குழந்தை பிறந்தவுடன் கடைபிடிக்கப்படும் விசித்திரமான கலாச்சாரங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பரந்து விரிந்திருக்கும் உலகில் வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்கள் தனக்கென்று ஓர் கூட்டம்,தனக்கென்ற ஒர் சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டு கூட்டம் கூட்டமாக வாழ்கிறார்கள். அங்கே அவர்களுக்கான கலாச்சாரம், அவர்களுக்கான நடைமுறைகள், சடங்கு சம்பிரதயாங்கள் என ஏரளமான வழக்கங்கள் இருக்கின்றன.

அவர்களின் பண்டைய கால நாகரிகம், வாழ்க்கை முறை, சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களது கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக அவர்களது சடங்கு சம்பிரதாயங்கள் அமைந்திருக்கும். ஒர் உயிர் தோன்றுவதிலிருந்து அந்த உயிர் பிரிவது வரை தான் எத்தனை எத்தனை சடங்குகள் அதிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கைகள்.

இங்கே அப்படியான சில வினோத சடங்குமுறைகளைப் பற்றித் தான் பார்க்கப் போகிறீர்கள். ஓர் குழந்தை பிறந்தவுடன் உலகம் முழுவதும் கடைபிடிக்கிற சில வினோதமான கலாச்சாரங்களைப் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜமைக்கா :

ஜமைக்கா :

ஜமைக்காவில் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் பிறந்தவுடன் வீட்டில் ஒரு மரம் நடுகிறார்கள் . குழந்தை பிறந்த பிறகு அந்த நச்சுக் கொடி தாயிடம் ஒப்படைக்கிறார்கள்.

அவர்கள் வீட்டில் குறிப்பிட்ட இடத்தில் அந்த நச்சுக்கொடியை புதைத்து விடுகிறார்கள். அங்கேயே மரமும் நடப்படுகிறது. ஒரு மனிதன் எங்கிருந்து தோன்றினான் என்பதை இது காட்டும் என்கிறார்கள்.

மேலும், இது குழந்தையின் வாழ்நாளை காட்டுவதாகவும். இதனால் குழந்தைக்கு வாழ்நாள் அதிகரிக்கும் ஆரோக்கியமான வாழ்வு நிலைக்கும் என்று நம்புகிறார்கள்.

Image Courtesy

ஜப்பான் :

ஜப்பான் :

ஜப்பானில் குழந்தையின் நச்சுக்கொடியை பாதுகககிறார்கள். மருத்துவமனையில் குழந்தை பிறந்தவுடன் கட் செய்யப்படும் நச்சுக்கொடியினை ஒரு மரப்பெட்டியில் வைத்து பாதுகாக்கிறார்கள்.

சில இடங்களில் மருத்துவமனையிலேயே இப்படி பாதுகாத்து தாய்மார்களிடம் கொடுக்கிறார்கள். அதனை பாதுகாப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு பலப்படும் என்கிறார்கள்.

Image Courtesy

அதீத குளிர் :

அதீத குளிர் :

டேனிஷ் மற்றும் ஸ்வீடிஷ் நாட்டில் இந்த வழக்கம் இருக்கிறது. பச்சியளம் குழந்தைகளை வெளியில்,பால்கனியில் படுக்க வைக்கிறார்கள். அங்கே கிட்டத்தட்ட -57டிகிரி செல்சியஸ் தான் டெம்ப்பரேச்சர் இருக்கிறது. இப்படிச் செய்வதனால் நல்ல சுத்தமான காற்றை குழந்தை சுவாசிக்கும் என்றும் உணவு,தூக்கம் ஆகியவை குழந்தைக்கு சீராக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

டேனிஷ் அரசாங்கமே இதனை வழிமொழிகிறது.

Image Courtesy

ஃபின்லேண்ட் :

ஃபின்லேண்ட் :

ஃபின்லாந்தில் இந்த வழக்கம் 75 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கிறது. அந்த நாட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அரசாங்கத்திடமிருந்து ஒரு பாக்ஸ் வருகிறது. அதில் குழந்தைக்கு தேவையான எல்லா பொருட்களும் இருக்கிறது.

பெற்றோரின் வாழ்க்கைத் தரம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் புதிதாக பிறக்கிற எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான கவனிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இது.

Image Courtesy

எகிப்து :

எகிப்து :

வெள்ளைத் துண்டியில் குழந்தையை சுற்றி படுக்க வைக்கிறார். இது குழந்தை இந்த வாழ்க்கையின் இன்பங்களையும் துன்பங்களையும் பழக்கப்படுத்திக் கொள்ளும் என்கிறார்கள். அதன் பிறகு தரையில் ஒரு விரிப்பை விரித்து அதில் குழந்தையை படுக்க வைக்கிறார்கள் அருகில் கூர்மையான கத்தியும் இருக்கிறது.

இது குழந்தையின் பயத்தைப் போக்க,

அதனைச் சுற்றி குழந்தைக்கான பரிசுப்பொருட்கள், தானியங்கள்,தங்கம் ஆகியவை வைக்கப் படுகிறது.இது குழந்தைக்கு தன் வாழ்நாளில் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக.

Image Courtesy

 அர்மீனியா :

அர்மீனியா :

குழந்தைக்கு முதல் பல் முளைக்கத் துவங்கும் போது அர்மீனியாவில் இருக்கிற பெற்றோர்கள் அக்ரா ஹாதிக் என்ற குழந்தைக்கான விழாவை கொண்டாடுகிறார்கள்.

குழந்தையைச் சுற்றி பல பொருட்கள் வைக்கிறார்கள் அவற்றில் எதாவது ஒன்றினை குழந்தை தேர்வு செய்ய வேண்டும்.அதுவே குழந்தையின் எதிர்காலம் என்று தீர்மானிக்கப்படுகிறது. அதாவது வருங்காலத்தில் தான் படித்து என்னவாகப்போகிறேன் என்பதை குழந்தை அப்போதே தீர்மானிக்கிறதாம்.

Image Courtesy

சீனா :

சீனா :

சீனாவில் குழந்தை பிறந்து முதல் மாதத்தில் வருகிற முழு பவுர்ணமியன்று இந்த விழாவினை கொண்டாடுகிறார்கள். உறவுகள் எல்லாரையும் இந்த நிகழ்வுக்கு அழைக்கிறார்கள். அவர்களுக்கு குழந்தைக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை கொடுக்கிறார்கள்.

இந்த நேரத்தில் குழந்தையின் பெற்றோருக்கு சிகப்பு சாயம் பூசப்பட்ட முட்டை பரிசாக கொடுப்பது ஓர் வழக்கமாகவே இருக்கிறது.

Image Courtesy

கலாச்சாரம் :

கலாச்சாரம் :

சீன கலாச்சாரத்தில் வாழ்க்கையில் புதிய மாற்றம் வந்திருக்கிறது என்பதற்கான அடையாளமாய் முட்டையை பயன்படுத்துகிறார்கள். அதில் சிகப்பு மையை பூசுவதால் இப்போது மாறியிருக்கும் உங்களது வாழ்க்கை முறை உங்களுக்கு அளவற்ற சந்தோசத்தை கொடுக்கும் என்று நம்புகிறார்கள்.

குழந்தைக்கு கொடுக்கப்படுகிற பரிசுப் பொருட்களில் இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றவாறு ஆடைகள், பொம்மைகள் ஆகியவை கொடுக்கப்பட்டாலும் பணத்தை சிகப்பு நிற பேப்பரிலோ அல்லது துணியிலோ சுற்றிக் கொடுக்கிறார்கள்.

Image Courtesy

பாலி :

பாலி :

நம்மூர்களில் குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடும் என்ற காரணத்தினால் குழந்தையை வெறும் தரையில் உட்காரவோ அல்லது விளையாடவோ விடமாட்டார்கள். ஆனால் பாலியில் குழந்தை சொர்கத்திலிருந்து நமக்கு கிடைத்த வரம் என்று நம்புவதால் குழந்தையை வெறும் தரையில் நடக்க விடுவதில்லையாம்.

குழந்தை பிறந்து 210 நாட்கள் வரை இந்த வழக்கம் தொடர்கிறது. அதன் பிறகு ஒரு நன்னாளில் குழந்தையை தரையில் நடக்க வைப்பதற்கான சடங்கு நடக்கிறது. இந்த சடங்கு முடிந்தவுடன் குழந்தை மனிதனாக மாறிவிடுகிறான் அவன் இந்த பூமியில் வாழத் தகுதி படைத்தவன் ஆகிவிடுகிறான் என்று நம்பப்படுகிறது.

நைஜீரியா :

நைஜீரியா :

பெண்குழந்தை என்றால் குழந்தை பிறந்த ஏழாம் நாளும், ஆண் குழந்தை என்றால் ஒன்பதாம் நாளும் இந்த சடங்கு நடக்கிறது. இதில் குழந்தைக்கு பல சுவைகள் சுவைக்க வைக்கிறார்கள். முதலில் குழந்தைக்கு எந்த எதிரியும் இருக்கக்கூடாது என்பதை உணர்த்தும் விதமாக தண்ணீர் கொடுக்கப்படுகிறது.

நல்லபடியான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக பால்ம் ஆயில் கொடுக்கப்படுகிறது துவர்ப்பு சுவையுடைய ஒர் உருண்டையை சுவைக்க வைக்கிறார்கள். இது நைஜீரியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். இது நீண்ட ஆயுளுக்கு வழங்கப்படுகிறது. வாழ்க்கையின் இன்பங்களையும் துன்பங்களையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சர்க்கரை,உப்பு, சிறிதளவு மிளகுத்தூள் கலந்த தண்ணீரை கொடுக்கிறார்கள்.

Image Courtesy

 பிரேசில் :

பிரேசில் :

குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருக்கும் போது. குழந்தையை பார்க்க வருகிறவர்களுக்காக தாயே ஒரு பரிசுப் பொருட்களை வாங்கி வைக்கிறார். குழந்தை பிறப்பதற்கு முன்னாலேயே இந்த சடங்குகள் நடக்கின்றன. சின்ன சின்ன பரிசுப் பொருட்களாகவே அவை இருக்கிறது.

சில நேரங்களில் குழந்தையின் பெயரும், குழந்தையை வந்து ஆசிர்வதித்ததற்கும் நன்றி என்று அதில் கூறப்பட்டிருக்கும்.

Image Courtesy

மலேசியா :

மலேசியா :

குழந்தை பிறந்தவுடன் ஏற்படுகிற உடல் மற்றும் மன மாற்றத்தினால் தாய்மார்கள் பயங்கர சிரமத்திற்கு உள்ளாவார்கள். இதற்காக மலேசியாவில் நடைமுறையில் இருக்கிற வழக்கம் தான் ஸ்டோன் மசாஜ். தாய்மார்களின் ஆரோக்கியத்திற்காக இதனை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.குழந்தை பிறப்பிற்கு பிறகு இதனை ஓர் சடங்காகவே கடைபிடிக்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse baby child delivery mother
English summary

Traditions Which Follow After Child Birth

Traditions Which Follow After Child Birth
Story first published: Friday, April 13, 2018, 10:10 [IST]