ஒவ்வொரு நாட்டிலும் சாப்பிடும் போது செய்யக்கூடாத விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky
உலகின் வேறுபட்ட உணவு சாப்பிடும் பழக்கவழக்கங்கள்..வீடியோ

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் கலாச்சாரங்கள், பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் வேறுபடும். ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதே சமயம் வித்தியாசமான ஒன்றாகவும் இருக்கும். குறிப்பாக அனைத்து நாடுகளிலுமே சாப்பிடும் போது ஒருசில பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படும். உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால், தரையில் அமர்ந்து கைகளால் சாப்பிடுவதே இந்திய பண்பாடு. இதேப் போன்று ஒவ்வொரு நாட்டிலும் சாப்பிடும் போது பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாக ஒவ்வொரு மாதிரியான விதிமுறைகள் உள்ளன.

நம் அனைவருக்குமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அப்படி இன்று புதிதாக எதையேனும் தெரிந்து கொள்ள நினைத்தால், இக்கட்டுரையைப் படியுங்கள். ஏனெனில் இக்கட்டுரையில் ஒவ்வொரு நாட்டிலும் பின்பற்றப்படும் சில உணவு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டு, ஒருவேளை உங்களுக்கு அந்த நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்தால், இந்த விதிமுறைகளின் படி நடந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கனடா

கனடா

கனடாவில் உள்ள மிகவும் வித்தியாசமான ஓர் உணவு கலாச்சாரம் தான் இது. அது என்னவெனில், கனடாவில் உள்ள இனூயிட் மக்களின் கலாச்சாரப்படி, உணவு உட்கொண்ட பின் ஒருவர் வாயுவை வெளியேற்றுவது பாராட்டுக்குரிய செயலாக கருதப்படுகிறது.

சிலி

சிலி

சிலியில் ஓர் உணவு விதிமுறை உள்ளது. அது என்னவெனில், ஒருவர் சாப்பிடும் போது போர்க் மற்றும் ஸ்பூன் பயன்படுத்தி தான் சாப்பிட வேண்டும். அதை விட்டு கைகளால் உணவுகளை உண்டால், அது நாகரிகமற்ற செயலை குறிக்குமாம்.

சீனா

சீனா

சீனாவில் ஒருவர் உணவு சாப்பிடப் பயன்படுத்தப்படும் உணவுக் குச்சியைப் பயன்படுத்தி, ஒருவரை சுட்டிக் காட்டி பேசுவது என்பது நாகரிகமற்ற செயலாக கருதப்படுகிறது. அதேல் போல் மீன் சாப்பிடும் போது, அதை ஒரு பக்கம் சாப்பிட்ட பின் மறுபக்கம் திருப்பிப் போட்டு சாப்பிடக்கூடாதாம். இதனால் அச்செயலால் துரதிர்ஷ்டம் வருமாம்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்ஸில் சாலட்டுகளை சாப்பிடும் போது, அதன் இலைகளை கத்தியால் வெட்டி சாப்பிடக்கூடாது. லெட்யூஸ் இலைகள் பெரியதாக இருந்தால், போர்க் பயன்படுத்தி அந்த இலையை மடித்து சாப்பிட வேண்டுமாம்.

ஜோர்ஜியா

ஜோர்ஜியா

ஜோர்ஜியாவில் ஒயினைக் குடிப்பதாக இருந்தால், அதற்கும் ஓர் விதிமுறை உள்ளதாம். அது ஒரு டம்ளர் ஒயினைக் குடிப்பதாக இருந்தால், ஒரே வாயில் குடிக்க வேண்டுமாம். மெதுவாக குடிப்பது என்பது நாகரிகமற்ற செயலாக கருதப்படுமாம்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் உணவை எப்போதும் தரையில் அமர்ந்து, வலது கையால் மட்டுமே சாப்பிட வேண்டும். இடது கையை உடலுறுப்புக்களை சுத்தம் செய்வதற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இத்தாலி

இத்தாலி

இத்தாலியில் உள்ள ஓர் உணவு விதிமுறைகளுள் ஒன்று, உணவு உட்கொண்ட பின் பால் வகை பானங்கள் எதையும் குடிக்கக்கூடாதாம். ஏனெனில் இது செரிமானத்திற்கு இடையூறை உண்டாக்குமாம். அதேப் போல் கடல் உணவுகளை உண்பதாக இருந்தால், அதன் மேல் சீஸ் போடச் சொல்லி கேட்கக்கூடாதாம். ஏனெனில் இங்கு மீனுடன், சீஸ் சேர்ப்பது பாவச்செயலாக கருதப்படுகிறது.

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பானில் உணவுகளை உண்ணப் பயன்படுத்தும் குச்சிகளை எப்போதும் சாதத்தில் குத்தி வைக்கக்கூடாது. அப்படி வைப்பதாக இருந்தால், அது ஈமச்சடங்கு நடக்கும் இடங்களில் மட்டும் தான். எனவே இங்கு சாப்பிடும் போது சற்று கவனமாக இருங்கள். அதேப் போல் உணவுகளை ஒரு செட் குச்சிகளில் இருந்து மற்றொரு செட் குச்சிக்கு பரிமாற்றக்கூடாது. இது அங்கு இறுதி சடங்கில் செய்யப்படும் ஓர் செயலாகுமாம்.

கொரியா

கொரியா

கொரியாவில் உள்ள ஓர் உணவு விதிமுறை, வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்கள் சாப்பிடாமல் மற்றவர்கள் சாப்பிடக்கூடாது. அது எவ்வளவு பசியாக இருந்தாலும், வீட்டில் உள்ள முதியவர்கள் சாப்பிட்ட பின்பு தான் சாப்பிட வேண்டுமாம். அதேப்போல் முதியவர்கள் அருந்துவதற்கு பானம் ஏதேனும் கேட்டால், இரண்டு கைகளால் தான் அவர்களுக்கு கொடுக்க வேண்டுமாம். இது மரியாதைக்குரிய ஓர் பழக்கமாகுமாம்.

மெக்ஸிகோ

மெக்ஸிகோ

மெக்ஸிகன் உணவான டகோஸை உட்கொள்ளும் போது போர்க் மற்றும் கத்தியைப் பயன்படுத்துவது நாகரிகமற்ற செயலாக கருதப்படும். இந்த உணவை எப்போதும் மரியாதையுடன் கைகளில் எடுத்து தான் சாப்பிட வேண்டுமாம்.

வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா

வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா

நாடோடிகளுடன் காபி குடிப்பதாக இருந்தால், காபி குடித்து முடித்த பின் காபி கப்பை குலுக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் அவர்கள் மேலும் மேலும் காபியைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்களாம். எனவே காபி போதும் என்றால் கப்பை குலுக்குங்கள். இன்னும் வேண்டுமானால் குலுக்காதீர்கள்.

போர்ச்சுகல்

போர்ச்சுகல்

போர்ச்சுகலில் உணவின் மீது தூவுவதற்கு உப்பு மற்றும் மிளகை எப்போதும் கேட்கக்கூடாதாம். அப்படி கேட்டால், அது அந்த உணவை சமைத்தவரை சந்தேகப் படுவற்கு இணையாம். என்ன ஒரு வித்தியாசமான விதிமுறை என்று பாருங்கள்.

ரஸ்யா

ரஸ்யா

ரஸ்யாவில் வோட்காவுடன் எதையும் கலக்காதீர்கள். அதேப் போல் ரஸ்யர்கள் குடிப்பதற்கு எது கொடுத்தாலும், வேண்டாம் என்று தள்ளக்கூடாதாம். ஏனெனில் இது நம்பிக்கை மற்றும் நட்பின் ஓர் அடையாளமாம்.

தன்சானியா

தன்சானியா

தன்சானியாவில் எப்போதும் சமைத்த உணவை நுகர்ந்து பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால், அது உங்களை நாகரிகமற்ற மற்றும் முரட்டுத்தனமான ஒருவராக காட்டும். எனவே எதை கொடுத்தாலும் கண்ணை மூடிக்கிட்டு, அப்படியே வாயில போட்டுக்கோங்க....

தாய்லாந்து

தாய்லாந்து

தாய்லாந்தில் போர்க் பயன்படுத்தி உணவை வாயில் வைப்பது என்பது நாகரிகமற்ற ஓர் செயலாக கருதப்படுமாம். இங்கு போர்க்கானது உணவை ஸ்பூனில் தள்ளுவதற்காகவே பயன்படுத்த வேண்டுமாம். ஆகவே போர்க் பயன்படுத்தி உணவை ஸ்பூனில் தள்ளி, பின் சாப்பிடுங்கள்.

ஐக்கிய ராஜ்யம் (UK)

ஐக்கிய ராஜ்யம் (UK)

ஐக்கிய ராஜ்யத்தில் சூப் குடிப்பதாக இருந்தால், சூப் பௌலை எப்போதும் வெளிப்புறமாக சாய்த்து, ஸ்பூன் பயன்படுத்தி எடுத்துக் குடிக்க வேண்டுமாம். அதுமட்டுமின்றி கொஞ்சம் கொஞ்சமாக, அதுவும் சப்தமின்றி தான் குடிக்க வேண்டுமாம்.

ஒவ்வொரு நாட்டிலும் சாப்பிடும் போது எவ்வளவு விதிமுறை இருக்குன்னு பாருங்க... இந்த விதிமுறைகளைப் பார்த்தால் யாருக்காவது சாப்பிட தோணுமா? இருந்தாலும், இந்த நாடுகளில் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What You Should Not Do While Eating In Different Countries

Here we listed some etiquettes or rules of eating in different countries. Take a look...