Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சிவபெருமானை பற்றி நாம் அறியாத சிறப்புகள்
சிவபெருமான் அழிக்கும் கடவுள் என மட்டுமே நாம் அறிவோம். அவர் உலக நன்மைக்காக பல அவதாரங்களைப் பற்றியும் அவர் நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றியும் நாம் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்து மதத்தின் முக்கிய கடவுளான சிவபெருமான் முமூர்த்திகளுள் ஒருவர் என அனைவரும் அறிவோம். இந்து புராணங்களின்படி சிவபெருமானே மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக கருதப்படுகிறார். இவருடைய நெற்றிக்கண் உலகில் உள்ள தீமைகளை அழிக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது.

சிவபெருமான் அரக்கர்களை அளிக்க எடுத்த பல அவதாரங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் நாம் அதிகம் கேள்விப்படாத அவதாரங்கள் இன்னும் பல உள்ளது அது மட்டுமின்றி நமக்கு தெரிந்த அவதாரங்களின் சிறப்புகளையே நாம் இன்னும் முழுமையாக அறிந்துகொள்ளவில்லை. சிவபெருமானின் அவதாரங்களையும் அவரின் சிறப்பம்சங்களையும் கூறும் பதிவுதான் இது.

பஞ்சமுக சிவன்
சில கோவில்களில் சிவபெருமான் லிங்க வடிவில் இல்லாமல் பஞ்சமுக உருவத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறார். இந்த ஐந்து முகங்களுக்கும் தனித்தனி பெயர் இருக்கிறது. ஒவ்வொரு முகமும் சிவபெருமானின் ஒரு அம்சத்தை விளக்குகிறது. அவை முறையே இஷானா, தத்புருஷா, அகோரா, வாமதேவா மற்றும் சத்ஜ்யோதா. இஷானா சிவபெருமானின் நிலையான தன்மையை குறிக்கிறது இது தென்கிழக்கு திசையை நோக்கி இருக்கும். தத்புருஷா முகம் சிவபெருமானின் ஈகோவை குறிக்கிறது இது கிழக்கு நோக்கி இருக்கும். அகோரா முகம் சிவபெருமானின் ஆக்ரோஷத்தையும், மறுபிறப்பு ஆற்றலையும் குறிக்கிறது, இந்த முகம் தெற்கு நோக்கி இருக்கும். வாமதேவா முகம் ஈசனின் வைத்திய திறமையையும், பாதுகாக்கும் பண்பையும் பிரதிபலிக்கிறது, இந்த முகம் வடக்கு நோக்கி இருக்கும். சத்ஜ்யோதா சிவபெருமானின் படைப்பாற்றலை பிரதிபலிக்கிறது, இது மேற்கு நோக்கி இருக்கும்.

அனுகிரகமூர்த்தி
இந்த அம்சம் சிவபெருமானுடைய அமைதியான காலத்தை குறிக்கும். ஈசன் அழிக்கும் கடவுள் என மட்டுமே அறிந்த நம்மில் பலருக்கு சிவபெருமான் அனுகிரக மூர்த்தியாய் இருக்கும்போது வரங்களை அள்ளித்தருபவர் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிவபெருமான் தனது குடும்பத்துடனும், பக்தர்களுடன் இருக்கும்போது அனுகிரக மூர்த்தியாக காட்சியளிப்பார்.

உக்கிரமூர்த்தி
சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்பது அனைவரும் அறிந்தது. உக்கிரமூர்த்தியான சிவபெருமான் ருத்ரர், பைரவர், சம்ஹார மூர்த்தி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். உக்கிரமூர்த்தியின் ஒவ்வொரு வடிவமும் பூமியில் உள்ள அரக்கர்களை அழிக்கும் அவதாரமாகும். சிவபெருமானின் பல்வேறு உக்கிரமூர்த்தி அவதாரங்கள் கங்கல பைரவர், கஜாசுர வதமூர்த்தி, திரிபுராந்தகமூர்த்தி, சரபேசமூர்த்தி, கலரிமூர்த்தி, கமண்டகமூர்த்தி, அந்தகாசுர வதமூர்த்தி, பைரவமூர்த்தி என சிவபெருமானின் உக்கிரமூர்த்தி அவதாரங்கள் நீண்டுகொண்டே செல்கிறது. ஒவ்வொரு அவதாரமும் அரக்கர்களை அழிக்கவும் , பூமியில் நீதியை நிலை நாட்டவும் சிவபெருமானால் எடுக்கப்பட்டது.

தாண்டவமூர்த்தி
சிவபெருமான் பல்வேறு நடனங்களின் கடவுளாகவும் கருதப்படுகிறார். இந்திய பாரம்பரிய நடனமான பரதத்தில் இருக்கும் அனைத்து முத்திரைகளும் சிவபெருமானிடம் இருந்தே தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த ஒவ்வொரு முத்திரையும் உலகின் நிலைப்பாடு ஆகும், சிவபெருமான் இதனை தன் பக்தர்களின் துன்பங்களை போக்க பயன்படுத்தியதாக கருதப்படுகிறது. புராணங்களில் தன் மனைவியை மகிழ்விக்க சிவபெருமான் எவ்வாறெல்லாம் நடனம் புரிந்தார் என்ற குறிப்புகளும் உள்ளது.
நடனங்களின் கடவுளாக சிவபெருமானின் நட்ராஜ அவதாரம் கருதப்படுகிறது. அது மட்டுமின்றி ஈசன் மகிழ்ச்சியில் ஆடும் ஆனந்த தாண்டவ மூர்த்தி, உமை தாண்டவ மூர்த்தியாக அன்னை பார்வதியுடன் நடனம் ஆடுதல், திரிபுர தாண்டவ மூர்த்தியாக நடனம் ஆடி திரிபுரசுரனை வதம் செய்தது என சிவபெருமான் தாண்டவ மூர்த்தியாக பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.

ஹரிஹர மூர்த்தி
ஹரிஹரன் அல்லது சங்கரநாராயணன் என்று அறியப்படும் இந்த வடிவம் சிவன் மற்றும் பெருமாள் இணைந்த வடிவமாகும். இது சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் இடையே உள்ள நட்பையும், புரிதலையும் உணர்த்தும்படி உள்ளது. இந்த அவதாரத்தில் வலதுபுறம் ஈசனின் வலதுபுறமும் இடப்புறத்தில் பெருமாளின் இடதுபுறமும் இருக்கும்.

பிக்ஷதனா
பிக்ஷதனா என்பதன் பொருள் பிச்சையெடுத்தல் என்பதாகும். இந்த அவதாரத்தில் அவர் நாடோடியாக அழிந்துகொண்டிருப்பார். சிவபெருமானின் பிக்ஷதன வடிவம் உலகில் உள்ள அகந்தை மற்றும் அறியாமையை அகற்ற வேண்டும் எனபதை குறிக்கும். இந்த வடிவத்தில் சிவபெருமான் ஆடைகள் குறைந்த மற்றும் போன மனநிலையில் இருப்பார். நன்கு கைகளை உடைய துறவி போல சிவபெருமான் இந்த வடிவத்தில் காட்சியளிப்பார்.



Click it and Unblock the Notifications