சின்ன, சின்ன தவறுகளால், சிரிப்பு வெடிகளாகிப் போன வாகன விளம்பரங்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

யாருமே தவறை தெரிந்தே செய்வதில்லை. ஏன், சில சமயத்தில் நாம் செய்த காரியம் தவறாக போய்விட்டது என்பதை நாம் பல காலம் கழிந்து யாரோ ஒருவர் மூலம் அறிவோம். மேலும், நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கும் படங்கள் அனைத்தையும் தவறானவை என்று சொல்ல முடியாது. தவறான இடத்தில் பிளேஸ் செய்யப்பட்டவை என்றே கூறவேண்டும்.

விளம்பரத்தில் பல வகை இருக்கின்றன அவற்றில் ஒன்று தான் இந்த வாகன விளம்பரம். தமிழ்நாட்டில் நாம் இத்தகைய விளம்பரங்கள் பெரிதாக கண்டதில்லை. அதிகபட்சம் நம் ஊர்களில் பஸ் பின்னாடி ஒரு ஸ்டிக்கரை ஒட்டிவிடுவார்கள் அவ்வளவு தான். சென்ற பார்லிமென்ட் தேர்தலின் போது வோட் பஸ் ஒன்று கிளம்பியது. அதை முழுக்க ஸ்டிக்கரிங் செய்து தேர்தலை விளம்பரம் செய்தனர்.

இதை தமிழில் வாகன விளம்பரம் என்று குறிப்பிடலாம். இத்தகைய விளம்பரங்களின் போது ஜன்னல், கதவு போன்ற இடங்களையும் சேர்த்து தான் ஸ்டிக்கரிங் செய்வார்கள். அத்தகைய தருணத்தில் சில சமயம் நாம் செய்த டிஸைன் நமக்கே ஆப்பாக மாறி போகலாம். அப்படி ஆப்பு வைத்த வாகன விளம்பரங்கள் சிலவன தான் இங்கே நாம் காணவுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சுற்றுலா பயணிகள் பேருந்தில் செயப்பட்டிருந்த வாசக விளம்பரம். அதில், பயணிகளின் பெட்டிகளை வைக்கும் கதவை திறந்த போது முழுப்பெயர் மறைந்து, பாதி மட்டும் தெரியவே, அந்த நிறுவனத்தின் பெயர் பார்ன் டூரிஸ்ட்டாக காட்சி அளித்தது. அதை நம்ம நெட்டிசன்கள் கரக்டாக க்ளிக்கி வைரல் படங்கள் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்.

#2

#2

இந்த விளம்பரத்தை ஓகே செய்தவர் அல்லது ஸ்டிக்கர் டிசைன் செய்தவர் இந்த படத்தை கண்டு ஷிட்! என்று கூட கத்த முடியாது. ஏனெனில், அது அப்படியான இடத்தை தான் குறிக்கிறது. ஒருவேளை குவாலிட்டி அசிஸ்டெண்ட் என்ற வார்த்தை தான் கதைவை ஸ்லைடு செய்ததும் குவாலிட்டி ஆஸ் என்று மாறிவிட்டதோ என்னவோ. எதுக்கும் இனிமேல், இப்படி கதவு பக்கமா ஸ்டிக்கர் விளம்பரம் எல்லாம் பண்ணாதீங்க.

#3

#3

நல்லா நம்ம ஊர் அமுல் விளம்பரதுள்ள வர பாப்பா போல, கொழுகொழுன்னு இருக்கார் இந்த வயசான அம்பி. ஆனா, என்ன பண்ண முடியும் விளம்பரம் பண்றேன்னு பேருல, கண்ணு, வாய், மூக்கு, காதுன்னு எல்லாத்தையும் பிச்சு பிச்சு வெச்சுருக்காங்க.

#4

#4

ஈ.என்.டி டாக்டர் தெரியும், கண் டாக்டர் தெரியும், ஆனா, இதுக்கெல்லாமா டாக்டர் இருக்காங்க. அதுல வேற ஹோம் - பிஸ்னஸ்ன்னு... அதாங்க வீடு - தொழில்ன்னு வேற போட்டிருக்காங்க. ஒருவேளை... வேணாம்.. நாம எதுக்கு கண்டத எல்லாம் யோசிச்சிக்கிட்டு. நாம அப்படிக்கா அடுத்த படத்துக்கு போவோம்.

#5

#5

பயிற்சி... உன்னுடைய... கொண்ணுடு.... அசோகன் வாய்ஸ்ல படிச்சா... வேற மாதிரி இருக்கே. அதாகப்பட்டது ஸ்கில்ஸ் தான் இங்க கில்ஸ் ஆயிடுச்சு. கிட்டத்தட்ட இந்த வாகன விளம்பரமும் இதே மாதிரி செத்துப் போச்சு. மேல மட்டும் இல்ல, கொஞ்சம் கீழயும் பாருங்க. மனிதத்தை பழிவாங்கன்னு ஏதோ அர்த்தத்தில இருக்கு.

#6

#6

ஏம்பா அந்த ஆஸ் டாக்டர் வகையிராவா போலவே இவங்க. ஊரு முழுக்க இப்படியே தப்புதப்பா விளம்பரம் பண்ணி வெச்சா... காலங்காத்தால வேலைக்கு போறவன் எப்படி நிம்மதியா வேலைக்கு போவான். அவன் மனசுல கண்ட எண்ணங்கள் உலவ விடாதீங்க பாஸு!

#7

#7

அவங்க டிசைன் பண்ணி வாகன விளம்பரத்துல ஒட்டுனது என்னவோ எக்ஸ்.எல் பூல் லிமிட்டட் தான். ஆனா, கதவ திறந்தா... எக்ஸ்.எல் பூன்னு இல்ல வருது. தமிழ்ல பூ மணக்கும். ஆங்கிலத்தில பூ நாறுமே... தெரியாதவங்களுக்கு... Poo என்றால் காலையில் கழிக்கும் கடனை குறிப்பிடும்.

#8

#8

அவங்க ஏதோ நல்ல எண்ணத்துல குடிச்சுட்டு ஓட்ட மாட்டங்கன்னு விளம்பரம் பண்ண போக, எப்பவும் போல கதவ ஸ்லைடு பண்ணி திறந்ததும், அந்த வாகன விளம்பரத்தோட அர்த்தமும் ஸ்லைடுல அப்படிக்கா போயிடுச்சு. பாருங்க.. குடிச்சுட்டு தான் ஓட்டுவாங்கன்னு விளம்பரம் மாறிடுச்சு.

#9

#9

மேல் படத்தில் இருப்பது அந்த கம்பெனியின் முழுப்பெயர். ஆனால், அந்த வாகனத்தின் கதவுகளை ஸ்லைடு செய்தவுடன் இருக்கிறதே, அதன் பொருள் "Whores" என்றால் விபச்சார விடுதி என்ற பொருளாக மாறுகிறது. பார்த்தீர்களா? ஒரு சிறிய தவறு, கம்பெனி பெயரை மட்டுமின்றி, வேலையையும் மாற்றிவிட்டது.

#10

#10

கிட்டத்தட்ட இதுவும் நாம் சென்ற படத்தில் பார்த்தது போலவே தான். இந்த அமைப்பு எச்.ஐ.வி குறித்த ஏதோ விழிப்புணர்வு செய்கிறார்கள் போல, ஆனால், வாகனத்தின் கதவுகள் ஸ்லைடான தருணத்தில் Fisting என்று காட்சியளிக்கிறது. ஊடுருவி அடிப்பது போன்ற பொருள் பெறுகிறது. இதை ஆங்கிலத்தில் சில சமயம் "வேற மாதிரியான" சில செயலுடன் ஒப்பிட்டு பேசிக் கொள்வது வழக்கம்.

#11

#11

தமிழ் பிச்சுப் போட்டா தெலுங்கு, கன்னடம் ஜிலேபி மாதிரி தெரியிறது போல, இதென்ன இங்கிலீஷ் பிச்சுப்போட்ட மாதிரி இருக்கு.. என்ன மொழியோ என்னவோ. வாகனத்துல விளம்பரம் பண்றேன்னு பேருல கபாலத்த ஓபன் பண்ணீட்டீங்களே அப்பரசண்டிகளா.

#12

#12

ஸ்டார் பக்குக்கே இந்த நிலைமையா? ஸ்டார் பக் என்றால் எல்லாருக்குமே தெரியும். இதுவொரு அமெரிக்க காபி நிறுவனம். ஒருவர் ஸ்டார் பக்கில் காபி குடித்தால்.. அட அவ்வளோ பெரிய ஆளா நீ என்று வாய் பிளப்போம். ஆன்சைட் போகும் நபர்கள் எல்லாம் இதற்காகவே அங்கே சென்று ஒரு காபி குடித்து படம் எடுத்துக் கொள்வதை நமது நண்பர்கள் வட்டாரத்திலேயே பார்த்திருப்போம். அதுசரி விதி யார விட்டது.

#13

#13

சரியா தான இருக்கு, எங்களால முடியாட்டி நாங்க பண்ண மாட்டோம்.. வேற ஆள பார்த்துட்டே போயிட்டே இருன்னு சொல்றாங்க... யாருப்பா இப்ப இப்படி எல்லாம் பிஸ்னஸ் பண்றாங்க. ஃபேஸ்புக் ஃபேக் அக்கவுன்ட் மாதிரி, அறையும் குறையுமா எதுக்கு என்ன வேலை பண்றோம்ன்னே தெரியாம பண்ணிட்டு சுத்துறாங்க.

#14

#14

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பார்களே.... அது தான். என்ன இருந்தாலும், இந்த வாகன விளம்பரம் அந்த ஆஸ் டாக்டர், ஏனல் சர்வீஸ் ரேஞ்சுக்கு இல்லை தான் என்றாலுமே கூட. கேட்டதுமே ஆண்களை குதுகலிக்க செய்யும் வார்த்தை அல்லவா இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vehicle Ads That Went Wrong and Viral on Net!

Vehicle Ads That Went Wrong and Viral on Net!
Story first published: Friday, March 2, 2018, 17:45 [IST]