழிகளில் படித்து அறிந்துள்ளோம். கோபம் என்பது ஒரு மனிதனின் குணத்தை, நற்பண்புகளை அழிக்கும் கருவியாகும். இந்த பெண்மணியும் அப்படி தான். தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இவர் அருவருப்பான செயலில் ஈடுபட்டு இன்று உலகம் முழுக்க பெயர்கெட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கொட்டிய நெல்லை எடுத்துவிடலாம், ஆனால் சொல்லை எடுக்க முடியாது என்பார்கள். அதே போல் தான் இணையத்திலும்.. நாம் செய்யும் எந்தவொரு காரியமும் இதில் பதிவாகிவிட்டால் மீண்டும் இணையத்தில் இருந்து எடுப்பது மிகவும் கடினம்.

இணையத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோ:

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Woman Poops and Throws Feces at Tim Hortan Employee

    A woman in Canada was so incensed about something Tim Hortons employees did or didn’t do that she dropped her pants, took a dump on the floor, threw it, grabbed some napkins to wipe her ass, threw those too, and left.
    Story first published: Thursday, May 17, 2018, 18:10 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more