For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரம் எந்த ராசிக்காரர் என்னென்ன பிரச்னையை சமாளிக்க வேண்டியிருக்கும்... என்ன பரிகாரம்?

வார ராசிபலன்கள் 16.7.18 to 22.7.18 இந்த ஒரு வாரத்துக்கு 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

|

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

weekly predictions 16.7.18 to 22.7.18

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி 16.7.18 to 22.7.18 வரையிலும் ஒரு வாரத்துக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்களுடைய வாதத் திறமையினால் முழு அறிவுத் திறனையும் வெளிக்காட்டுவீர்கள். ஆன்மீக வழிபாட்டை மனம் நாடிச் செல்லும். வாகனத்தை முதலீடாக வைத்து தொழில் செய்பவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேற சிறிது கால தாமதங்கள் ஏற்படும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உயர் கல்வி படிக்கின்ற மாணவர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். போட்டிகளில் வெற்றியடைய சிறிது கால தாமதம் ஏற்படும். பிள்ளைகளுடைய ஆதரவினால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரியுார்களுடைய ஆதரவுகள் பெருகும். ராகவேந்திரரை வழிபடுங்கள். வெற்றி உங்கள் பக்கம் வரும்.

ரிஷபம்

ரிஷபம்

வேலை சம்பந்தமான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அதன்மூலம் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் வந்து போகும். வீட்டில் உள்ளவர்களுடைய தேவைகளை அறிந்து கொண்டு, அதை நிவர்த்தி செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். உறவினர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்த்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள். வாகனப் பயணங்களால் லாபம் உண்டாகும். ஆனால் கால தாமதம் ஏற்படும். செய்யும் தொழிலில் பல புதிய யுக்திகளைக் கையாள முயற்சி செய்யுங்கள். தொழில் மேன்மை நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழிலில் லாபம் அதிகரிக்கும். விஷ்ணுவை வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கி, நன்மை உண்டாகும்.

மிதுனம்

மிதுனம்

தாய் வழியிலான உறவுகளினால் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார உயர்வு உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் உண்டாகும். தேவையற்ற வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். பணிகளில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். செய்கின்ற தொழில் எதிர் பாலினத்தவர்களால் மேன்மை ஏற்படும். உடல் நலத்தில் இதுவரை இருநு்து வந்த இன்னல்கள் நீங்கும். தேவையற்ற எண்ணங்களால் குழப்பமான மனநிலை உருவாகும். மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள்.உங்களுடைய பொருளாதாரம் மேன்மையடையும்.

கடகம்

கடகம்

உங்களுடைய மனதுக்குள் இருந்து வந்த எண்ணங்களை செயல் திட்ட வடிவமாக மாற்றீவீர்கள். உங்களுடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முழு முயற்சியையும் செய்வீர்கள். உடன் பிறந்த சகோதரர்களின் மூலம் ஆதாயங்கள் உண்டாகும். சங்கீதம் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். தொழிலில் அலைச்சல்கள் இருந்தாலும் அதன் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோர்க்கு அதன்மூலம் லாபங்கள் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு இதுவரையில் இருந்து வந்த பணச்சிக்கல்கள் தீரும். தொழிலில் இருந்து வந்த பொருள் தேக்க நிலைகள் சரியாகும். அரசாங்கத் தரப்பிடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். நன்மை பிறக்கும்.

சிம்மம்

சிம்மம்

புதிய நபர்களிடம் பேசும்போது, கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். நண்பர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். சின்ன சின்ன மருத்துவ செலவுகள் உண்டாகும். எந்த விஷயத்திலும் கொஞ்சம் நிதானமாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ள வேண்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் கொஞ்சம் கால தாமதம் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளின் விஷயத்தில் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். புண்ணிய காரியங்கள் செய்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உங்களுக்குப் பொறுப்புகளும் உயர்வும் அதிகரிக்கும். தற்தையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி, சமாதானம் உண்டாகும். சூரிய பகவானை வழிபடுங்கள்.

கன்னி

கன்னி

நண்பர்களின் மூலமாக எதிர்பாராத சுப விரயச் செலவுகள் உண்டாகும். இணைய தளம் சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரழகளுடைய முழு ஆதரவும் கிடைக்கும். விவசாயப் பணிகளில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆசிகளும் ஆதரவும் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்யிடிருக்கும். மனதுக்குள் இருந்து வந்த தேவையற்ற குழப்பங்கள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். சுக்கிர வழிபாடு உங்களுக்கு நன்மையைத் தரும்.

துலாம்

துலாம்

மனதுக்குள் இருக்கும் சில எண்ணங்களை செயல்படுத்த புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வாகனங்களைப் பராமரிப்பதற்கான செலவுகள் வந்து சேரும். வெளியூர் பயணங்களின் மூலமாக அனுகூலங்கள் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். பதவி உயர்வுக்கான முயுற்சிகள் கைகூடி வரும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பொது சபைகளில் தலைவராய் இருந்து தீர்ப்புகள் சொல்லும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தொழிலில் பங்கு தாரர்களின் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனைவியின் மூலமாக சுப விரயச் செலவுகள் ஏற்படும். முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். நன்மைகள் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செய்யும் தொழிலில் மேன்மை உண்டாவதற்கான முயற்சிகள் உங்களுக்குச் சாதகமான பலன்களை உண்டாக்கும். பொதுத் தொண்டில் ஈடுபடுகிறவர்களுக்கு பாராட்டுக்கள் வந்து குவியும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் ஆதாயங்கள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உருவாகும். எண்ணங்களில் தெளிவு ஏற்படும். தொழில் செய்யும் இடத்தில் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். கணவன், மனைவிக்கு இடையே சில சில பிரச்னைகள் தோன்றி மறையும். கடன் தொல்லையால் சிறுசிறு மன வருத்தங்கள் வந்து போகும். எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் கைக்கு வந்து சேரும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். சித்தர் வழிபாடு உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.

தனுசு

தனுசு

எடுத்த காரியத்தை பல்வேறு இன்னல்களைத் தாண்டியும் கடந்து வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களுக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மறைமுக எதிரிகளை கையாளும் பக்குவத்தை பெறுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கும். பொருள்களைக் கையாளுவதில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. நண்பர்களின் மூலமாக வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். பொது காரியங்களுக்காக பண உதவி செய்வீர்கள். நண்பர்களின் மூலமாக வருமான வாய்ப்புகள் அதிகமாகும். பொது காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். மாணவர்கள் கல்வியில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய தொழில் நுட்பங்களைப் பயில்வதற்கான பயிற்சிகளிலி கலந்து கொள்வீர்கள். துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் சகல செல்வங்களையும் பெறலாம்.

மகரம்

மகரம்

உயர் அதிகாரிகளுடைய முழு நம்பிக்கையையும் பெறுவீர்கள். உழைப்புக்கு ஏற்ற புகழ் பெறுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி சிந்தித்து செயல்படுங்கள். நிர்வாகத்தில் சில சில மாற்றங்களைச் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவீர்குள். சர்வதேச வணிகம் சார்நு்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். வீடு கட்டுவதற்கான புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். கால்நடை பராமரிப்பின் மூலமாக லாபங்கள் உண்டாகும். பணிகளில் உண்டாகிற மந்தத தன்மையின் காரணமாக தேவையில்லாத கெட்ட பெயர் உருவாக வாய்ப்பு உண்டு. பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். லட்சுமி நரவசிம்மரை வழிபட்டு வருவது நன்மை பயக்கும்.

கும்பம்

கும்பம்

தொழில் அபிவிருத்திக்கான கடன் உதவித் தொகைகள் கிடைக்கும். எண்ணிய செயல்களை எண்ணியவாறு செய்து முடிப்பீர்கள். உங்களுடைய எண்ணங்களால் மனம் சஞ்சலம் அடையும். பிறருக்காக உதவிகள் செய்வதால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். பிரபலமாவர்களுடைய நட்புகள் கிடைக்கும். விவாதங்களில் நீங்கள் நினைத்த முடிவுகள் கிடைக்கும். வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். நவ கிரகத்தில் இருக்கின்ற புதனை வழிபடுவது நன்மைகள் தரும்.

மீனம்

மீனம்

அனுபவ ரீதியாக புதிய தொழில்நுட்பங்களைதக் கற்றுக் கொள்வீர்கள். மனதில் உள்ள கவலைகள் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்குள். தொழிலில் மேன்மை அடைவதற்காக வாய்ப்புகள் ஏற்படும். இழந்த பொருள்களை மீட்பதற்கான சூழல்கள் உண்டாகலாம். இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். கணவன், மனைவிகளுக்கு இடையே வந்துபோன சிறு சிறு வாக்குவாதங்கள் குறைந்து அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். புதிய நபர்களுடைய நட்புகள் உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். போட்டி, மற்றம் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். விநாயகரை வழிபாடு செய்யுங்கள். மனதில் உள்ள கவலைகள் தீர்ந்து போகும்.

உங்க ராசியை சொல்லுங்க... உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற பெரிய சக்தி என்னன்னு சொல்றோம்?...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

weekly predictions 16.7.18 to 22.7.18 what says you should know according your astro signs

There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people.
Story first published: Monday, July 16, 2018, 14:56 [IST]
Desktop Bottom Promotion