Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தவெக மாநாடு வெற்றிக்கு பின் விஜய் - த்ரிஷா பற்றி பரவும் வதந்தி: ரசிகர்கள் ஏன் இப்படி முடிச்சுப் போடுறாங்க? -
உங்க இதயம் ஆபத்திலிருப்பதை வீட்டிலேயே கண்டறியும் 5 நொடி சோதனை - செஞ்சு பார்த்து உயிரை காப்பதிக்கோங்க -
தலைமுடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடுங்க.. -
சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
அன்னையர் தினத்தில் பூக்களுக்குப் பதில் இதை கொடுங்க… அம்மாவின் ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் பலமடங்கு உயரும்! -
ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
கருப்பு தாஜ்மஹால் பற்றியும் அதற்கும் தாஜ்மஹாலுக்கும் உள்ள அதிசயமான ஒற்றுமைகள் பற்றியும் தெரியுமா?
உலகம் முழுவதும் தாஜ்மஹாலின் உருவமைப்பை போலவே கிட்டத்தட்ட 7 கட்டிடங்கள் உள்ளது. இதில் தாஜ்மஹாலின் தம்பி என்று அழைக்கப்படும் கருப்பு தாஜ்மஹாலும் இந்தியாவில் உள்ளது.
இந்தியாவின் பெருமைகளிலும், கட்டிட கலைகளில் முக்கியமான ஒன்றாகவும் திகழ்வது தாஜ்மஹால். உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதலர்களின் நினைவுச்சின்னமாகவும் விளங்கும் தாஜ்மகாலை பற்றி தெளிவாக கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் சாதாரண ஒரு மனிதருக்கு கூட தாஜ்மஹாலை பற்றி தெரியும்.

தாஜ்மஹாலை சுற்றி திரியும் சர்ச்சைகளும், கதைகளும் ஏராளம். உலகம் முழுவதும் தாஜ்மஹாலின் உருவமைப்பை போலவே கிட்டத்தட்ட 7 கட்டிடங்கள் உள்ளது. தாஜ்மஹாலின் கட்டிட அமைப்பு மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கதைகளும்தான் அதனை உலகப்புகழ் பெற வைத்திருக்கிறது. இதில் தாஜ்மஹாலின் தம்பி என்று அழைக்கப்படும் கருப்பு தாஜ்மஹாலும் இந்தியாவில் உள்ளது. அதுபற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

பிபி கா மக்பரா
தாஜ்மஹாலின் தம்பி எனப்படும் பிபி கா மக்பரா மஹராஷ்ட்ராவில் உள்ள ஒளரங்காபாத்தில் உள்ளது. இதனை தாஜ்மஹாலின் " தூரத்து சொந்தம் " என்றும் கூறுகிறார்கள். அதற்கு காரணம் இவற்றிற்கு இடையே உள்ள தூரம்தான். தாஜ்மஹாலை போலவே இதுவும் ஒரு காதலின் நினைவுச்சின்னம்தான்.

ஒளரங்கசிப்பின் காதல்
முகலாய வம்சத்தின் ஆறாம் மன்னரான ஒளரங்கசிப் தன் முதல் மனைவியான தில்ராஸ் பானு பேகம் நியாபகமாக கட்டியதுதான் பிபி கா மக்பரா. இது அவருடைய தாயார் மும்தாஜின் கல்லறையான தாஜ்மஹாலை போன்ற அமைப்புடன் ஒத்திருக்கிறது. தில்ராஸ் பானு பேகம் தனது 6 வது பிரசவத்தின்போது உடல்நிலை சரியில்லாமல் போனதால் இறந்தார்.

எப்போது கட்டப்பட்டது?
கிபி 1660 ல் தன் மனைவி இறந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒளரங்க சிப் தன் மனைவி நிரந்தர ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காக அவரின் நியாபகமாக கல்லறை ஒன்றை கட்ட ஒளரங்காபாத்தில் இடம் ஒன்றை தேர்ந்தெடுத்தார். அந்த இடத்தில் கட்டப்பட்டதுதான் பிபி க மக்பரா. அப்படியென்றால் மனைவியின் கல்லறை என்று அர்த்தம். ஒளரங்க சிப் தனது ஆட்சிக்காலத்தில் கட்டிய முதல் நினைவுச்சின்னம் இதுதான். ஏனெனில் அவர் எப்பொழுதும் போருக்கு மட்டுமே நேரத்தையும், பணத்தையும் செலவழித்து கொண்டிருந்தார்.

தாஜ்மஹாலுக்கும், பிபி கா மக்பராவுக்கும் உள்ள ஒற்றுமை
தாஜ்மஹால், பிபி கா மக்பரா இரண்டுமே தான் மனைவி மேல் இருந்த காதலால் அவர்களின் கணவர்கள் நினைவுச்சின்னமாக கட்டியது. தாஜ்மஹாலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மும்தாஜின் சொந்த மருமகள்தான் தில்ராஸ் பானு பேகம். இதைவிட ஒரு பெரிய ஒற்றுமை என்னவென்றால் இருவருமே பிரசவத்தின் போது உயிரிழந்தவர்கள்தான். தாஜ்மஹாலின் அமைப்பை திட்டமிட்டவரின் மகன்தான் பிபி கா மக்பரா விற்கு திட்டமிட்டவர் என்பது கூடுதல் சுவராஸ்யம்.

குறைகள்
வரலாற்றில் தன் பெயரும் இருக்க வேண்டுமென்ற ஆசையாலேயே இது கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் இதனை தாஜ்மஹாலின் மோசமான பிரதிபலிப்பு என்கிறார்கள். கிட்டத்தட்ட தாஜ்மஹாலின் அமைப்பை ஒத்திருந்தாலும் கட்டிட அமைப்பு என்று வரும்போது இது தாஜ்மஹாலின் சிறப்பான கட்டிட அமைப்பில் பாதிகூட இல்லை என்பதே உண்மை. தாஜ்மஹாலை போலவே இருந்தாலும் தாஜ்மஹால் நமக்குள் ஏற்படுத்தும் அந்த அற்புத உணர்வை இதனால் தரஇயலவில்லை. குறிப்பாக தாஜ்மஹாலை போல இது முழுவதும் சலவைகற்களால் கட்டப்பட்டது இல்லை.

ஒளரங்கசிப்பின் ஏமாற்றம்
ஒளரங்கசிப் முதலில் தாஜ்மஹாலை விட பிரம்மாண்டமான ஒரு நினைவுச்சின்னத்தை கட்டதான் விரும்பினார். ஆனால் கட்டிடம் தொடங்கிய பின் அவ்வளவு பணம் இல்லாததால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டார். ஏனெனில் மராத்தியர்களுக்கு எதிரான போரில் மிகஅதிக பணத்தை செலவழித்துவிட்டார் ஒளரங்கசிப். இருப்பினும் இது முகலாயர்களின் சிறந்த கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

திட்டமிட்டவர்
முன்பே கூறியது போல தாஜ்மஹாலை கட்டி திட்டம் தீட்டியவரின் மகன்தான்பிபி கா மக்பரா கட்ட திட்டம் தீட்டியவர். அவரின் பெயர் அதா உல்லாஹ். இவர் மிகச்சிறந்த கட்டிடக்கலை நிபுணராக இருந்தாலும் ஒளரங்கசிப்பின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். இவரின் தந்தை உஸ்தாத் அஹ்மத் லஹாரி தாஜ்மஹாலின் அமைப்பை பிரம்மிக்கும் வண்ணம் அமைத்தவர். இப்பொழுது தெரிகிறதா பிபி கா மக்பரா ஏன் தாஜ்மஹாலை போலவே இருக்கிறது என்று. இதனை கட்டிமுடிக்க கிட்டதட்ட ஏழு இலட்சம் வரை செலவானது.



Click it and Unblock the Notifications