Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
நீங்கள் அணியும் காலணிகள் உங்களின் தலையெழுத்தை எப்படியெல்லாம் மாற்றுகிறது தெரியுமா?
சாஸ்திரங்களின் படி நமது வாழ்க்கையில் துரதிர்ஷ்டம், போராட்டங்கள் மற்றும் கஷ்டங்கள் உருவாக நமது காலணிகளும் ஒருவகையில் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்துமே எதாவது ஒரு கோளுடன் தொடர்புடையதாகும். உங்கள் காலணி மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஜோதிடத்தின் படி உங்கள் காலணியானது சனி கிரகத்துடன் தொடர்புடையது. அதனாலதான் சனிதிசை உள்ளவர்கள் காலணிகளை தானமாக வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சாஸ்திரங்களின் படி நமது வாழ்க்கையில் துரதிர்ஷ்டம், போராட்டங்கள் மற்றும் கஷ்டங்கள் உருவாக நமது காலணிகளும் ஒருவகையில் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. இது நமக்கே தெரியாமல் நடக்க வாய்ப்புள்ளது. வாஸ்துசாஸ்திரத்தின் படி நம்மை விதியை நோக்கி அழைத்துச்செல்வது நமது பாதங்கள்தான். அதனை ஆரோக்கியமாகவும், கவனமாகவும் பாதுகாப்பது பல நல்ல வாய்ப்புகளுக்கு வழிவகுக்கலாம்.

காலணிகள்
நமது முன்னோர்கள் தோல் மாற்றம் இதர காலணிகள் அணிவதில் எந்தவித விதிமுறைகளையும் கையாளவில்ல. ஆனால் அவர்கள் காலணிகளை எப்படி அணிய வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளனர். அதனை பின்பற்றாதபோது நமக்கு எதிர்காலம் குறித்த பல பிரச்சினைகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்படி அவர்கள் காலணிகள் அணிவது குறித்து வகுத்துள்ள சில விதிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

விதிமுறை 1
திருடப்பட்ட அல்லது பரிசாக அளிக்கப்பட்ட காலணிகளை ஒருபோதும் அணியக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த வகையான காலணிகள் உங்களின் இலட்சியத்தை அடைய ஒருபோதும் உதவாது மேலும் உங்களின் அதிர்ஷ்டத்தை குறைப்பதோடு உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் நழுவச்செய்யும்.

விதிமுறை 2
நீங்கள் நேர்காணலுக்கு செல்லும்போது கிழிந்த அல்லது கிழியும் நிலைமையில் உள்ள காலணிகளை ஒருபோதும் அணியக்கூடாது. இது உங்கள் அனைத்து அதிர்ஷ்டத்தையும் துரதிர்ஷ்டமாக மாற்றக்கூடும். கிழிந்த காலணி உங்கள் வெற்றியை தடுக்கும். ஒருவேளை உங்களிடம் நல்ல காலணிகள் இல்லையென்றால் வாங்கவேண்டுமே தவிர ஒருபோதும் திருடக்கூடாது.

விதிமுறை 3
முன்னோர்களின் அறிவுரைப்படி பணியிடத்திற்கு பழுப்பு அல்லது மரக்கலரில் இருக்கும் காலணிகளை அணியக்கூடாது. உங்கள் நேரம் ஏற்கனவே மோசமாக இருந்தால் இந்த நிற காலணிகள் அதனை மேலும் மோசமாக்கக்கூடும். ப்ரவுன் நிற காலணிகளை ஒருபோதும் அலுவலகங்களுக்கு அணிந்து செல்லக்கூடாது.

விதிமுறை 4
வங்கி அல்லது கல்வி நிலையம் தொடர்புடைய அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்களின் பணி பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால் அடர் பழுப்பு நிற காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் வருமானத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

விதிமுறை 5
ஒருவேளை நீங்கள் மருத்துவம், மருந்து அல்லது இரும்பு தொடர்பான வேலை செய்பவராக இருந்தால் நீங்கள் வெள்ளை நிற காலணிகள் அணிவதை அணியக்கூடாது. இந்த இடங்களில் வெள்ளை நிற காலணி அணிவது துரதிர்ஷ்டத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

விதிமுறை 6
நீருடன் தொடர்புடைய வேலையோ அல்லது ஆயுர்வேதத்துடன் தொடர்புடைய வேலையோ செய்பவராக இருந்தால் நீங்கள் நீல நிற காலணிகளை அணியக்கூடாது. அதேபோல துணியால் செய்யப்பட்ட காலணிகளையும் அணியக்கூடாது. நீலம் உங்களுக்கு ஏற்ற நிறமல்ல.

விதிமுறை 7
உணவு உண்ணும்போது காலணிகள் அணியக்கூடாது என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். இது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை சக்திகளை ஈர்க்கும். ஒருவேளை நீங்கள் வெளியிடங்களில் சாப்பிட நேர்ந்தால் முடிந்தவரை காலணிகளை கழட்டிவிட்டு சாப்பிட முயலுங்கள்.

விதிமுறை 8
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் காலணிகளையோ அல்லது காலணிகள் வைக்கும் பலகையையோ வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. இந்த திசைதான் சூரிய ஒளி முதலில் விழும் திசையாகும் எனவே அந்த இடத்தில காலணிகள் இருப்பது உங்கள் வீட்டிற்குள் நுழையும் நேர்மறை சக்திகளை பாதிக்கும்.



Click it and Unblock the Notifications
