Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
10 ஆம் தேதிமுதல் 16 ஆம் தேதிக்குள் திடீர் யோகம் உண்டாகப் போகும் ராசி எது தெரியுமா?
வார ராசிபலன்கள் 10.9.18 to 16.9.18 வரை இந்த ஒரு வாரத்துக்கு 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம். அதிலும் ஆவணி என்பது சுப மாதங்களுள் ஒன்று. அது என்னென்ன நன்மைகளை உங்களுக்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள்.

ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே நாம் நினைத்தாலும், அதற்குள்ளே சில அறிவியலும் இருக்கிறது. 9 கோள்களும் எப்படி இயங்குகின்றனவோ அதை வைத்து, நம்முடைய வாழ்க்கையைக் கணிக்கிற முறை தான் இந்த ஜோதிடம். அந்த ஜோதிடத்தில் இந்த வாரம் 10.9.18 முதல் 16.9.18 வரையிலும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

மேஷம்
உடன் பிறந்தவர்களின் மூலம் இன்று உங்களுக்கு சுமூகமான சூழல்கள் உருவாகும். நண்பர்களின் மூலமாக பொருளாதார முன்னேற்றத்துக்கான உதவிகள் கிடைக்கும். தொழிலில் நீங்கள் செய்கின்ற சின்ன சின்ன மாற்றங்களும் கூட, உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பினால் மகிழ்ச்சியான சூழல் உருவுாகும். ஆம்பர செலவுகளைத் தவிர்ப்பீர்கள். சேமிப்புகள் உயர ஆரம்பிக்கும். எதையும் துணிச்சலுடன் செய்யும் ஆற்றலுடன் இருப்பீர்கள். இறை வழிபாட்டில் மனம் லயிக்கும். முக்கியப் பணிகளில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம்
வீட்டில் உள்ளவர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் பொருளாதார லாபங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் இருந்த சின்ன சின்ன சிக்கல்கள் நீங்கி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். நிர்வாகம் சம்பந்தப்பட்ட செயல்களில் உங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக மனதுக்குள் நினைத்து வைத்திருந்த காரியத்தைச் சிஙப்பாகச் செய்து முடிப்பீர்கள். பெற்றோருடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். பயணங்களின் வழியாக நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதனால் தொழிலும் மேன்மையடையும். அடுத்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும்.

மிதுனம்
கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு அதன் மூலம் சில விரயச் செலவுகள் உண்டாகலாம். நீங்கள் எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரைகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களுடன் பேசுகின்ற பொழுது கூட, கொஞ்சம் நிதானமாகச் செயல்படுங்கள். பிறருடைய வேலைகளைக் குறை சொல்லாமல் இருப்பது நல்லது. குடும்ப விவகாரத்தில் மற்றவர்களுடைய தலையீட்டைத் தவிர்த்து விடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய தொழிலில் உள்ள வாடிக்கையாளர்களின் ஆதரவினால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். பயணங்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும்.

கடகம்
தொழில் சம்பந்தப்பட்ட அலைச்சல்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்களே உண்டாகும். நீங்கள் நினைத்த காரியங்களில் சில கால தாமதங்கள் ஏற்படும். தாய்மாமனின் வழியில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். சர்வதேச ரீதியான வணிக முதலீடுகளில் கொஞ்சம் கவனம் தேவை. அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். செய்யும் தொழிலில் உங்களுடைய செல்வாக்குகள் பெருகும். புதிதாகத் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்கு ஏற்படப் போகும் திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த சின்ன சின்ன பிரச்னைகள் குறைந்து நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும்.

சிம்மம்
பொருள் வரவு அதிகரிக்கும். அதன்மூலம் உங்களுடைய சேமிப்பும் உயரும். வீட்டில் உள்ளவர்களிடமோ அல்லது புதிய நபர்களிடமோ பேசும்போது, கொஞ்சம் நிதானம் தேவை. உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய திறமையான, சாதுர்யமான பேச்சுக்களினால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வேலையில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலமாக தொழிலுக்கு புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பயணங்களின் வழியாக, தொழிலில் சில கால தாமதங்கள் உண்டாகும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கொஞ்சம் நிதானப் போக்கைக் கடைபிடியுங்கள். அடைக்க முடியாத பழைய கடன்களால் உங்களுக்கு மன வருத்தம் உண்டாகும். பணியில் முன்னேறுவதற்கான செயல்களைச் செய்வீர்கள். உங்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.

கன்னி
உங்களுக்கு தொழில் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். ஆன்மீக ரீதியான எண்ணங்களில் உங்களுடைய மனம் லயிக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உங்களுடைய முயற்சியினால் சொத்து சேர்க்கைகள் ஏற்படும். இதற்கு முன்பாகப் பிரிந்த உறவினர்கள் வீட்டுக்கு வருகை தருவார்கள். வேலையில் இருந்து வந்த இன்னல்கள் குறைந்து சுமூகமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய திருமண முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் செய்யும் புதுவித முயற்சியினால் நன்மைகள் உண்டாகும். சுரங்கம் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் வேலையில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள்.

துலாம்
வாகனப் பயணங்களினால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். உங்களுடைய உறவினர்களுக்கு இடையே சுமூகமான உறவு நிலை ஏற்படும். தொழிலில் உள்ள பங்குதாரர்களின் உதவியினால் உங்களுக்கு தன லாபங்கள் அதிகரிக்கும். இதுவரையிலும் இழுபறியாக இருந்து வந்த செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பெரியோர்களுடைய ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வேலையில் பதட்டம் ஏதும் இல்லாமல் கொஞ்சம் நிதானமாகச் செயல்படுங்கள். பயணங்களின் மூலமாக தேவையில்லாத வீண் அலைச்சல்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

விருச்சிகம்
உங்களுடன் உடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். மனதுக்குள் தோன்றும் தேவையற்ற குழப்பங்களினால் சோர்வு அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். செய்கின்ற தொழிலில் உங்களுக்குத் திருப்தியான சூழல்கள் உருவாகும். பணிகளில் உங்களுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். உறவினர்களின் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். வீட்டில் உள்ள பெரியோர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகின்ற பொழுது, கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாலினத்தவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள்.

தனுசு
அரசாங்கத் தரப்பிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் உங்களுக்கு உண்டாகும். பொது சபைகளில் மற்றவர்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ள பிள்ளைகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவுறுவதற்கான முயற்சிகளைக் கொஞ்சம் கடினமாக முயற்சி செய்யுங்கள். உறவுகளிடம் சில மனக்கசப்புகள் வந்து போகும். தொழில் சம்பந்தப்பட்ட போட்டிகளைச் சமாளிப்பீர்கள். புதிய நபர்களால் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களுடைய செயல் வேகங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத வீண் விவாதங்களின் மூலம் சாதகமான சூழல்கள் அமையும். உங்களுடைய வாக்குறுதிகளால் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்
தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுடைய லாபம் அதிகரிக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளால் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். ஆன்மீகத்தில் எண்ணங்கள் லயித்து, புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் உங்களுடைய புதிய அணுகுமுறையினால் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாகனப் பழுதுகளைச் சரி செய்வீர்கள். பொன், பொருள் சேர்க்கைகள் அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆசிர்வாதம் முழுவதும் உங்களுக்குக் கிடைக்கும்.

கும்பம்
பொதுக் கூட்டங்களில் பேசுகின்றவர்களுக்கு உங்களுக்குச் சாதகமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். உயர் கல்வி படிக்கின்றவர்களுக்கு சுப விரயச் செலவுகள் உண்டாகும். மனதுக்குள் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் அதிகரிக்கும். தொழிலில் உங்களுடைய செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். அது வெற்றிக்கான சூழல்களை உருவாகும். வேலையில் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். பயணங்களின் மூலமாக சுபிட்சங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே புரிதல் உணர்வுகள் உண்டாகும். பதவி உயர்வுக்கான முயற்சிகள் உங்களுக்குக் கைகூடி வரும். தேவையில்லாத வீண் குழப்பங்கள் நீங்கி, மனம் அமைதி பெறுவீர்கள்.

மீனம்
அடுத்தவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரைகள் உங்களுக்கும் நல்ல பலன்களைத் தரும். பெற்றோர்கள் பற்றிய சிந்தனைகள் உங்களுக்கு மேலோங்கும். வீட்டில் பொருள் சேர்க்கைகள் உண்டாகும். உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். தொழில் சம்பந்தமாக நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய நீண்ட நாள் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் அமைதி காப்பது நல்லது. வெளியூர்ப் பயணங்களின் மூலம் மனம் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட சின்ன சின்ன விவாதங்களினால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும்.



Click it and Unblock the Notifications











