சைக்கோ சங்கர்: பெண்களை கொன்று பிணத்துடன் செக்ஸில் ஈடுபட்ட தமிழக சீரியல் கில்லர்!

Posted By: Staff
Subscribe to Boldsky
பெண்களை கொன்று உறவில் ஈடுபட்ட சைக்கோ ஷங்கர்..யார் இவன்?- வீடியோ

சென்ற மாதம் பெங்களூரு சிறையில் இருந்த சைக்கோ சங்கர் கழுத்து பிளவு ஏற்பட்டு இறந்துக் கிடந்தான். பெரும்பாலும் கற்பழித்து கொலை செய்யும் சீரியல் கில்லார்கள் என்றாலே அமெரிக்காவில் நடந்த பல சம்பவங்கள் தான் நினைவிற்கு வரும்.

அந்த அளவிற்கு மிகவும் கொடூரமான சீரியல் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகள், குற்றங்கள் அங்கே நடந்துள்ளன.

ஆனால், சைக்கோ சங்கர் அவர்களுக்கு சற்றும் குறைந்தவன் அல்ல. ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்களை இவன் கடத்தி கற்பழித்து கொன்றுள்ளான். சில முறை இறந்த பிறகும் கூட பிணங்களோடு உறவு கொண்டான் என்றும் கூறப்பட்டிருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சேலம்!

சேலம்!

சைக்கோ சங்கர் என்று அறியப்படும் இவனது உண்மை பெயர் எம். சங்கர் (அ) ஜெயசங்கர் என்று அறியப்படுகிறது. இவனது பூர்வீகம் சேலம் மாவட்டத்தில் இருக்கும் எடப்பாடி அருகே அமைந்திருக்கும் கண்ணியம்பட்டி.

ட்ரக் டிரைவர்!

ட்ரக் டிரைவர்!

சைக்கோ சங்கர் ட்ரக் ஓட்டுனராக வேலை செய்து வந்தான். இவன் 12ம் வகுப்பு வரையிலும் தான் படித்திருந்தான். ஆரம்பக் காலகட்டத்தில் கிளீனராக வேலை செய்து வந்த ஷங்கர், பிறகு டிரைவராக மாறினான். இவனுக்கு சரளமாக தமிழ், கன்னடம் மற்றும் இந்தி பேச வரும்.

பெண் கான்ஸ்டபிள்!

பெண் கான்ஸ்டபிள்!

2009 - 2011 இடைப்பட்ட காலத்தில் சைகோ சங்கர் பல கற்பழிப்பு கொலை குற்றங்கள் செய்திருந்தாலும் கூட. ஒருமுறை அன்றைய துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பெருமாநல்லூர் பங்கெடுத்துக் கொண்ட விழாவிற்கு பந்தோபஸ்துக்கு சென்றிருந்த எம். ஜெயமணி (39) என்ற பெண் கான்ஸ்டபிளை கற்பழித்து, கொலை செய்த போதுதான், இவன் போலீசாரால் தேடப்பட்டான்.

கற்பழிப்பு!

கற்பழிப்பு!

பெண் கான்ஸ்டபிள் எம். ஜெயமணியை கொலை செய்வதற்கு முன் சைக்கோ சங்கர் கடத்தி, கற்பளித்திருந்தான் என்று விசாரணையின் போது கண்டறியப்பட்டது. அக்டோபர் மாதம் 19 தேதி 2009 அன்று சைகோ சங்கர் கைதானான்.

அதிகரித்த வழக்குகள்..

அதிகரித்த வழக்குகள்..

ஆரம்பத்தில் ஒரு கொலை வழக்கில் தேடப்பட்ட சைக்கோ சங்கர், கைதான பிறகு தான் அவனது குற்றப் பின்னணிகள் மற்றும் வரலாறு கண்டறியப்பட்டது. 2008-09க்கு உட்பட்ட காலத்தில் மட்டுமே திருப்பூர், சேலம், தர்மபுரியை சேர்ந்த 13 பெண்களை கற்பழிப்பு மற்றும் கொலை, ஏழு பெண்களை கற்பழிப்பு என பல குற்றங்கள் செய்திருந்தான் சைக்கோ சங்கர்.

தப்பியோட்டம்!

தப்பியோட்டம்!

ஒரு கொலை வழக்கு தொடர்பாக சைகோ சங்கரை தர்மபுரி ஃபாஸ்ட் ட்ராக் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டான். அப்போது சின்னசாமி மற்றும் ராஜவேலு என்ற காவலர்களால் அழைத்து செல்லப்பட்ட சைக்கோ சங்கர் மார்ச் 17,2011 அன்று சேலம் பேருந்து நிலையத்தில் தப்பியோடிவிட்டான். அதிலிருந்து இரண்டே நாட்களில் (மார்ச் 19) சின்னசாமி தன்னை தானே அவமானம் தாங்காமல் சுட்டுக் கொண்டார்.

மீண்டும் குற்றம்!

மீண்டும் குற்றம்!

தப்பியோடிய காலக்கட்டத்தில் சைக்கோ சங்கர் மீண்டும் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட துவங்கினான். கர்நாடகத்தின் பெல்லாரி பகுதியை சேர்ந்த ஆறு பெண்களை கற்பழித்து கொலை செய்திருந்தான். மேலும், தர்மபுரியை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் குழந்தையை கொலை செய்திருந்தான்.

கைதானான்!

கைதானான்!

பிறகு 2011 மே நான்காம் நாள் பிஜாப்பூர் காவலர்களால் சங்கர் கைதானான். அப்போது கர்நாடக போலீஸ் விசாரித்த போது தனியாக இருக்கும் பெண்களை மட்டும் தான் நான் டார்கெட் செய்து கடத்தி, கற்பழித்து கொலை செய்து வந்தேன் என்று கூறினான்.

தண்டனை!

தண்டனை!

ஓசூர் துணை நீதிமன்றம் இவன் செய்த குற்றங்களுக்கு ஏப்ரல் 29,2013 அன்று பத்தாண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. அப்படி இருந்தும் செப்டம்பர் 1, 2013 அன்று பலத்த பாதுகாப்பை தாண்டி சிறையில் இருந்து தப்பித்து ஓடினான். மீண்டும் போலீஸ் இவனை ஐந்தே நாட்களில் செப்டம்பர் 6 அன்று கைது செய்து சிறையில் அடைத்தது.

தற்கொலை!

தற்கொலை!

பிறகு ஐந்தாண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சைக்கோ சங்கர் கடந்த பிப்ரவரி 27, 2018 அன்று கழுத்து அறுந்த நிலையில் சிறையில் இறந்துக் கிடந்தான். சைகோ சங்கர் தற்கொலை செய்துக் கொண்டான் என்று கூறப்பட்டது.

பிணங்களுடனும்...

பிணங்களுடனும்...

சைகோ சங்கர் நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்களை கொலை செய்துள்ளான். அவர்களில் 32 பேரை கற்பழித்து இருக்கிறான். இவர்களில் சிலர் இறந்ததை கூட பொருட்படுத்தாமல் பிணங்களுடன் உறவுக் கொண்டிருக்கிறான் சைக்கோ சங்கர்.

சிறு வயது பிரச்சனை...

சிறு வயது பிரச்சனை...

சங்கருக்கு பத்து வயது இருக்கும் போது இரண்டு ஆண்கள் மிட்டாய் வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி ஈர்க்கப்பட்டு ஒரு அறைக்குள் அழைத்து செல்லப்பட்டுள்ளான். அங்கே அந்த ஆண்கள் இவனது ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி கொடுமை செய்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு பிறகே தன்னுள் மாற்றம் ஏற்பட்டு கற்பழிப்பு மற்றும் கொலை செய்யும் ஆக்ரோஷம் ஏற்பட்டது என்று விசாரணையின் போது சங்கர் கூறியதாக அறியப்படுகிறது.

காவலர் சோகம்!

காவலர் சோகம்!

தான் எப்படி சிறுமிகளை சிறு குழந்தைகளை கற்பழித்து கொன்றேன் என்று சங்கர் அளித்த வாக்குமூலம் கேட்ட காவலர் உணர்வு ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. சங்கரின் குற்றங்களை, அவனது உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றும் அந்த காவலர் கூறியிருக்கிறார்.

ஆக்ரோஷம்!

ஆக்ரோஷம்!

தன்னுள் எப்போதெல்லாம் மிருக உணர்வு ஏற்படுகிறதோ எப்போதெல்லாம் ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கு சென்றுவிடுவேன் என்றும், நெருப்பு கனலை சுவாசிக்க துவங்கிவிடுவேன் என்றும் விசாரணையின் போது கூறி இருக்கிறான் சைக்கோ சங்கர். 2011ல் இவன் ஒரு வயது குழந்தை மற்றும் இரண்டு வயது குழந்தையை கற்பழித்து இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: india இந்தியா
English summary

Things To Know About Serial Rapist Killer Psycho Shankar!

Things To Know About Serial Rapist Killer Psycho Shankar, Recently a serial rapist slit his throat and killed himself at Bangalore Central Prison. Famously known as Psycho Shankar, he had raped more than 15 women.