சூனியம் வைக்க கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடம்! உலகைச் சுற்றி விசித்திர பள்ளிகள்!!

Posted By:
Subscribe to Boldsky

காலையில் அவசர அவசரமாய் எழுப்பி ஏழு மணிக்கெல்லாம் பஸ் வந்துவிடும் என்று குடும்பமே பெல்ட்,சாக்ஸ்,லன்ச் பேக் என்று எல்லாம் ரெடி செய்து முதுகுக்கு பின்னால் குழந்தையின் எடையளவுக்கோ அல்லது அதற்கும் அதிகமாகவோ பையை கொடுத்து பஸ்ஸில் திணித்து அனுப்பினால் தான் நமக்கெல்லாம் குழந்தை பள்ளிக்குச் சென்ற மாதிரியே இருக்கும்.

பள்ளியிலும் நம் குழந்தையைப் போன்றே பேக் செய்யப்பட்டு திணித்து அனுப்பப்பட்ட குழந்தைகள் எல்லாம் குவிந்து கிடக்க முன்னால் நின்று கருப்பு போர்டுக்கு அருகில் ஆசிரியர் எனப்படுபவர் கத்திக் கொண்டிருப்பார், வந்த டயர்டோ, நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியோ குழந்தை தன் உலகத்தில் மிதந்து கொண்டிருக்கும்.

மாதம் தவறாமல் பேரண்ட்ஸ் மீட்டிங், மன்த்லி டெஸ்ட்,ரிப்போர்ட் கார்ட் போன்ற சம்பிரதாயங்களும் நடக்கும். நம்மூர் பள்ளிகளில் பெரும்பாலும் இந்த காட்சியை காணமுடியும். ஆனால் இந்தியாவைத் தாண்டி பிற நாடுகளில் விசித்திரமாகவும்,புதுமையாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற சில பள்ளிகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குகைப் பள்ளி :

குகைப் பள்ளி :

இந்தப் பள்ளி சீனாவின் மையோ என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது. இது மிகவும் ஏழ்மையான பகுதியாகும். அதோடு அரசாங்கத்தின் உதவியும் மிகவும் குறைவாகத்தான் கிடைக்கிறது.

தங்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி நிலையம் கட்டிக் கொடுக்கச் சொல்லி அரசாங்கத்திடம் கேட்டு கேட்டு அழுத்துப் போன கிராமத்தினர், இருக்கிறதை வைத்தே நாங்கள் கல்வி கற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி 1984 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளி தான் இது. ஆரம்பித்த போது எட்டு ஆசிரியர்களும் 186 மாணவர்களும் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் 23 வருடங்களுக்கு பிறகு சீன அரசாங்கம் இந்த பள்ளியை மூடிவிட்டது.

Image Courtesy

படகுப் பள்ளி :

படகுப் பள்ளி :

வருடத்திற்கு இரண்டு முறை பங்களாதேஷில் வெள்ளம் வந்துவிடும், ஒவ்வொருமுறையும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பது வாடிக்கையாக இருந்தது. இதனால் தொடர்ந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதிலும் சிக்கல் நிலவியது.

இதனை தவிர்க்கவே ஷிதுலை ஸ்வனிர்வர் சங்கஸ்தா என்ற தன்னார்வல அமைப்பினர் மிதக்கும் பள்ளிக்கூடங்களை அமைத்தனர். தற்போது கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட மிதக்கும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இந்த பள்ளிகள் சூரிய ஒளியில் இயங்கக்கூடியது. லேப்டாப்,இணைய வசதி,நூலக வசதி என அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது பள்ளியாக மட்டுமல்லாது பள்ளிப் பேருந்தாகவும் செயல்படுகிறது. ஆம், மாணவர்களை அவர்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று அழைத்து வரவும் கொண்டு போய் விடவும் செய்கிறது.

Image Courtesy

ரயில்வே ப்ளாட்ஃபார்ம் பள்ளிகள் :

ரயில்வே ப்ளாட்ஃபார்ம் பள்ளிகள் :

ஒரிசாவைச் சேர்ந்த இந்திரஜித் குர்ஹானா என்பவர் தினமும் ரயிலில் தான் வேலைக்குச் சென்று வந்திருக்கிறார். அப்போது செல்லும் வழியில் ப்ளாட்ஃபார்ம் ஓரங்களில் குழந்தைகள் பிச்சை கேட்டுக் கொண்டும் அல்லது குழந்தை தொழிலாளர்களாவும் இருந்திருக்கிறார்கள். அடிப்படையில் ஆசிரியரான இந்திரஜித் இந்த குழந்தைகளுக்காக எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

அப்போது தான் இவர்களின் பெற்றோரும் நிலையான வருமானமின்றி தங்க இடமின்றி கிடைத்த வேலைகளை செய்து சொற்ப வருமானம் ஈட்டுவது தெரிந்திருக்கிறது, இந்த சூழ்நிலையில் இந்த மாணவர்களை எல்லாம் பள்ளிக்கு அழைத்துச் சென்று படிக்க வைப்பது என்பது இயலாத காரியம் அதனால் மாணவர்கள் இருக்கும் இந்த இடங்களையே பள்ளிக்கூடங்களாக மாற்ற திட்டமிட்டார். 1985 ஆம் ஆண்டு ட்ரைன் ப்ளாட்ஃபார்ம் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

Image Courtesy

ஒரு பள்ளியில்.... :

ஒரு பள்ளியில்.... :

இந்திரஜித் ஒரேயொரு பள்ளியைத் தான் ஆரம்பித்திருந்தார் ஆனால் இதன் வரவேற்பை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல இடங்களில் இப்படியான பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த பள்ளிகள் மூலமாக நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி வசதியை பெறுகிறார்கள்.

அதோடு இந்த குழந்தைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதியும் வழங்கப்படுகிறது.

Image Courtesy

பாம் ஷெல்டர் :

பாம் ஷெல்டர் :

அமெரிக்காவில் இருக்கக்கூடிய அபோ எலிமெண்ட்டரி ஸ்கூல் தான் அண்டர் கிரவுண்டில் துவங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடம். அமெரிக்காவில் கோல்ட் வார் உட்சத்தில் நடந்து கொண்டிருந்த போது அதிபராக இருந்த ஜான் கென்னடி நியூக்ளியர் குண்டுகளைக்கூட தாங்கும் வல்லமை படைத்த இடங்களை உருவாக்கினார்.

இந்த பள்ளிக்கூடம் இருக்கும் பகுதி அப்பகுதியின் வளங்களின் காரணமாக தாக்கப்படலாம் என்று கருதப்பட்டது. அதனால் முழுவதும் அண்டர்கிரவுண்டில் பள்ளிக்கூடத்தை உருவாக்கினார்கள். பள்ளி மைதானம் பள்ளியின் கூரையில் அமைக்கப்பட்டது. மூன்று விதமான நுழைவாயில் இருக்கிறது. இங்கிருக்கும் கதவு 800 கிலோ எடை கொண்டது. 20 மெகா டன் எடையுடைய குண்டி வெடித்தால் கூட தாங்கும் ஆற்றல் கொண்டது.

ஆனால் இந்த பள்ளியை பராமரிக்க அதிகம் செலவாகிறது என்று காரணம் கூறி 1995 ஆம் ஆண்டு இந்த பள்ளி மூடப்பட்டது.

Image Courtesy

தனியொருவன் நினைத்துவிட்டால் :

தனியொருவன் நினைத்துவிட்டால் :

சீனாவில் இருக்கும் மலைகள் சூழ்ந்த கிராமம் தான் இந்த குலு. இந்த கிராமத்திற்கு செல்ல உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் செல்ல வேண்டும் அதலபாதளம், மலையின் முகடு, ஆபத்தான திருப்பங்களை கடந்து தான் வர வேண்டும்.

இந்த பள்ளி எண்பதுகளில் ஆரம்பிக்கப்பட்டது, இந்த பள்ளியை ஒரேயொரு ஆசிரியர் நடத்திக் கொண்டிருக்கிறார். ஷென் கிஜுன் என்ற ஆசிரியர் தன்னுடைய பதினெட்டு வயதில் இங்கே வந்திருக்கிறார். பள்ளியின் அலங்கோல நிலையைக் கண்டு கிராமத்தினர் உதவியுடன் பள்ளியை சீரமைத்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார்.

Image Courtesy

ஹார்வி மில்க் :

ஹார்வி மில்க் :

நியூயார்க்கில் செயல்படுகிறது ஹார்வி மில்க் ஹை ஸ்கூல். தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுபவரும் அரசியல்வாதியுமான ஹார்வி மில்க் என்பவரின் பெயரில் இந்த பள்ளி செயல்படுகிறது.

லெஸ்பியன்,கே,பைசெக்ஸுவல்,ட்ரான்ஸ்ஜெண்டர் ஆகியோருக்காக செயல்படுகிறது. இந்த பள்ளியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். இங்கே தங்களது பாலினம் குறித்து எந்த குறிப்பும் கொடுக்கத் தேவையில்லை. இந்த சமூகத்திலிருந்து ஒடுக்கப்படுகிற மாணவர்கள் யாவருக்கும் இங்கே இடமுண்டு.

ஆனால் இந்தப் பள்ளி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது, அதோடு பல எதிர்ப்புகளை பெற்றுக் கொண்டேயிருக்கிறது.

Image Courtesy

பாலியல் தொழிலாளர்களுக்கு :

பாலியல் தொழிலாளர்களுக்கு :

ஸ்பெயின் நாட்டில் பாலியல் தொழில் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இன்றைய தேதிக்கு நான்கு லட்சம் வரையில் பாலியல் தொழிலாளர்கள் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்களுக்காக ட்ரபஜோ யா என்ற பெயரில் பள்ளி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பள்ளியில் பிஸினஸாக நடந்து கொண்டிருக்கும் இந்த பாலியல் தொழில் குறித்து நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகிறது. இங்கே பாலியல் தொழிலை எப்படி தொழில்முறையாக அணுகுவது என்று கற்றுத்தரப்படுகிறது. அதோடு இங்கே சேர்ந்தால் வேலை வாய்ப்பும் உறுதி என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.

Image Courtesy

கல்விமுறை :

கல்விமுறை :

இங்கே தியரி மற்றும் ப்ராக்டிக்கல் வகுப்புகள் இருக்கின்றன. இந்த பாலியல் தொழில் ஆரம்பித்த கதை, அது மருவி வளர்க்கப்பட்ட விதம் போன்றவற்றை தியரியில் படிக்கிறார்கள். தினமும் இரண்டு மணி நேரம் ப்ராக்டிக்கல் க்ளாஸ் இருக்கிறது. இந்த நேரத்தில் செக்ஸ் டாய்ஸ் கொண்டு வெளியுறுப்புகள்,உள் உறுப்புகள் குறித்து பாடமெடுக்கப்படுகிறது.

Image Courtesy

எதிர்கால பள்ளி :

எதிர்கால பள்ளி :

2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பள்ளியில் படிக்க வேண்டுமென்றால் புத்தகம், நோட்டு போன்றவை எதுவும் கொண்டு செல்லப்படுகிறது. இங்கிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கணினி மூலமாகவே பாடம் எடுக்கப்படுகிறது. நோட்ஸ் எடுத்துக் கொள்ளக்கூட நோட் டேக்கிங் ஆப்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

கம்யூட்டரைஸ்டு ஸ்மார்ட் போர்டு கொண்டே ஆசிரியரக்ள் பாடமெடுக்கிறார்கள். மாணவர்களுக்கு டிஜிட்டல் லாக்கர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த தொழில் நுட்பங்களை கையாள மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் திணறியிருக்கிறார்கள். காலப்போக்கில் அவை பழகிவிட்டிருக்கிறது அதோடு கல்வி கற்கும் முறையிலும் நல்ல மாற்றம் தெரிந்திருக்கிறது.

Image Courtesy

ப்ரூக்லின் ஃப்ரீ ஸ்கூல் :

ப்ரூக்லின் ஃப்ரீ ஸ்கூல் :

இந்த பள்ளியை இரண்டு பிரிவாக பிரித்திருக்கிறார்கள். ஒன்று அப்பர் ஸ்கூல், இங்கு பதினோறு வயதிலிருந்து பதினெட்டு வயது வரையிலான மாணவர்கள் படிக்கிறார்கள். இன்னொன்று லோயர் ஸ்கூல் இங்கே நான்கு வயதிலிருந்து பதினோறு வயது வரையிலான மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கு என்று எந்த தனி பாடத்திட்டம் எதுவும் கிடையாது.

அவர்களுக்கு பிடித்த எந்த வகுப்பறையிலும் அவர்கள் உட்கார்ந்து பாடம் கற்கலாம். பள்ளிக்கு வராமல் கூட இருக்கலாம். இந்த பள்ளிக்கான விதிகளை மாணவர்களே உருவாக்கலாம். சில மாணவர்கள் தாங்களாகவே படிக்க, விளையாட,தூங்க என அனைத்தும் மேற்கொள்ளலாம். பிரபலமாக ஒளிபரப்பப்படும் டிவி நிகழ்ச்சியை பார்த்து அதைப்பற்றியும் விவாதிக்கலாம்.

Image Courtesy

ஒவ்வொரு வாரம் :

ஒவ்வொரு வாரம் :

ஒவ்வொரு வாரம் ஆரம்பிப்பதற்கு முன்னாலும் ஒரு மீட்டிங்க் நடத்தப்படுகிறது. வருகின்ற வாரத்தில் பள்ளி எப்படி செயல்பட வேண்டும் என்று மாணவர்களிடமே யோசனை கேட்கப்படுகிறது. தேர்வுகள்,வீட்டுப்பாடங்கள்,ரேங்கிங் முறை என எதுவும் இல்லை. வகுப்பறை மாணவர்களாலேயே நடத்தப்படுகிறது ஆசிரியர்கள் அவர்களை கண்காணிப்பாளர்களாகவும்,மதிப்பீட்டாளர்களாகவும் இருக்கிறார்கள்.

இங்கே ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கான திறமை என்ன என்பதை கண்டறித்து அதில் தனிச்சிறப்பு பெற இங்கு முடிகிறது என்று சொல்லப்படுகிறது. இருந்தும் மாணவர்களுக்கான பாடத்திட்டம் இல்லை என்ற ஒற்றை காரணத்திற்காக இந்த பள்ளி நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

Image Courtesy

சூனியம் வைக்க படிக்கலாம் :

சூனியம் வைக்க படிக்கலாம் :

ஆம், சிகாகோ நாட்டில் இருக்கக்கூடிய இதனை விட்ச் ஸ்கூல் என்று அழைக்கிறார்கள். பள்ளியில் மட்டுமல்லாது ஆன்லைன் வழியாகவும் சூனியம் வைப்பது மற்றும் அதிலேயே பல்வேறு நுணுக்கங்களை இந்த பள்ளியில் கற்றுத் தருகிறார்கள்.

இந்தப் பள்ளிக்கு பயங்கர எதிர்ப்பு, சில எதிர்ப்பாளர்கள் பள்ளியை யாருமில்லாத நேரத்தில் நெருப்பு வைத்துவிட்டார்கள் இதனைத் தொடர்ந்து அவர்கள் Salem, Massachusetts, ஆகிய இடங்களுக்கு சென்று பள்ளியை ஆரம்பித்திருக்கிறார்கள். இங்கே சூனியத்தை எதிர்ப்பவர்கள் யாருமில்லை,மாறாக சூனியம் அவர்கள் அதிகம் விரும்பும் ஒருவிஷயமாக இருக்கிறது.

Image Courtesy

ஸ்டீவ் ஜாப்ஸ் ஸ்கூல் :

ஸ்டீவ் ஜாப்ஸ் ஸ்கூல் :

இந்த பள்ளியும் மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை ஊக்குவிக்கக்கூடிய ஒரு இடமாகவே இருக்கிறது,ஒவ்வொரு குழந்தைக்கும் என்று தனியாக டெவலப்மெண்ட் ப்ளான் வகுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆறு வாரங்களுக்கு அந்த ப்ளானில் முன்னேற்றம் இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுகிறது.

இந்த பள்ளியில் ஆசிரியர்களை கோச் என்றே அழைக்கிறார்கள். இங்கே நான்காம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் படிக்கக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் ஐபேட் வழங்கப்பட்டிருக்கிறது , அதில் ஏகப்பட்ட ஆப்ஸுகள் இருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் உங்களது தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கும்.

இவர்களது ஒரே இலக்கு ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கான கல்வியை உருவாக்க வேண்டும் என்பதே.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

weird Schools Around the world

weird Schools Around the world
Story first published: Saturday, February 24, 2018, 14:28 [IST]