For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜப்பானில் வலம்வரும் இந்த பெண்களைப் பற்றி தெரியுமா?

ஜப்பான் நாட்டின் ஜெயிஷா என்ற பெண்களைப் பற்றிய இதுவரை தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்

|

ஜெயிஷா என்பது ஜப்பானில் வாழும் ஒரு இனப் பெண்களைக் குறிக்கும். அவர்கள் எப்போதும் பாரம்பரிய உடையணிந்து தங்கள் நாட்டின் கலை மற்றும் கலாச்சாரங்களை பேணிக்காக்கும் நபர்களாக இருப்பார்கள்.

அவர்களைப் பற்றிய பல்வேறு விதமான தகவல்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் கலையை வளர்ப்பதை விட விபச்சார தொழிலில் ஈடுபடுகிறவர்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது. அவர்கள் ஜப்பான் நாட்டின் தேவதாசிகள் என்றும் சொல்கிறார்கள்.

ஒரு சாரார் அவர்களை மரியாதையாக பேசுவதும் இன்னொரு பக்கம் அதெல்லாம் இல்லை என்று அவர்களை தரக்குறைவாக அடையாளப்படுத்துவதும் நடக்கிறது.

உண்மையில் இந்த பெண்கள் யார்? எதற்காக முகத்தில் அளவுக்கதிகமான மேக்கப்புடனே இவர்கள் வலம்வருகிறார்கள் என்பது குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

1750 களில் தான் ஜப்பான் பெண் ஜெயிசாகள் வந்தார்கள். அதற்கு முன்பாக ஆண்கள் தான் ஜெயிசாக்களாக இருந்தார்கள். போட்டி காரணமாக 1751 ஆண்டு பெண் ஜெயிச்சாக்கள் உண்டு என்று விளம்பரப்படுத்தினார்கள்.

பல நூற்றாண்டுகளாக இந்த ஜெயிசாக்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரும் தங்களை ஜெயிச்சாக்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர்களின் ஒரே நோக்கம் தங்களின் ஆண் கடவுளை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். கடவுள் என்ற இடத்திலிருந்து மெல்ல மன்னர்கள், செல்வந்தர்கள் என்று படிப்படியாக இறங்கியது.

Image Courtesy

#2

#2

இந்த ஜெயிசா என்பவர்கள் தங்கள் உடலை ஒரு போதும் விற்பதில்லை. தங்களைத் தேடி வரும் ஆண் கஸ்டமர்களுக்கு மகிழ்ச்சிப்படுத்துவது அவர்களின் வேலை.

அரசவையில் உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடியவர்களாக ஓய்ரான் என்று அழைக்கப்படுபவர்கள் இங்கே அதிகம் வருவார்களாம். அவர்களிடத்தில் பாட்டு பாடுவது, நடனமாடுவது சில நேரங்களில் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபடுகிறார்கள்.

Image Courtesy

#3

#3

அவர்களின் ஒரே நோக்கம் தங்களைத் தேடி வருகிற கஷ்டமர்களை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்ப வேண்டும், மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்றதும் எல்லாரும் இவர்கள் பாலியல் தொழில் தான் செய்கிறார்கள் என்று நினைத்துப் பேச ஆரம்பித்ததும்.

ஜெயிசாக்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். நாங்கள் எங்களின் கலையை நாங்கள் கற்றுத் தேர்ந்த கலையின் மூலமாகத்தான் ஆண்களை மகிழ்ச்சிப்படுத்துகிறோம். மாறாக நாங்கள் எங்கள் உடலை விற்பதில்லை என்றார்கள்.

Image Courtesy

#4

#4

வரலாற்றில் ஜெயிச்சாக்களைப் பற்றி தவறாக இல்லை. இடையில் தான் ஜெயிசாக்கள் குறித்தான தவறான சித்தரிப்புகள் வந்திருக்கிறது. உண்மையில் ஜெயிச்சாக்கள் என்றால் கலைஞர்கள் என்று அர்த்தம்.

அவர்கள் இசையிலும் நடனத்திலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் இறக்கும் வரை தொடர்ந்து கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதனை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் ஷாமிசென் என்ற இசைக்கருவியை வாசிப்பார்கள். சிலர் தாங்களாகவே பாடல் எழுதி அதற்கேற்ப மெட்டிசைத்து பாடுவார்கள்.

Image Courtesy

#5

#5

இவர்கள் ஆறு வயதாகவும் போது இதற்கான பயிற்சி பள்ளியில் சேர்ப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அல்லது இரண்டு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற ரீதியில் ஆசிரியர்கள் இருப்பார்கள்.

குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டியது கட்டாயம். அதன் பிறகு கலைகளில் தேர்ந்தவர்களை ஜெயிசா என்று அழைப்பார்கள்.

Image Courtesy

#6

#6

ஜெயிசாக்களை பாலியல் தொழிலாளிகள் என்று பேசப்படுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் நடந்த போது நிறைய அமெரிக்கர்கள் ஜப்பானில் இருக்க வேண்டிய கட்டாயம் அவர்கள் ஜப்பானில் பாலியல் தொழிலாளர்களை தேடி அலைந்தனர். அவர்களை எல்லாம் ஈர்க்கும் விதமாக நாங்கள் ஜப்பானின் ஜெயிசாக்கள் என்று சொல்லிக் கொண்டார்கள் அந்த பாலியல் தொழிலாளிப் பெண்கள்.

ஜப்பான் ஜெயிசாக்களுக்கு அதீத வரவேற்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட அந்த பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் நாங்கள் ஜெயிசாக்கள் தான் என்று சொல்ல ஆரம்பித்ததன் விளைவாக உண்மையான ஜெயிசாக்களை கடுமையாக பாதித்தது.

#7

#7

ஒரு பக்கம் ஜப்பானில் வறுமை ஒரு வேளை உணவு வேண்டும் என்றால் அங்கு தங்கியிருக்கும் அமெரிக்க வீரர்களுடன் கண்டிப்பாக படுக்கையை பகிர வேண்டும்.

1949 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஜப்பான் பெண்கள் அமெரிக்க போர்வீரர்களுடன் படுக்க வேண்டிய கட்டாயம். அப்படி செய்தால் தான் உங்களுக்கு உணவு பணம் போன்ற அத்தியாவசியம் கிடைக்கும் என்ற சூழல் இருந்ததால் அமெரிக்கர்களை ஈர்க்கும் விதமாக நாங்கள் ஜப்பானின் ஜெயிசாக்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.

Image Courtesy

#8

#8

ஜெயிசா என்று சொன்னாலே ஒரு பிம்பம் வரும். ஜப்பானின் பாரம்பரிய உடையணிந்து முகம் முழுவதும் வெள்ளை நிறத்திலான பெயிண்ட் அடித்துக் கொண்டும் தலையில் வித்யாசமான கொண்டையை போட்டுக் கொண்டு அழகுப் பதுமைகளாக வலம் வரும் முகம் தன நினைவுக்கு வரும். உண்மையில் எதாவது ஒர் பண்டிகை அல்லது சிறப்பு நாட்களின் போது தான் இப்படியான அலங்காரங்களை செய்கிறார்கள்.

உண்மையில் ஜெயிசாக்கள் இப்படி இருப்பதில்லை. ஜெயிசாக்கான பயிற்சியில் இருப்பவர்கள் தான் இப்படியான அலங்காரங்களை எல்லாம் செய்து கொள்வார்கள். ஜெயிசாவாக தேர்ச்சிப் பெற்றவர்கள் இப்படியான அலங்காரங்களை விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது. ஜெயிசா என்று சொன்னாலே அதீத அலங்காரங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். உண்மையில் அவர்கள் பயிற்சியில் இருப்பவர்கள்.

Image Courtesy

#9

#9

ஆரம்ப காலங்களில் இருந்த ஆண் ஜெயிசாக்களுக்கு முன்னர் இருந்தவர்களின் பெயர் ஷிரப்யோசி.இவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் இவர்கள் ஆண்களைப் போல வேடமிட்டு கஸ்டமர்களை மகிழ்ச்சிபடுத்துவார்கள்.

இவர்கள் மேக்கப் போட்டுக் கொண்டு, கதை சொல்வது, நடனமாடுவது, இசைகருவிகளை மீட்டுவது என்று இருப்பார்கள். உண்மையில் எந்த காரணத்திற்கு அந்தப் பெண்கள் ஏன் ஆட வேடமிட்டு நடித்தார்கள் என்று தெரியவில்லை.

Image Courtesy

#10

#10

இவர்கள் சாமுராய் போன்ற உடையணிந்திருபார்களாம். அந்த காலத்தில் மன்னர்கள், அல்லது செல்வந்தர்கள் இளம் சிறுவர்களை தங்களது காதலர்களாக ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. அதனால் கூட அவர்களின் அபிமானத்தை பெற நினைத்து தங்களை ஆண்களாக காட்டிக் கொள்ளும் அலங்காரங்களை செய்திருக்கலாம் எனப்படுகிறது.

இவர்களுக்கு அடுத்து உருவான ஜெயிசாக்கள் பெண்ணாக வேடமிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy

#11

#11

ஜெயிசாக்களின் தலையில் கண்டிப்பாக ஒரு இடத்தில் வழுக்கை இருக்குமாம். அவர்கள் பெரிய விக் வைத்தோ அல்லது முடியை வித்யாசமாக சீவி அதனை மறைத்து விடுவார்களாம்.

இவர்களுக்கு அளிக்கப்படுகிற மைகோ என்ற பயிற்சியின் போது இந்த வழுக்கை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. முடியை மேலே இழுத்து டைட்டாக பன் போல கட்டிக் கொள்ள வேண்டும். இதனால் பிற முடிகள் வலுவிழந்து விரைவில் சொட்டை ஏற்படும். இந்த சொட்டையை அவர்கள் தங்களுக்கு கிடைத்த ஓர் அங்கீகாரமாகவே பார்க்கிறார்கள். சொட்டை விழுந்தால் அது எங்களுக்கு கிடைத்த கௌரவம். எவ்வளவு தீவிரமாக நாங்கள் பயிற்சி மேற்கொண்டிருக்கிறோம் என்று எங்களுக்கு கிடைக்கும் நற்சான்று அது என்கிறார்கள் ஜெயிசாக்கள்.

Image Courtesy

#12

#12

ஜெயிசாக்களை அவர்களின் உருவத்தை வைத்து நம்மால் எடை போட்டுவிட முடியாது. ஜெயிசாக்களில் முதுமையான பெண்களும் இருக்கிறார்கள். வயதாக வயதாக தான் தங்களின் அழகு கூடுவதாக அவர்கள் நம்புவதால் ஜெயிசாக்களின் முதியவர்களுக்கு அதீத மரியாதை கொடுக்கப்படுகிறது.

முப்பது வயதுக்கு குறைவானவர்கள் தான் முகத்தில் பெயிண்ட் அடிக்கும் பழக்கம் இருக்கிறது. அதன் பிறகு இருப்பவர்கள் இயற்கை அழகை வெளிப்படுத்தும் விதமாக தான் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

Image Courtesy

#13

#13

ஜெயிசாக்களாக இருப்பதற்கு கடுமையான பயிற்சி மட்டுமல்ல திருமணமும் செய்து கொள்ளக்கூடாது. ஒரு வேளை உங்களுக்கு திருமணமாகிவிட்டால் ஜெயிச்சாக்களாக உங்களால் தொடர முடியாது. திருமணத்திற்கு பிறகு அவர்கள் ஜெயிசா என்ற பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவதாக நம்பப்படுகிறது.

இவர்களில் சற்று வயது அதிகமானவர்களுக்கு விலையும் அதிகம் பேசப்படுகிறது. அரசியல்வாதிகள் பெரும்பாலும் வயதான ஜெயிசாக்களை விரும்புவார்களாம்.

Image Courtesy

#14

#14

இன்றைக்கும் ஜெயிசாக்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலங்களில் இருந்தவர்களுக்கும் இப்போது இருக்கிறவர்களுக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கிறது. ஆரம்ப காலங்களில் ஆறு வயதிலிருந்து இதற்கான பயிற்சி ஆரம்பித்தது ஆனால் இன்றைக்கோ பதினைந்து வயதில் தான் ஆரம்பிக்கிறார்கள்.

இதற்கென்று பிரத்யோக பள்ளிக்கூடங்கள் செயல்படும். இன்றைக்கும் அப்படியான பள்ளிக்கூடங்களுக்கு நிறைய வரவேற்பு இருப்பதை உணர்ந்தவர்கள் இன்றைக்கு நாமெல்லாம் குழந்தைகளை சம்மர் வெக்கேஷனில் பாட்டு,நடனம், ஓவியம்,கராத்தே என்று தொடர் வகுப்புகளுக்கு அனுப்புவது போல அவர்கள் பெயருக்கு இந்த பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்.

Image Courtesy

#15

#15

இன்றைக்கும் ஆங்காங்கே ஆண் ஜெயிஷாக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக டோக்கியோவில் இருக்கும் கபுகி மற்றும் சோ ஆகிய நகரங்களில் சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் ஜெயிஷாக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

1960களில் தங்கள் கணவன்மார்கள் வேலைக்கு சென்ற பிறகு தனிமையில் இருக்கும் பணக்கார பெண்களை மகிழ்ச்சிப்படுத்துவது இந்த ஆண் ஜெயிஷாக்களின் பணியாக இருந்திருக்கிறது. பழங்காலத்தில் இருந்தது போல இவர்கள் கலைகளில் சிறந்தவர்களாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Unknown Facts About Geisha Of Japan

Unknown Facts About Geisha Of Japan
Desktop Bottom Promotion