Latest Updates
-
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் இந்த வார ராசிபலன்கள்... படித்து பயன்பெறுங்கள்
வார ராசிபலன்கள் 23.7.18 முதல் 29.7.18 வரை இந்த ஒரு வாரத்துக்கு 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம். அதிலும் ஆடி மாதத்தின் நடுப்பகுதி என்னென்ன நன்மைகளை தரப்போகிறது என பார
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள்.

ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி ராசிபலன் மற்றும் ஜோதிடத்தில் நம்பிக்கை உடையவர்களுக்காகவே 12 ராசிகளுக்குமான 3.9.18 தேதி முதல் 9.9.18 வரையிலான நாட்களுக்கு (வாரம்) ராசி பலன்கள் கணிக்கப்பட்டு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. படித்துப் பெயன்பெறுங்கள்.

மேஷம்
தொழிலில் உங்களுக்கு பெரும் லாபம் உண்டாகும். வீட்டில் உள்ள குழந்தைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சி செய்வீர்கள். முக்கிய பிரமுகர்களுடைய அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய பேச்சு வாதத் திறமையினால் லாபம் கிடைக்கும் அரசாங்கத் தரப்பில் இருந்து ஆதாயங்கள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளால் நல்ல பெயர் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத இடைஞ்சல்கள் உண்டாகும். உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். வீட்டுக்குள் நல்ல செய்தி வந்து சேரும்.அதனால் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும்.

ரிஷபம்
புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுடைய புத்திக்கூர்மை அதிகரிக்கும். அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கப்பட்ட பணிகளில் சில விரயச் செலவுகள் ஏற்படும். புதுப்புது தொழில்நுட்ப வித்தைகளை கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். பிறருடைய செயல்பாடுகளை குறை சொல்வதைத் தவிர்க்கவும். உங்களுடைய வேலையில் முழு கவனத்தைச் செலுத்துங்கள். தந்தையுடைய செயல்பாடுகளை குறை சொல்வதைத் தவிர்த்து விடுங்கள். விவசாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வேலை செய்கின்ற இடத்தில் மரியாதைகள் பெருகும். உறவினர்கள் வழியாக கலகலப்பான சூழல்கள் உருவாகும்.

மிதுனம்
உங்களுடைய தொழில் சம்பந்தமாக புதிய புதிய முயற்சிகளால் முன்னேற்றங்கள் உண்டாக கொஞ்சம் கால தாமதமாகும். வேலையில் உங்களுடைய பொறுப்புகளும் அதிகாரங்களும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு நல்ல மதிப்பும் நட்பும் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விவாகரங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். நீங்கள் எதிர்பாராத சுப செய்திகளினால் உங்களுக்கு சின்ன சின்ன சுப விரயச் செலவுகள் உண்டாகும். மனதுக்குள் கடவுள் நம்பிக்கையும் ஆன்மீக எண்ணங்களும் அதிகரிக்கும். தந்தைக வழியிலான உறவுகளால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். நீங்கள் செய்கின்ற செயல்களுக்கான அங்கீகாரமும் பாராட்டுக்களும் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கால தாமதமாகக் கிடைக்கும்.

கடகம்
வெளியூர் பயணங்களின் வழியில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். கால்நடைகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். வேலை செய்கின்ற இடங்களில் உடன் பணிபுரிகிற சக ஊழியர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்து, அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். வீட்டுக்குத் தேவையான புதிய பொருள்களை வாங்கி, வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவீர்கள். மனதுக்குள் நினைத்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். தொழிலில் புதிய புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். செய்கிற வேலைகளில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. வீட்டில் உள்ளவர்கள் விரும்பிய பொருள்களை வாங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய நட்பு வட்டம் பெருக ஆரம்பிக்கும்.

சிம்மம்
குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவினால் குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்படும். தானியங்களின் வாயிலாக பொருளாதார லாபங்கள் உண்டாகும். வீட்டில் குழந்தைகளின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய உயர்ந்த எண்ணங்களினால் தொழிலிலும் பல மாற்றங்கள் உண்டாகும். மனதில் சோர்வுகள் உண்டானதால் வேலையில் கொஞ்சம் கவனமின்றி தேவையில்லாத அவச் சொற்களுக்கு ஆளாக நேரிடும். நீங்கள் எதிர்பார்க்காத உதவிகளின் மூலமாக, உங்களுக்கு தொழில் மேன்மைகள் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விவாகாரங்களில் கொஞ்சம் வீண் செலவுகள் அதிகரிக்கும். உங்களுடைய பழைய கடன்களைத் திருப்பி அடைக்கும் வாய்ப்புகளும் பொருளாதார மேன்மையும் வந்து சேரும். பிறருடைய வேலைகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல்கள் ஏற்படும்.

கன்னி
தொழிலில் பங்குதாரர்கள் எடுக்கும் முடிவுகளினால் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்கள் கை்ககு வந்து சேரும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரும். போட்டிகளி்ல வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய பேச்சுகளுக்கு உரிய மரியாதை அதிகரிக்கும். தொழிலில் பங்குதாரர்களுடைய உதவியினால் லாபங்கள் பெருகும். போட்டித் தேர்வுகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீங்கள் நினைத்த செயல்களை முடிப்பதற்கு சிறிது கடுமையான முயற்சிகள் செய்ய வேண்டும்.

துலாம்
புதிய புதிய வாடிக்கையாளர்களுடைய வருகையினால் தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சமூகசேவை புரிகின்றவர்களுக்கு கொஞ்சம் சாதகமற்ற சூழல்கள் உண்டாகும் நிலை இருக்கிறது. பணியில் உள்ளவர்களுக்கு பணி சம்பந்தப்பட்ட கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். உயர்கல்வி பயில்கின்றவர்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்த உங்களுக்கு கொஞ்சம் சாதகமற்ற சூழல்கள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். வியாபாரங்களி்ல இதற்கு முன்னால் உங்களிடம் இருந்து விலகிச் சென்றவர்கள் இப்போது மீண்டும் நெருங்கி வர ஆரம்பித்து விடுவார்கள். எடுத்த காரியங்கள் கொஞ்சம் இழுபறியாக இருப்பதால் அலைச்சலும் பதட்டமும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். சின்ன சின்ன மறதியினால் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.

விருச்சிகம்
சொத்து சேர்க்கைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலமாக சிறந்த அனுகூலங்கள் உண்டாகும். அதேசமயம் உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். எந்த காரியத்தைச் செய்தாலும் அதை நிதானத்துடன் செய்து முடியுங்கள். நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். வீண் அலைச்சல்கள் வந்து போகும். வங்கிகளில் நீங்கள் எதிர்பார்த்தது போல் உங்களுக்கு சாதகமான சூழல் வரும். எதிர்பார்த்த பண வரவின் மூலம் சேமிப்புகள் உயரும். வியாபரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியில் மிகுந்த உயர்வான பொறுப்புக்களை அடைவீர்கள். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

தனுசு
தந்தை வழியிலான உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். நண்பர்களின் உதவியோடு தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பொருளாதார மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளைப் பெறுவீர்கள். சர்வதேச வணிகத்தில் ஈடுபடுகிறவர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் அடைவீர்கள். அரசு அதிகாரிகளின் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை செய்யுமிடத்தில் சக ஊழியர்களால் மன நிம்மதி கிடைக்கும். கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் தேடி வரும். அதன் மூலம் உங்களுடைய மதிப்புகள் உயரும்.

மகரம்
கணவன் மற்றும் மனைவிக்கு இடையே சிறு சிறு மனக்கசப்புகளும் கருத்து வேறுபாடுகளும் வந்து போகும். அதனால் நெருகக்மும் புரிதலும் அதிகரிக்கும். செய்கின்ற செயல்களில் உங்களுடைய வேகம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். பாராட்டுக்கள் வந்து குவியும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அந்த துறை சார்ந்த அறிவு அதிகரிக்கும். சமயக் கருத்துக்கள் தொடர்புடைய விழாக்களில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக ஈடுபாடும் எண்ணங்களும் அதிகரிக்கும். வியாபாரங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். நிலுவையில் இருந்த கடன் தொகைகள் கைக்கு வந்து சேரும். பணியில் ஒருவிதமன குழப்பமான சூழல்கள் உருவாகும்.

கும்பம்
செய்யும் செயல்களில் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டும். உறவினர்களிடம் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். புதிதாக எதையேனும்செய்ய முயற்சித்தால் அதை நன்கு ஆராய்ந்து சிந்தித்து செயல்படுங்கள். பிறருடைய அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மீனம்
கலை சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பொது இடங்களில் உங்களுக்கு ஆதரவுகள் பெருகும். அதனால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். எந்த காரியமாக இருந்தாலும் முழு தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்குவீர்கள். முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். வெகு நாட்களாக இருந்து வந்த பிரச்னை ஒன்றை மிக நிதானமாகக் கையாண்டு, எந்த பிரச்னையுமின்றி சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களின் மூலமாக சின்ன சின்ன பிரச்னைகள் முடிவுக்கு வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். தொழில் ரீதியாக லாபம் அடைய கொஞ்சம் கால தாமதம் ஏற்படும்.



Click it and Unblock the Notifications











