For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ணர் ராதையை காதலித்தாலும் திருமணம் செய்யாதது ஏன் என்ற ரகசியம் தெரியுமா? அங்கதான் டுவிஸ்ட்

இங்கே நாம் கடவுளின் கதை பற்றி பார்க்கப்போகிறோம். ஆம். கிருஷ்ணர் மற்றும் ராதைக்கு இடையே இருநு்த உறவு பற்றி பார்க்கப் போகிறோம்.

|

கிருஷ்ணர் என்ற பெயரைச் சொன்னாலே அடுத்து ஒட்டிப் பிறந்த வார்த்தை போல நம் மனதுக்குள் ஓடும் மற்றொரு வார்த்தை ராதை என்பது தான். இவர்கள் இருவருக்கும் அப்படி என்ன தான் உறவு இருந்தது. காதலுக்கு உதாரணமாக இருவரும் சொல்லப்பட்டாலும் கிருஷ்ணர் ராதையைத் திருமணம் செய்து கொள்ளவில்லை.

radha-krishna story

அதேசமயம் கிருஷ்ணர் மறற் பெண்களைத் திருமணம் செய்து கொண்ட பின்னரும்கூட, இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு தொடர்ந்தது. இதற்கு என்ன தான் அர்த்தம் என்ற குழப்பம் இல்லதாவர்களே இருக்க முடியாது. அது என்னவென்று இங்கு பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராதையின் கேள்வி

ராதையின் கேள்வி

ஒரு நாள் ராதாவே கிருஷ்ணரிடம் கேட்டார் " கிருஷ்ணா! நீங்கள் ஏன் ராதாவை காதலிக்கிறீர்கள். ஆனால் திருமணம் என்று வருகுிற போது மட்டும் என்னை விட்டு மற்ற பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்று. அதற்கு கிருஷ்ணர் மிகவும் சுவாரஸ்யமான ஒரு பதிலை கிருஷ்ணர் ராதையிடம் சொன்னாராம்.

கிருஷ்ணரின் பதில்

கிருஷ்ணரின் பதில்

திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கு இடையே நடக்கக்கூடிய ஒன்று. அது ஒரு ஒப்பந்தம். ஆனால் அது எப்போதுமே இரண்டு உயிராகத்தான் இருக்க முடியும். ஆனால் காதல் என்பது அப்படியல்ல. அது ஒரே உயிராக மட்டும் தான் இருக்க முடியும். நாம் இருவரும் எப்போதும் ஒரே உயிர் தான்.இரண்டு நபர்கள் அல்ல என்று சொன்னாராம். நமக்கு இடையே தேவலோக பந்தம் இருக்கிறது. ஆனால் பூலோக திருமணம் நம் இருவருக்கும் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறியிருக்கிறார் கிருஷ்ணர்.

கிருஷ்ணரின் சத்தியம்

கிருஷ்ணரின் சத்தியம்

நம்மால் கணவன் மனைவி ஆக முடியாது என்று கிருஷ்ணர் சொன்னாலும், ராதைக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால், இந்த உலகத்தில் யார் ஒருவர் என்னைப் பற்றி நினைத்தாலும் என்னுடைய பெயருக்கு முன்னால் உன்னுடைய பெயர் தான் அவர்களுக்கு நினைவுக்கு வரும். என் பெயருக்கு முன்னால் ராதைகிருஷ்ணர் என்று உன்னுடைய பெயரைத் தான் சொல்வார்கள். என்னு்ய மற்ற எந்த மனைவியுடைய பெயரும் ஞாபகம் வராது. ஏனென்றால் உன்னுடைய அளவிட முடியாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத காதலுக்கு முன் மற்ற எதுவும் இவ்வுலகில் பெரியது இல்லை.

பால்ய நட்பு

பால்ய நட்பு

ராதை மற்றும் கிருஷ்ணருக்கு இடையே இருந்த காதலுக்கு பாராக்கியா என்று பெயருண்டு. கணவன் மனைவி போல் வாழ்ந்தாலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ராதை மற்றொருவருக்கு மனைவியாகி விட்ட பின்னரும் கூட கிருஷ்ணரை மறக்க முடியவில்லை. ஏனெனில் இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தனர். அதனால் ராதையால் கிருஷ்ணரை மறக்கவே முடியவில்லை. எப்போதுமே கிருஷணருக்கு ஓடி வந்து ராதை நிற்பாள். கிருஷ்ணரும் அவளுடன் விளையாடுவார். எந்த கட்டுப்பாடுகளும் இன்றி, எந்த சங்கடமுமு் இல்லாமல் ஆண், பெண் (கிஷோரா- கிஷோரி) விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

மற்றொரு கதை

மற்றொரு கதை

இப்படி ஒரு விஷயம் ஓடிக் கொண்டிருக்க மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால், கிருஷ்ணர் சிறு வயதில் இருக்கும் பொழுது, ராதை தான் கிருஷ்ணனுக்கு துணையாக வீட்டில் இருப்பாளாம். அப்படியே இருவரும் பிருந்தாவனம் முழுக்க நடந்து கொண்டு, சுற்றித் திரிவார்களாம். அப்படி சுற்றித் திரிகின்ற வேளையில், இருவரும் ஆல மரத்தடியில் இருவரும் இளைப்பாறிக் கொண்டிருந்தார்களாம். இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்ட நிலையில் இருந்த நிலையில் பிரம்மன் ஒரு முனிவர் மற்றும் விருந்தினர்களுடன் தேவலோகத்தில் இருந்து வந்து இறங்கினாராம். அவர்களுக்கு இடையே திருமணம் நடந்ததாம். அதில் பிரம்மனும் தன்னுடைய பங்குக்கு தன்னுடைய கலைத்திறமையைக் காண்பித்தாராம். இப்படியும் ஒரு கதை உண்டு.

திருமணத்துக்குப் பின்

திருமணத்துக்குப் பின்

அப்படி மரத்தடியில் இருவருக்கும் திருமணம் வேத மரபின் படி முடிந்தது. அக்னி வலம் வரும்பொழுது, ராதையின் சேலை நுனி கிருஷ்ணருடைய வேஷ்டியுடன் முடிஞ்சுப் போடப்பட்டு இருந்தது. திருமண வைபோகம் முடிந்ததும் அங்கிருந்த அனைவரும் இடது புறமாக நகர்ந்து நின்று கொண்டனர். அப்போது எல்லோரும் எதிர்பார்த்தது போல் இல்லாமல், மீண்டும் கிருஷ்ணர் சிறு பிள்ளையாகிவிட, ராதை அவரை அவரின் தாய் யசோதையிடம் ஒப்படைத்துவிட்டு, தன்னுடைய வீட்டுக்கு நடக்க ஆரம்பித்து விட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

untold story behind do we worship unmarried radha-krishna together

here we are seeing about the god story. yes.untold story behind do we worship unmarried radha-krishna together.
Story first published: Tuesday, September 4, 2018, 15:32 [IST]
Desktop Bottom Promotion