For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த கடவுளை வழிபட வேண்டும்?...

வார ராசிபலன்கள் 28.5.18 to 3.6.18 இந்த ஒரு வாரத்துக்கு 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

|

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

weekly predictions 28.5.18 to 3.6.18

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி 28.5.18 to 3.6.18 வரையிலும் ஒரு வாரத்துக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் அமோக ஆதரவைப் பெறுவீர்கள். பொருள் மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் இழுபறிகளைக் கடந்து ஒரு நல்ல முடிவை எட்டும். நண்பர்களின் உதவியால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். நிர்வாகத் துறை சார்ந்த நண்பர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வாகன விருத்தி உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு சாதகமான சூழலே ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதுவித ட்ரிக்ஸ்ஸை முயற்சி செய்து தொழிலில் நல்ல லாபத்தை அடைவீர்கள். பதவி உயர்விற்கான சாதகமான சூழல்கள் உண்டாகும். சனிக்கிழமை தோறும் பெருமாளை வழிபடுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

தொழிலில் உதவி செய்ய நண்பர்கள் முன்வருவார்கள். அரசுப் பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தொழில் ரீதியாக கொஞ்சம் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உருவாகும். புதிய வீடு, மனைகள் வாங்கும் நேரம் கைகூடி வரும். உடன் வேலை செய்யும் ஊழியர்களின் ஆதரவால் எல்லா வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மனதில் உண்டாகும் குழப்பங்கள் தீரும். இதுவரை இருந்துவந்த உடல் உபாதைகள் தீரும். முருகப் பெருமானை வழிபட்டு வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

மிதுனம்

மிதுனம்

வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, இருவருகு்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் சின்ன சின்ன செலவுகள் வந்து போகும். யாரிடம் விவபதங்களில் கலந்து கொண்டாலும் வெற்றி உங்கள் பக்கம் தான். கல்வித்துறையில் இருப்பவர்கள் முழு திறைமையையும் வெளிப்படுத்தும் நேரம் இது. வெளிநாடு செல்வதற்கான திட்டங்கள் கைகூடி வரும். உறவினர்களிடம் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டால் கொஞ்சம் கவனத்துடன் பேசுங்கள். தொழில் ரீதியாக கொஞ்சம் அலைச்சல் ஏற்படும். வேலையில் இதுவரை இருந்து வந்த சிரமங்கள் குறைய ஆரம்பிக்கும். வேலையிடங்களில் உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. நரசிம்ம பெருமாளை வழிபட்டு வருவது நல்லது.

கடகம்

கடகம்

அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களின் மூலம் நிறைய பண வரவு ஏற்படும். செய்யும் தொழிலில் திருப்தி உண்டாகும். பொது இடங்களில் உங்களுக்கு ஆதரவு அலை ஏற்படும். இருந்தாலும் புதிய நபர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களால் சிறுசிறு குழப்பங்கள் உண்டாகலாம். மனதில் உண்டாகும் தேவையில்லாத எண்ணங்களால் குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களால் பிரச்னைகள் உண்டாக வாய்ப்புண்டு. வணிகத்தில் எதிர்ப்பார்த்ததைவிட அதிக அளவிலான லாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் நட்புறவில் இருப்பீர்கள்.

இந்த வாரம் முழுக்க விஷ்ணுவை வழிபடுங்கள். அதேசமயம் உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். சகல செல்வங்களும் வந்து சேரும்.

சிம்மம்

சிம்மம்

உடன் பிறந்த சகோதரர்களின் ஆதரவு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் சுப செய்திகள் வந்து சேரும். அரசாங்கப் பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். நிர்வாகத்தில் உங்களுடைய பொறுப்புகள் உண்டாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் அத்தனையும் உங்களைத் தானாய் தேடிவரும். போட்டிகளில் நீங்களே வெற்றிக்கனியை பறிப்பீர்கள். தொழில் போட்டிகளை மிக எளிதாக தனி ஆளாக சமாளிப்பீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்தவர்களுடைய தேவையில்லாத விமர்சனங்களை காதில் வாங்கிக் கொள்ளாமல் உங்களுடைய பணியில் கவனமாக முன்னேறிச் செல்லுங்கள். நாக தேவதையை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.

கன்னி

கன்னி

பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் எல்லாம் உண்டாகும். உங்களுடைய வழக்கமான வாடிக்கையாளர்களின் ஆதரவால் தன லாபங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

உங்களுடைய திறமையான பேச்சுக்களால் லாபம் உண்டாகும். எதிர்பாலினத்தவரிடம் நிதானமாக இருங்கள். தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் யாவும் நீங்கி, முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்களால் உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேலையில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகமாகும் நாள். வீட்டுத் தேவையான பொருள்களை வாங்கிக் குவிப்பீர்கள். புதன்கிழமையன்று ஸ்ரீராமரை வழிபடுங்கள்.

துலாம்

துலாம்

வீட்டில் உள்ள பிள்ளைகளுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மனதில் உள்ள கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி அடைவீர்கள். வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் உபாதைகளை சரிசெய்ய போதிய அக்கறை செலுத்துங்கள். எண்ணங்களில் நல்ல மாற்றங்கள் உண்டு. உறவினர்களுடைய வருகையினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழி உறவினர்களால் நல்ல செய்திகள் வந்து சேரும். வேலையிடத்தில் உயர் அதிகாரிகளால் உண்டான தடங்கல்கள் நீங்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களுடைய ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளால் நல்ல பலன்கள் உண்டாகும். நவ கிரகங்களில் உள்ள சந்திரனை வழிபடுங்கள். மனக்கவலைகள் தீரும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக, சொந்த ஊருக்கு பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் மாற்றங்கள் உண்டாக வேண்டுமென்பதற்கான எண்ணங்கள் மேலோங்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய செல்வாக்கு குறைவதற்கான சூழல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பாதகமான பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உண்டாக கொஞ்சம் கால தாமதமாகும். உடன் பிறந்த சகோதரர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். வெளிநாட்டில் இருக்கும் தொழில் தொடர்புகளால் லாபம் உண்டாகும். மகாலட்சுமியை வழிபட வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

தனுசு

தனுசு

வேலை செய்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களுடனான ஆதரவு உண்டாகும். பேச்சுத் திறமையால் லாபத்தை சம்பாதிப்பீர்கள். பொது விஷயத்தில் ஈடுபடுவதால் பலன்கள் உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த திடீர் செலவுகள் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். வாகனப் பயணங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். உறவினர்களிடமோ நண்பர்களிடமோ தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்த்திடுங்கள். சிவாலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு மேற்கொள்ளுங்கள். தீமைகள் விலகி நன்மை உண்டாகும்.

மகரம்

மகரம்

நண்பர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம். நண்பர்களுடன் செலலும் வெளியூர் பயணங்களால் மனதுக்குள் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழி சம்பந்தப்பட்ட உறவுகளின்வழி, கவலைகள் மேலோங்கும். வெளிநாட்டு வணிகத்தில், எதிர்பார்த்த உயர்வு ஏற்பட கொஞ்சம் கால தாமதமாகும். தூர தேசத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் சுமூகமாக விலகும். இதுவரை இழந்த பொருள்களை மீட்பதில் இழுபறி நிலை உண்டாகும். போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். கேளிக்கைகளில் நண்பர்களுடன் ஊர் சுற்றி மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். ஆஞ்சநேயரை வழிபடுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்.

கும்பம்

கும்பம்

போட்டிகளில் வெற்றி உங்களுக்கு சாதகமாகவே அமையும். வெளியூர் பயணங்களால் லாபம் உண்டாகும். உங்களுடைய தேவையில்லாத சந்தேக உணர்வினால், நெருக்கமான உறவினர்களுக்கு இடையே உறவில் விரிசல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகும். அரசுத்தரப்பில் இருந்து, மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்காமலேயே உங்களுக்கு தனவரவு வந்து சேரும். உடன் வேலை செய்பவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு விலங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். மனதில் தேவையற்ற சோர்வுகள், உடல் அசதி உண்டாகும். துர்க்கை அம்மனை வழிபடுங்கள். உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.

மீனம்

மீனம்

உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் குழந்தைகளால் ஆதாயங்கள் உண்டாகும். பயணங்களில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அறக்காரியங்களுக்கு தேவையான உதவிகள் செய்து மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். வாகனங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். தொழிலில் புதுவிதமான சலுகைகளைக் கொடுத்து லாபத்தை அடைவீர்கள். சாதுர்யப் பேச்சுக்களால் புகழ் பெறுவீர்குள். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெறுவீர்கள். மாணவர்களட பதட்டமின்றி நிதானமாக செயல்படுங்கள். நவகிரகத்தில் உள்ள குரு அல்ல்து தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். வீ்ட்டில் சுபிட்சம் உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

weekly predictions 28.5.18 to 3.6.18 what says you should know according your astro signs

There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people.
Story first published: Monday, May 28, 2018, 15:22 [IST]
Desktop Bottom Promotion