Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
கேலி என்ற பெயரில் நாராசமாக எடுக்கப்பட்ட கல்யாண புகைப்படங்கள்!
கேலி என்ற பெயரில் நாராசமாக எடுக்கப்பட்ட கல்யாண புகைப்படங்கள்!
ப்ரீ-வெட்டிங் ஷூட், வெட்டிங் ஷூட், போஸ்ட் வெட்டிங் ஷூட், கேண்டிட் ஷூட், சினிமாட்டிக் ஷூட் என இன்று கல்யாண புகைப்படங்கள் எடுப்பது என்பது பெரும் வேலையாகிவிட்டது. சுமாராக இன்றைய தேதியில் மாதம் ஒரு நாள் வேலை செய்து ஐம்பதாயிரத்தில் இருந்து ஒரு இலட்சம் வரை சம்பாதிக்க இதை தவிர வேறு வேலை இல்லை. ஆனால், நிச்சயம் திறமை வேண்டும்.

சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞர் மரத்தின் கிளையில் இருந்து தொங்கியப்படி எல்லாம் புகைப்படம் எடுத்து இன்டர்நெட்டில் வைரலானார். அதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். சரியான கிரியேட்டிவ் மைண்ட் இருந்தால் இந்த துறையில் நிச்சயம் நன்கு சம்பாதிக்கலாம்.
ஆனால், மேற்கத்திய நாடுகளில் திருமண படங்களை எடுக்கும் போது கேலி என்ற பெயரில் சிலர் நாராசமான வகையிலும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஒருவேளை அவர்கள் கலாச்சாரத்திற்கு அது கேலியாக இருக்கலாம். ஆனால், இணையங்களில் வைரலாக பரவிய இந்த புகைப்படங்கள் ஒரு நிமிடம் தலை சுற்ற தான் வைக்கின்றன...

அழிக்க முடியாது
சில மாதங்களுக்கு முன்னர் இன்டர்நெட்டில் படுபயங்கரமாக வைரல் ஆன புகைப்படங்கள் இவை. உண்மையில் இந்த படங்களை ட்விட்டரில் பதிவு செய்தவர் வைரலாக பரவுவதை கண்டு டெலிட் செய்துவிட்டார் அதற்கும் நெட்டிசன்கள் இதை பதிவிறக்கம் செய்து டிரெண்ட் ஆக்கிவிட்டார்கள்.
இன்டர்நெட்டில் எந்த ஒரு விஷயமும் அழிக்க முடியாத ஒன்று என்பது மற்றுமொரு உதாரணம் இந்த புகைப்படத்தின் கதை. இந்த மணப்பெண், மணமகன் யார் என்ற விபரம் எல்லாம் யாருக்கும் தெரியாது.

யாருப்பா அவரு...
யாருப்பா அந்த பிரயான்ட். மணப்பெண் தோழிகளே மணமகன் மேல பாசத்த காண்பிக்க வேற வழியே தெரியலையா... இது அந்த பொண்ணுக்கு ஆச்சரியம் வேற. அதென்னமோ தெரியல... உள்ளாடை தெரியும்படி இப்படியான போஸ் காண்பிப்பதை கலாச்சார வழக்கமாக வைத்திருப்பார்கள் போல. இணையத்தில் இத்தகைய படங்கள் பெருவாரியாக காணக் கிடைக்கின்றன.

மாட்டிக்கிட்டான் மாப்புள!
பார்க்க சிரிப்பா இருந்தாலும்... இது பிளான் பண்ணி எடுத்த படமா தான் இருக்கும். போட்டோ எடுக்கும் போது எந்த பொண்ணும் வேற எங்கயும் பார்க்க மாட்டாங்க... இதற்கான உதாரணம் அடுத்து வரும் படங்கள்ல ஒண்ணு இருக்கு. அது தான் ரியாலிட்டியா இருக்கும்.

ரொமான்ஸ்...
ஒருவேளை நம்ம ஊருல இந்த சூரிய கோவில்கள்ல எல்லாம் பார்த்தீங்கன்னா... தம்பதிகள் எப்படி ரொமான்ஸ் பண்ணனும்ன்னு சொல்லிக் கொடுக்குற மாதிரியான சிலைகள் இருக்கும். அப்படி ஏதோ ஒன்னு இந்த மணப்பெண் தோழிகள் முயற்சி பண்றாங்களோ... எதுக்க்க்கு!!!

ஹனிமூன்?
ஏம்மா ப்ரீ வெட்டிங் ட்ரிப்பா இது.... ஹனிமூன் போக வேண்டிய இடத்துக்கு மணப்பெண் தோழிகள கூட்டிட்டு சுத்திட்டு இருக்கியேம்மா... எல்லா சரி... கையில வெச்சிருக்க பாட்டிலுக்கு செலவு பண்ணதுல பாதிய செலவு பண்ணியிருந்தா கூட எல்லாருக்கும் நல்ல ட்ரெஸ் வாங்கி இருக்கலாமே.... என்னம்மோ போங்கம்மா...

அதென்ன ஆல் தி ஃபன் ஃபார் கேர்ள்ஸ் ஒன்லின்னு... நம்ம பயலுகளும் களமிறங்கிட்டாங்க... ஏம்ப்பு... இதெல்லாம் நமக்கு தேவையா... இதெல்லாம் நாம பண்ணா யாரு பார்ப்பாங்க... இதுல ப்ரூம்ஸ்மேன்கள் வேற... பேண்ட் போட்டுக்குட்டு ஆகவேண்டிய வேலைய பாருங்க தொம்பிகளா....

ஒளிஞ்சு விளையாட்டு!
கல்யாணம் ஆன கையோட தம்பி ஒளிஞ்சு விளையாட்டு விளையாடிட்டு இருக்காப்புல... அதெல்லாம் சரி.. ஒளிஞ்சு விளையாட வேற இடமே கிடைக்கலையா... ஒருவேள தம்பி கால் செண்டர்ல வேலை பார்த்துட்டு இருந்தாப்பாரோ... தப்பு.. தப்பு...! இது ரொம்ப தப்பு!

நிஜமாவே வா...
எப்பவுமே... கல்யாணம் பண்ண சீனியர் பசங்க.. பிரெண்ட்ஸ்க்கு அட்வைஸ் பண்ணுவாங்க.. மச்சான்... பார்த்து சூதானம்மா இருந்துக்க... மொத்தத்தயும் உருவிட்டு விட்டுடுவாங்கன்னு புலம்புவாங்க... அந்த அட்வைஸ் எல்லாம் சும்மா உலலாச்சுக்கும் சொல்றாங்கன்னு நெனச்சுட்டாப்புல நம்மாளு.. பார்த்தீங்களா... நிஜமாவே எல்லாத்தையும் உருவீட்டாங்க....

மறுக்கா!
அந்த முதல் படத்துல இருந்த ஜோடி ரொம்பவே பரவாயில்ல... இதெல்லாம் கேலிக்கு பண்றாங்களா.. இல்ல நம்ம ஊருல மியூசிக்லி செயலியில... தெரிஞ்சே மொக்கையா ஆடி, பாடி ஃபேமஸ் ஆக துடிக்கிற பழைய ஆண்டி ஒன்னு இருக்கே... அந்த மாதிரி இன்டர்நெட்ல வைரலாகனும்ன்னு தெரிஞ்சே பண்றாங்களா...

இட்ச் கார்ட்!
ரொம்ப சங்கோஜமான தருணம்... ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது... எவனோ வேணும்னே இத போட்டோ எடுத்திருக்கான்... கொஞ்சம் கஷ்டம் தான்.. நல்ல வேலையா பின்னாடி இருக்கவங்க முன்னாடி பக்கத்த போட்டோ எடுக்காம விட்டானே அந்த அம்பி!

தேசப்பற்று...
என்ன ஒரு தேசப்பற்று... உங்க தேசப்பற்றுக்கு ஒரு அளவே இல்லையாம்மா... எங்க ஊருல சானியா மிஸா தேசிய கொடி இருக்க பக்கமா கால் நீட்டி உட்கார்ந்ததுக்கே போராட்டம், கோஷம் போட்டாங்க.. நீ என்னடான்னா அதுலயே உள்ளாடை தேச்சு போட்டுருக்க. நல்ல தேசம், நல்ல தேசப்பற்று.

சாரி!
இவரு மத்தவங்க மாதிரி தப்பா எதுவும் பண்ணிடல. இங்க இவரு கேலி பண்ணல... ஆனா இவர வெச்சு புகைப்பட கலைஞர் நல்லா கேலி பண்ணியிருக்காரு. புதுசா கட்டிக்கிட்ட பொண்டாட்டிக்கு இவரு ஏதோ ஹெல்ப் தான் பண்றாப்புல... ஆனா, அது வேற பக்கமா இருந்து எடுத்த படத்துல தப்பா தெரிஞ்சிருக்கு. ஏம்பா இப்படி பண்றீங்க...

இது தான் அது...
மூணாவது போட்டோவுல ஒரு ரியாலிட்டிய காமிக்கிறோம்ன்னு சொல்லி இருந்தோம்ல... அது இது தான். எத பார்க்கணுமோ அத விட்டுட்டு. கேமராவ பின்னாடி திரும்பி பாக்குறார் தம்பி. ஏம்பா... அங்க கல்யாண பையன் உன் கேர்ள் பிரெண்ட் கிட்ட என்ன பண்ணிட்டு இருக்கான்னு பாரு தம்பி...

லாஸ்ட்...
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... சரி! அவங்க ஊருல இதெல்லாம் சர்வ சாதாரணமா இருக்கும் போல. நம்ம ஊருல கல்யாணம் ஆனதும் பபோஸ்ட் வெட்டிங் ஷூட் அப்போ கட்டிக்கிட்ட பொண்ண தூக்கி புடிச்ச மாதிரி போட்டோ எடுத்தாலே... வூட்டுல இருக்க பெரியவா எல்லாம் அடேய் படவா... இப்பவே இப்படி பண்றியான்னு திட்டுவாங்க.. சரி! எல்லாத்துக்கும் வளர்ப்புன்னு ஒன்னு இருக்குல...



Click it and Unblock the Notifications