Latest Updates
-
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தவெக மாநாடு வெற்றிக்கு பின் விஜய் - த்ரிஷா பற்றி பரவும் வதந்தி: ரசிகர்கள் ஏன் இப்படி முடிச்சுப் போடுறாங்க? -
உங்க இதயம் ஆபத்திலிருப்பதை வீட்டிலேயே கண்டறியும் 5 நொடி சோதனை - செஞ்சு பார்த்து உயிரை காப்பதிக்கோங்க
சாய்பாபாவின் முழு அருளையும் இன்றைக்கு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின்
நம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும். சிலரோ அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காணமோ என்று கூட நினைக்கலாம்.

அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம். எந்தெந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியும் பாராட்டுக்களும் புகழும் கிடைக்கப்போகின்றன என்று தெரிந்து கொள்வோம். குறிப்பாக இன்று வியாழக்கிழமை என்பதால் சாய்பாபாவின் மாலை நேர பூஜைகளில் கலந்து கொண்டால் மேஷம், துலாம், விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் இறைவனின் அருளோடு லாபமும் அடைய முடியும்.

மேஷம்
வீட்டின் பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேற்றமான சூழலே காணப்படும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகிவிடும். பெரியோர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். புதிய வேலைக்கான முயற்சிகள் உங்களுக்கு எதிர்பார்த்த பலன்களைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
சமூக சேவை புரிகிறவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும் வாய்ப்புகள் உண்டாகும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வுகள் மேம்படும். உடன் பிறப்புகளிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணிகளில் தேவையில்லாத அலைச்சல்களும் அதனால் வீண் விரயங்களும் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தருகிற எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

மிதுனம்
எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் திருப்தியான சூழல்கள் உண்டாகும். செய்கின்ற தொழிலில் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் வந்து சேரும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே எண்ணங்களின் ஒற்றுமையினால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கடகம்
நிலுவையில் இருந்து வந்த பண வரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். புதிய முதலீடுகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வேளாண்மை சம்பந்தப்பட்ட தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். மனதில் உள்ள கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். திருமண வரன்கள் கைகூடி வரும். வாகன வசதிகள் மேம்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய வாக்கு வன்மையின் காரணமாக உங்களுக்கு பெரும் லாபம் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமையும் நெருக்கமும் அதிகரிக்கும். புதிய நபர்களுடைய ஆதரவினால் சுபிட்சம் பெருகும். தந்தையினுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீடு மற்றும் மனை விவகாரங்ளில் சின்ன சின்ன தடைகள் வந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி
இசைக் கலைஞர்களுக்கு உங்களுடைய திறமைக்கேற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுக்கான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பயணங்களில் இருந்து வந்த தடைகளும் இன்னல்களும் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
தொழிலில் உங்களுக்கு இருக்கின்ற திறமை மற்றும் நம்பிக்கையினால் உங்களுடைய மதிப்புகள் அதிகரிக்கும். புதிய பொருள் சேர்க்கைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
தாய் வழியிலாக உறவுகளின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும் வாய்ப்புண்டு. இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுகிறவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் கால தாமதங்கள் உண்டாகலாம். அலைச்சல்கள் உண்டாகும். வேலைப்பளுவும் முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

தனுசு
பொதுக்கூட்டங்களில் நீங்கள் பேசுகின்றபோது உங்களுக்கான ஆதரவுகள் அதிகரிக்கும். வழக்குகளில் இழுபறி நிலைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடைய பாராட்டுக்கள் கிடைக்கும். நீர் சம்பந்தப்பட்ட பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். அதிக கடன் தொல்லையால் மன வருத்தங்கள் உண்டாகும். இன்று அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
பங்குதாரர்களுடைய உதவியினால் தொழிலில் பல புதிய வாய்ப்புகள் உண்டாகும். பொது நல காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கின்ற போது, வீட்டில் உள்ள பெரியோர்களின் முக்கிய ஆலோசனைகளும் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வாகனப் பயனங்களில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கும்பம்
நீங்கள் எதிர்பாராத சில முக்கிய செலவுகளின் மூலமாக நெருக்கடியான சூழல்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையினால் மனச்சோர்வு உண்டாகும் வாய்ப்புண்டு. நண்பர்களிடம் வீணான விதாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டமம் என்பதால் செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மீனம்
அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பெரிய மகான்களுடைய தரிசனமும் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். மனதில் புதிய எண்ணங்கள் உருவாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தையின் பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த சின்ன சின்ன சிக்கல்களும் குறைய ஆரம்பிக்கும். செய்கின்ற தொழிலில் பல புதிய வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications