TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
இந்த பொருட்களை வியாழக்கிழமையன்று தானமாக கொடுத்தால் அனைத்து செல்வங்களும் உங்களை வந்து சேரும்
நமது சமூகத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு சிறப்பான நாளாக இருக்கும். ஆனால் வியாழக்கிழமை மட்டும் பல கடவுள்களுக்கு மிகச்சிறப்பான நாளாகும். இந்த கிழமைகளில் எதனை தொடங்கினாலும் அதற்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். அதனால்தான் பெரும்பாலான தொழில்களும், செயல்களும் வியாழக்கிழமைகளில் தொடங்கப்படுகிறது.
வியாழக்கிழமை அன்று பெரும்பாலான மக்கள் தக்ஷிணாமூர்த்தியையும், சாய்பாபாவையும் வணங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் வியாழக்கிழமையன்று விஷ்ணுவை வழிபடுவதும் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். வியாழக்கிழமையன்று நீங்கள் செய்யும் எந்தவொரு சிறிய நல்ல காரியமாக இருந்தாலும் அது பல மடங்காக உங்களுக்கு திரும்ப கிடைக்கும். இந்த பதிவில் வியாழக்கிழமையன்று நீங்கள் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பிரஜாபதி
தேவர்களின் குருவான பிரஜாபதி ஒன்பது கிரகங்களுள் மிகவும் முக்கியமான ஒருவராவார். எவர் ஒருவர் வாழ்க்கையில் இவரின் அருள் பூரணமாக கிடைக்கிறதோ அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள். இவர் வீற்றிருக்கும் கிரகம்தான் வியாழன் ஆகும். எனவே வியாழக்கிழமைகளில் நீங்கள் செய்யும் நற்செயல்கள் இவரின் அருளை உங்களுக்கு பெற்றுத்தரும்.
விளக்கேற்றுதல்
மற்ற நாட்களை போல் அல்லாமல் வியாழக்கிழமை அன்று மட்டுமாவது அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு தூய்மையான மனதுடன் விஷ்ணு பகவானை வணங்கிவிட்டு அவரின் படத்திற்கு மஞ்சள் நிற மலர்களை அணிவித்து நெய்விளக்கேற்றி வழிபடுங்கள்.
மஞ்சள் துணி
புராணங்களின் படி மஞ்சள் என்பது செல்வத்தின் அடையாளமாகும். அந்த வகையில் வியாழக்கிழமையன்று யாருக்காவது மஞ்சள் நிற துணியை தானமாக அளிப்பது உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கொண்டுவரும்.
மஞ்சள் நிற இனிப்புகள்
சிவபெருமானுக்கு இனிப்புகள் வைத்து வழிபடுவது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும். குறிப்பாக வியாழக்கிழமையன்று சிவபெருமானுக்கு மஞ்சள் நிற இனிப்புகள் வைத்து வழிபடுவது உங்கள் வாழ்வில் இனிமையை சேர்ப்பதுடன் உங்களை சுற்றியுள்ள தீயசக்திகளை விரட்டியடிக்கும்.
MOST READ: இதெல்லாம் நியாயமா மக்களே, பெத்தவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க...? - # Funny Photos
வாழை மர வழிபாடு
வாழையடி வாழை என வாழ்த்துவது போல வியாழனன்று நீங்கள் செய்யும் வாழை மர வழிபாடு உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்கும். மஞ்சள் நிற இனிப்புகள் மற்றும் துணியை வைத்து வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். மற்றவர்களுக்கு மஞ்சள் நிற வாழைப்பழம் வழங்குவதும் மங்களகரமானதாகும்.
மஞ்சள் நிற ஆடை
முடிந்தவரை வியாழக்கிழமையன்று மஞ்சள் நிற ஆடை அணிய முயலுங்கள். இது உங்களுக்கு சிறப்பான பலனை அளிக்காவிட்டாலும் உங்களை மனதளவில் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
மந்திரம்
உங்கள் வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செல்வம் அதிகம் கிடைக்க திருமால் முன்பு அமர்ந்து " ஓம் நமஹ நாராயணா " என்னும் மந்திரத்தை 108 முறை கூறுங்கள்.
விரதம்
வியாழக்கிழமையன்று விரதம் இருப்பது உங்களுக்கு பல நல்லப்பயன்களை பெற்றுத்தரும். குறிப்பாக வியாழக்கிழமை விரதம் இருப்பது உங்கள் திருமண வாழ்வில் உள்ள தடைகளை அகற்ற உதவும். மேலும் இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது உங்களுக்கு குறையா செல்வத்தை வழங்கும். ஒருவேளை விரதம் இருக்கவில்லையென்றாலும் சாப்பாட்டில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
MOST READ: உங்கள் மூளை சரியாக செயல்பட இன்றே இந்த உணவுகள் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்