For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராமருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

இராமருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தது பலரும் அறியாத ஒன்று. அதையும்விட இராமர் மற்றும் மற்ற சகோதரர்களின் பிறப்புக்கே அவரின் சகோதரிதான் காரணம் என்று வெகுசிலரே அறிந்த தகவல்.

|

இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பற்றி நாம் நன்கு அறிவோம். பிறர் மனை நோக்கியதால் மாவீரன் இராவணன் விஷ்ணுவின் அவதாரமான இராமரால் வதைக்கப்பட்ட காவியமே இராமாயணம் ஆகும். இராமாயண போரில் இராமர் வெற்றிபெற உதவியாக இருந்தது இராமரின் சகோதரன் இலட்சுமணன்.

Untold story about Lord Ramas sister

இலட்சுமணனையும் சேர்த்து அவருக்கு சத்ருக்கனன் மற்றும் பரதன் என இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். நாம் அனைவரும் அறிந்தது இது மட்டும்தான். ஆனால் இராமருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தது பலரும் அறியாத ஒன்று. அதையும்விட இராமர் மற்றும் மற்ற சகோதரர்களின் பிறப்புக்கே அவரின் சகோதரிதான் காரணம் என்று வெகுசிலரே அறிந்த தகவல். இராமரின் சகோதரி பற்றி உங்களுக்கு அறியாத தகவல்களை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இராமரின் சகோதரி

இராமரின் சகோதரி

இராமரின் சகோதரி பெயர் சாந்தா. இவர் தசரதர் மற்றும் கெளசல்யாவிற்கு மகளாக பிறந்தவர். ஆனால் இவர் பலநாட்கள் அவர்களுடன் இருக்கவில்லை என்பது வருத்தமான ஒன்றாகும். ஏனெனில் அவர் சிறுவயதிலேயே தசரதரின் நண்பருக்கு தத்துக்கொடுக்க பட்டார். அதனால்தான் இவரை பற்றி பெரும்பாலான குறிப்புகள் இல்லை.

தத்துக்கொடுத்தல்

தத்துக்கொடுத்தல்

ராம்போதா என்பவர் மன்னர் தசரதரின் குழந்தை இல்லாத மற்றொரு மன்னர் ஆவார். எனவே அவர் தசரதரை பார்க்க வந்த போது தசரதரின் மகளை தனக்கு தத்து கொடுக்கும்படி வினவினார். ஏனெனில் தசரதருக்கு மூன்று மனைவிகள் இருப்பதால் அவரால் வெறியை குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று கேட்டார் ராம்போதா.

கௌசல்யாவின் மறுப்பு

கௌசல்யாவின் மறுப்பு

இந்த யோசனைக்கு சாந்தாவின் தாயான கௌசல்யா ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் அவர் தன் மகள் மீது உயிரையே வைத்திருந்தார். இருப்பினும் தசரதர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதற்கு அரைமனதுடன் ஒப்புக்கொண்டார். மேலும் ராம்போதாவின் நிலை கண்டு பாவபட்டு தன் சிறிய மகளை தத்து கொடுக்க ஒப்புக்கொண்டார்.

MOST READ: சாய்பாபாவுக்கு பிடித்த ஆரஞ்சு கலர் ஆடையை இன்னைக்கு எந்தெந்த ராசிகள் அணிய வேண்டும்?

தந்தை மகள் பாசம்

தந்தை மகள் பாசம்

மிகச்சிறிய வயதிலேயே சாந்தா தத்து கொடுக்கப்பட்டதால் அந்த குழந்தை ராம்போதா மன்னர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். அவரின் ராஜ்ஜியத்தில் இளவரசியாக சாந்தா மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார். தன் தந்தை தசரதர் என்பதையே மறந்து ராம்போதா தன் தந்தை என்று நினைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். ராம்போதா மன்னரும் சாந்தா மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தன் உலகமே சாந்தாதான் என்று அவர் வாழ தொடங்கினார்.

இந்திரன் சாபம்

இந்திரன் சாபம்

ஒருநாள் முனிவர் ஒருவர் ராம்போதா மன்னரை பார்த்து உதவிகேட்டு வந்தார். ஆனால் ராம்போதா மன்னரோ தன் மகளுடன் விளையாடிக்கொண்டே அவரை கவனிக்காமல் விட்டுவிட்டார். இதனால் ஆத்திரமுற்ற அந்த முனிவர் அரண்மனை விட்டு நீங்கினார். தன் பக்தர் அவமானப்பட்டதை கண்டு கோபமுற்ற இந்திரன் ராம்போதாவின் நாட்டுக்கு மழை பெறாமல் இருக்க வேண்டுமென்ற சாபம் கொடுத்தார்.

ராம்போதாவின் யோசனை

ராம்போதாவின் யோசனை

இந்திரன் சாபத்தால் ராம்போதா நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவியது. மக்கள் பட்டினியால் துன்புற்றனர். அப்போது அவரின் மந்திரிகள் ரிஷ்யஸ்ரிங்கர் முனிவர் வந்து நாட்டில் யாகம் நடத்தினால் மழை வரும் என்று யோசனை வழங்கினர். உடனே வனத்திற்கு ரதத்தை அனுப்பி அவரை மரியாதையுடன் வரவழைக்க எண்ணினார்.

சாந்தாவின் திருமணம்

சாந்தாவின் திருமணம்

மன்னரின் அழைப்பை ஏற்று அரண்மனைக்கு வந்த ரிஷ்யஸ்ரிங்கர் மன்னர் ராம்போதாவை வணங்கினார். மன்னர் தன் மகளை ரிஷ்யஸ்ரிங்கருக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார் ராம்போதா. அதற்கு ரிஷ்யஸ்ரிங்கரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்ள அவரும் சாந்தாவும் இணைந்து யாகத்தை நடத்தினர். அவர்கள் யாகத்தின் விளைவால் மழை பொழிந்து நாட்டின் நீர்வளம் பெருகியது.

MOST READ: முதலிரவுக்கு பின் ஏன் பெண்கள் தலைக்கு குளிக்க வேண்டும்? காரணம் என்ன?

தசரதரின் கவலை

தசரதரின் கவலை

தன் மகளை தத்து கொடுத்தபின் தசரதர் மிகுந்த கவலையுற்றார். ஏனெனில் அதற்கு பின் அவர்களுக்கு குழந்தை வரமே கிடைக்கவில்லை. இதனால் தசரதரால் ஆட்சியில் கவனம் செலுத்தமுடியவில்லை. அப்போது மகாராணி சுமித்ரை தங்கள் மகளை மணந்த ரிஷ்யஸ்ரிங்கர் இதற்கு உதவி செய்யலாம் என்று யோசனை கூறினார். தசரதருக்கும் அந்த யோசனை சரியென பட்டது. எனவே ரிஷ்யஸ்ரிங்கரை அழைத்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வைக்க எண்ணினார்.

யாகம்

யாகம்

தசரதர் ரிஷ்யஸ்ரிங்கரை சந்தித்து யாகம் செய்ய உதவ கூறும்படி வினவினார். அவரும் தன் மாமனாருக்கு உதவிசெய்ய ஒப்புகொண்டார். சாந்தாவும் அவரின் கணவர் ரிஷ்யஸ்ரிங்கரும் தசரதரின் அரண்மனைக்கு வந்து யாகம் செய்ய தொடங்கினார். யாகம் முடிந்த பின் அவர் மகிமை பொருந்திய பாயசத்தை தசரதரின் மனைவிகளுக்கு வழங்க அறிவுருத்தினர். தசரதரும் அவரின் கூற்றுப்படியே நடந்தார். அதன் விளைவாகவே தசரதருக்கு இராமன், இலட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்கனன் என்ற நன்கு மகன்கள் பிறந்தனர்.

சாந்தா கோவில்

சாந்தா கோவில்

நேபாளத்தில் உள்ள லலித்பூர் என்னும் மாவட்டத்தில் முனிவர் ரிஷ்யஸ்ரிங்கர் மற்றும் சாந்தாவிற்கு ஒரு கோவில் உள்ளது. தனக்கு புத்திர பாக்கியம் வழங்கியதற்கு நன்றிக்கடனாக தசரதர்தான் இது போன்ற கோவிலை எழுப்ப உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

MOST READ: சிலந்தி கடித்துவிட்டால் விஷம் ஏறுமா? உடனே என்ன செய்ய வேண்டும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Untold story about Lord Rama's sister

Few people know that Lord Rama had a sister, whose name was Shanta. Check out more interesting facts about Lord Rama's sister.
Desktop Bottom Promotion