For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்த ஊர்ல நம்மளால தங்கவே முடியாது ஏன் தெரியுமா?

  |

  இன்றைய காலத்தில் வளர்ந்திருக்கும் போக்குவரத்து வசதிக்கு பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்திருப்போம். நாம் வாழும் இடத்திலிருந்து சற்றே மாறுதலாய் புது இடங்கள் நம்மை வரவேற்கும், இப்போதும் சில இடங்களைப் பற்றித்தான் பார்க்கப் போகிறீர்கள் ஆனால் மிகவும் வினோதமான மற்றும் விசித்திர காரணங்களினால் அந்த இடத்தை மக்கள் புறக்கணித்திருப்பார்கள் அல்லது அதிகளவு சென்று பார்ப்பார்கள்.

  இந்த சம்மர் வெக்கேஷன்ல போர் அடிச்சா நீங்களும் ஒரு எட்டு போய் பாத்துட்டு வாங்களேன்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சாவே கிடையாது :

  சாவே கிடையாது :

  இந்த ஊருக்குப் போனா உங்களுக்கு சாவே கிடையாது.உலகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய சவல்பேர்டு என்ற இடத்தில் தான் லாங்க்யேர்பைன் என்ற இந்த டவுன் இருக்கிறது.

  இங்கே பனிப்பொழிவு பொழிகிற பிற இடங்களை விட அதிகளவு பனி பொழிகிறது. இந்த ஊரில் ஒரேயொரு மயானம் இருக்கிறது. அதையும் 70 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்துவதில்லையாம். அதிக குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக இறந்தவர்களை புதைக்க முடியாது அப்படியே புதைத்தாலும் அவர்களின் உடல் மட்காமல் நீண்ட நாள் வரை அப்படியே இருக்கும். சில நேரங்களில் மனித உடல்கள் காட்டு விலங்குகளுக்கும் உணவாவதுண்டு. இதனால் இறக்கும் நிலையில் இருக்கும் போது இந்த ஊர் மக்களை வேறு இடங்களுக்கு அனுப்பி விடுவார்களாம்.

  Image Courtesy

  ஒரு ஊரு ரெண்டு நாடு :

  ஒரு ஊரு ரெண்டு நாடு :

  எல்லையில் அமைந்திருக்கும் ஊர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் அண்டை நாடு நமக்கு எதிரி நாடு என்றால் எப்போதுமே போர் சூழலில் பரபரப்பாக காணப்படும்.

  இங்கே பஸிங்கென் அம் ஹோச்சிஹெயின் என்ற இந்த ஊர் இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைந்திருக்கிறது. ஜெர்மனி மற்றும் ஸ்விச்சர்லாந்துக்கு நடுவில் அமைந்திருக்கும் இந்த ஊரை இரண்டு நாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன.பொருளாதாரரீதியாக இது ஸ்விச்சர்லாந்தையும் அரசியல் ரீதியாக ஜெர்மனியையும் சார்ந்து இருக்கிறது.

  Image Courtesy

   இது நரகமய்யா :

  இது நரகமய்யா :

  இங்கு இருப்பவர்களை பயமுறுத்த மட்டுமல்ல இந்த பெயர், உண்மையிலேயே இந்த ஊறின் பெயர் நரகம் தான். இது அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அமைந்திருக்கிறது.

  இதற்கான பெயர் காரணம் தெரியவில்லை ஆனால் இந்த பெயர் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

  Image Courtesy

  சீனா டவுன் :

  சீனா டவுன் :

  எந்த பொருளைப் பார்த்தாலும் அதைப் போலவே போலியை உருவாக்கிடும் ஆற்றல் படைத்தவர்கள் சீனர்கள்.. சின்ன சின்ன பொருட்களை மட்டுமல்ல ஒரு நகரத்தையே கூட உருவாக்கி காட்டுவோம் என்று சொன்னதன் விளைவு தான் இந்த நகரம்.

  ஆஸ்டிரியாவின் ஹால்ஸ்டாட் நகரை அப்படியே தத்ரூபமாக சீனாவில் உருவாக்கினார்கள். இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த இடம் உண்மையான ஹால்ஸ்டாட்டை விட இங்கு எல்லாமே விலை அதிகம்.

  Image Courtesy

  இங்கு எல்லாமே ஃப்ரீ :

  இங்கு எல்லாமே ஃப்ரீ :

  கலிபோர்னியாவிற்கு அருகில் அமைந்திருக்கிறது இந்த ஸ்லாப் சிட்டி. இங்கு பெரும்பாலும் நாடோடி மக்கள், ரிட்டையர்ட் ஆனவர்கள் தான் வசிக்கிறார்கள். இன்னும் சிலரோ வேறு போக்கிடம் இன்றி இங்கு வசிக்கிறார்கள். இங்கு ஏகப்பட்ட வசதிகள் இருப்பதால் மக்கள் இந்த இடத்தை தேடி வருகிறார்கள் என்று நினைத்துவிட வேண்டாம்.

  இந்த இடத்தில் வசதிகளே இல்லை தண்ணீர் வசதியோ, கரண்ட் வசதியோ இல்லை இன்னும் ஏன் இங்கு ஒழுங்கான அட்ரஸ் கூட கிடையாது. அவற்றுடன் வரி கிடையாது மிக முக்கியமாக வாடகையும் கிடையாது. அதாவது அரசாங்கத்தின் பார்வையிலிருந்து தபொஇ பிழைத்திருக்கிறது இந்த இடம்.

  வசதிகள் ஏதுமில்லை என்றாலும் அமெரிக்காவின் இலவச சிட்டியாக இதுவும் இணைந்திருக்கிறது.

  Image Courtesy

  குகை வீடு :

  குகை வீடு :

  துனிசியாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கிறது இந்த நகரம். இந்த நகரம் முழுவதும் குகையில் தான் மக்கள் வசிக்கிறார்கள். 1970களில் இந்த இடத்தில் சாதரண வீடு கட்டப்பட்டது. ஆனால் மக்கள் தங்களது பழைய வீடுகளைத் தான் விரும்பி வசிக்கிறார்களாம்.

  ஸ்டார் வார்ஸ் ரசிகர்கள் இந்த இடம் தான் லுயுக் ஸ்கைவாக்கரின் வீடாக இருக்கும் என்றும் நம்புகிறார்கள்.

  Image Courtesy

  எல்லாம் ஓரிடத்தில் :

  எல்லாம் ஓரிடத்தில் :

  அலஸ்காவில் இருக்கும் இந்த நகரத்தின் பெயர் விட்டியர். இந்த மொத்த நகரமுமே ஒரேயிடத்தில் அமைந்திருக்கிறது. எல்லாம் தொலை தூரம் செல்ல வேண்டியதில்லாமல் பக்கத்து பக்கத்து தெருக்களில் அமைந்திருக்கிறது என்று நினைத்து விட வேண்டாம். எல்லாமே பதினான்கு மாடி கொண்ட அப்பார்ட்மெண்ட்டில் அமைந்திருக்கிறது.

  அங்கு கடைகள், போலீஸ் நிலையம்,மருத்துவமனை, சர்ச் என எல்லாமே இருக்கிறதாம். இந்த நகரத்தின் மக்கள் தொகை 220. இந்த பகுதியில் எல்லா நேரங்களிலும் குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் ஒரேயிடத்தில் வசிப்பதை விரும்புகிறார்களாம்.

  Image Courtesy

  ப்ளூ :

  ப்ளூ :

  மொராக்கோ நகரில் அமைந்திருக்கக்கூடிய ஒரு டவுன் தான் செஃப்சாவுன். இந்த ஊரில் எல்லாமே நீல நிறத்தில் தான் இருக்கிறது, கதவு, ஜன்னல், சுவர்,படிக்கட்டு என எல்லாமே ப்ளூ நிறத்தின் வெவ்வேறு ஷேட்களில் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் இங்கே யூதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் புனிதமான நிறம் ப்ளூ.

  அவர்கள் அந்த இடத்தை விட்டுச் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அந்த ப்ளூ வண்ணம் மட்டும் இன்னமும் தொடர்கிறது.

  Image Courtesy

  ஏலியன் :

  ஏலியன் :

  மெக்சிகோவின் ரோஸ்வெல் நகரத்தை தான் ஏலியன் சிட்டி என்கிறார்கள். ஏலியன் உண்மையிலேயே இருக்கிறதா இல்லையா என்பது குறித்து சர்ச்சகைகள் தொடர்ந்தாலும் இந்த நகர் முழுவதையும் ஏலியன் சிட்டியாக மாற்றியிருக்கிறார்கள். இங்கு ஏலியன்களுக்கு ஓர் திருவிழாவும் நடக்கிறது.

  Image Courtesy

  கடலுக்கு நடுவில் :

  கடலுக்கு நடுவில் :

  ஆம் இந்த நகரம் கடலுக்கு நடுவில் அமைந்திருக்கிறது. அஜெர்பாய்ஜென் என்ற இடத்திற்கு அருகில் இது டவுன் அமைந்திருக்கிறது. கடலுக்கு நடுவில் அமைந்திருக்கக்கூடிய எண்ணெய் கிணறு தான் இந்த டவுன் அமைவதற்கு காரணமாய் இருக்கிறது.

  இங்கு நிரந்தரமாக யாரும் வசிப்பதில்லை குறிப்பட்ட காலங்களுக்கு பணி செய்ய சுமார் இரண்டாயிரம் மக்கள் வரை வருகிறார்கள். அவர்களின் ஷிப்ட் முடிந்ததும் சென்று விடுகிறார்கள்.

  Image Courtesy

  பாறை :

  பாறை :

  ஸ்பெயினில் இருக்கக்கூடிய ஸ்டெனில் டி லாஸ் போடிகாஸ் என்னும் இடம் உலகம் முழுவதிலிமிருந்து சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வருகிறது. ஏனென்றால் இந்த நகரில் இருக்கும் வீடுகள் எல்லாம் பாறைகளுக்கு இடையிலும் பாறைகளுக்கு அடியிலும் அமைந்திருக்கிறது.

  தெருவில் இறங்கி நடந்தால் மேலே வானத்தை பார்க்க முடியவில்லை பாறைகளைத் தான் பார்க்க முடிகிறது. அவ்வப்போது பலத்த காற்று வீசும் போதும் பலத்த மழை பெய்திடும் போதும் இந்த பாறை அசையுமோ அல்லது விழுந்திடுமோ என்று பயந்தார்களாம் ஆனால் நூற்றாண்டைக்கடந்தும் அந்த பாறை அப்படியே நிற்கிறது.

  Image Courtesy

  இறந்தவர்கள் அதிகம் :

  இறந்தவர்கள் அதிகம் :

  கலிஃபோர்னியாவின் கோல்மா நகரில் உயிருடன் வசிப்பவர்களை விட இறந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கம் இங்கிருக்கும் கல்லறைகளை எல்லாம் பக்கத்து ஊருக்கு மாற்ற திட்டமிட்டார்கள். அப்போது பதினேழு கல்லறைகள் வரை இருந்ததாம்.

  அங்கு வசித்த மக்கள் எல்லாம் வேறு நகரத்திற்கு சென்று விட்டார்கள். இங்கு அந்த கல்லறைத் தோட்டத்தில் இறந்த பிணங்களை எடுப்பவர்கள்,மீண்டும் அரசாங்கம் சொன்ன இடத்திற்கு புதிதாக குழிவெட்டி கல்லறையை உருவாக்குபவர்கள் என சிலர் இருந்திருக்கிறார்கள். பல மாதங்களாகியும் கல்லறையை மாற்ற முடியவில்லை காலப்போக்கில் வேறு வேலை பார்ப்பவர்களும் இங்கே வாழ ஆரம்பித்தார்கள் நாளடைவில் ஒரு டவுனாக மாறியது.

  Image Courtesy

  இங்கு தங்கினால் காசு :

  இங்கு தங்கினால் காசு :

  ஜப்பானில் இருக்கக்கூடிய மியாகே ஜிமா என்ற இடத்தில் அமைந்திருக்கும் எரிமலை எப்போதுமே புகையை வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறது. இதனால் காற்றில் அதிகப்படியான சல்ஃபர் கலந்திருக்கிறது. இது விஷமாகக்கூடியது என்பதால் மக்கள் வசிக்கவே அஞ்சுகிறார்கள். இந்நிலையில் அரசாங்கம் இங்கு வசிக்க விருப்பம் தெரிவிக்கும் மக்களுக்கு உயிர்காக்கும் கருவிகளையும் உதவித் தொகையும் வழங்குவதாக சொல்ல சிலர் முன் வந்திருக்கிறார்கள்.

  இங்கு வசிக்கும் மக்கள் எப்போதும் மாஸ்க் அணிந்திருக்கிறார்கள். அதோடு ஜப்பான் அரசாங்கத்தினர் அவருடைய வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றம் உண்டாகியிருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.

  Image Courtesy

  குள்ளமானவர்கள் :

  குள்ளமானவர்கள் :

  சீனாவில் அமைந்திருக்கும் ட்வார்ஃப் என்ற கிராமம் முழுக்க முழுக்க குள்ளமான மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஏற்ற உயரத்தில் அவர்களுக்கு வசதியாக அனைத்து இடங்களையும் அமைத்திருக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் எல்லாரும் குள்ளமானவர்கள் என்பதால் இங்கே தங்களை கிண்டல் செய்யும் விதமாக யாரும் பார்ப்பதில்லை என்கிறார்கள்.

  தற்போது இந்த இடம் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாறியிருக்கிறது.

  Image Courtesy

   பேரழிவு :

  பேரழிவு :

  எகிப்தில் அமைந்திருக்கும் மேன்சியாட் என்னும் இடத்தை பார்த்தால் ஏதேனும் பேரழிவு நடந்து முடிந்திருக்கிற இடமாகத் தெரியும்.பலரும் நிலநடுக்கமோ அல்லது குண்டுவெடிப்போ நடந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இங்கு எந்த இயற்கை பேரிடரும் நடக்கவில்லை இயல்பாகவே இந்த இடம் இப்படித்தான் இருக்கிறது.

  இந்த ஊரில் வசிக்கும் மக்கள் எகிப்தின் பிற ஊர்களில் வசிக்கும் மக்கள் தேவையில்லை என்று தூக்கியெறியும் பொருட்களைக் கொண்டு தங்கள் ஊரை வடிவமைத்திருக்கிறார்கள். முதலில் எல்லாரும் முடியாது என்று சொன்னபோதும் இப்போது அந்த முயற்சியில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த நகரம் பார்க்க இப்படியிருக்கிறது. கைரோவுக்கு அருகில் இருக்கும் இந்த நகரை குப்பை நகரம் என்று தான் அழைக்கிறார்கள்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  weird Towns Around the World

  weird Towns Around the World
  Story first published: Thursday, April 19, 2018, 11:38 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more