For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

-70 டிகிரி எல்லாம் அசால்ட்டு... கண்ணிமை உட்பட உறைந்து போகும் உலகின் கடுங்குளிர் பகுதி!

உலகின் குளுமையான பகுதி. -63 டிகிரி செல்சியஸ்ல் வாழும் மக்கள்!

|

ஒய்மியாகோன் எனும் இந்த கிராமம் ரஷ்யாவின் சகா ரிபப்ளிக்கின் ஒய்மியாகோன்ஸ்கை எனும் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இன்டிகிர்கா எனும் ஆற்றுப் பகுதியில் இருந்து முப்பது கிலோமீட்டர் வடமேற்கு பகுதியல் இருக்கிறது இந்த கிராமம்.

ஒய்மியாகோன் என இந்த ஊரின் பெயரை உச்சரிப்பதே மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால், இதைவிட பல ஆயிரமடங்கு கடினம் இந்த ஊரில் வாழ்வது. ஆம்! ஊட்டிக்கு சென்றாலே டபுள் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு நடுங்கும் மக்கள் நாம். ஆனால், இவர்கள் - 60 டிகிரி செல்சியஸ்ல் அசராமல் வாழ்ந்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஆறு!

இந்த ஊருக்கு ஒய்மியாகோன் என பெயர் வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த பகுதியில் ஒய்மியாகோன் என்ற ஆறு ஓடி வருகிறது. அதன் பெயரையே இந்த கிராமத்திற்கும் வைத்துவிட்டனர். இந்த ஊரை கேயும் (Kheyum) என்றும் அழைக்கிறார்கள். அந்த ஊர் மொழியில் இதன் பொருள் உறையாத நீர் இருக்கும் பகுதி என கூறப்படுகிறது. என்றும் உறைந்த நிலையில் இருக்கும் இடத்திற்கு இப்படி ஒரு விசித்திரமான பெயரும் இருக்கிறது.

இந்த பகுதியில் தான் மீன்கள் குளிர் காலத்தில் வாழ்ந்து வரும் என்றும் கூறுகிறார்கள். சிலர் ஹேயும் (Heyum) என்ற பெயரும் கூறுகிறார்கள். இதன் பொருள் உறைந்த குளம் என்பதாகும்.

மக்கள்!

ஒய்மியாகோன் எனும் இந்த கிராமத்தில் மொத்தமே ஐநூறு பேர் தான் வாழ்ந்து வருகிறார்கள். இந்த கிராமம் கடல் மட்டத்தில் இருந்து வெறும் 750 மீட்டர் உயரத்தில் தான் இருக்கிறது. இங்கே டிசம்பர் மாதத்தில் நாள் வேளை மூன்று மணிநேரமும், ஜூன் மாதத்தில் 21 மணி நேரமுமாக மாற்றம் கொண்டிருக்கிறது என கூறுகிறார்கள்.

கிளைமேட்!

ஒய்மியாகோன் பகுதியை வடதுருவத்தின் குளுமையான பகுதி என்றும் குறிப்பிடுகிறார்கள். இப்பகுதியின் நிலம் எப்போதுமே உறைந்த நிலையில் தான் காணப்படுகிறது. கடந்த 1933 பிப்ரவரி மாதத்தில் -67.7 டிகிரி பதிவானது தான் வடதுருவத்தில் பதிவான குளுமையான டிகிரி செல்ஸியஸ் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தென் துருவமான அண்டார்டிகாவில் ஒருமுறை -89.2டிகிரி செல்ஸியஸ் பதிவானது தான் குறைவானதாக கண்டறியப்பட்டுள்ளது.

மலைகள்!

ஒய்மியாகோன் பகுதியை சுற்றி உள்ள மலைகள் பூமியில் இருந்து 1100 மீட்டர் அளவு உயரம் கொண்டிருக்கின்றன. ஒய்மியாகோனில் சராசரி வெட்ப நிலையே -50 டிகிரி ஆகும். ஜூன், ஜூலை போன்ற மாதங்களில் அதிகபட்ச வெப்பமாக -10 டிகிரி செல்சியஸை எட்டுகிறது ஒய்மியாகோன் கிராமம். ஜனவரி மாதங்களில் -60களுக்கு குறையாமல் டிகிரி செல்ஸியஸ் எகிறி நிற்கிறது.

ஓரிரு நொடியில்!

டிசம்பர், ஜனவரி மாதங்களில் வீட்டில் இருந்து மக்கள் வெளிவந்த ஓரிரு நொடிகளில் அவர்களது இமைகள், புருவம், கூந்தல் உட்பட அனைத்தும் குளிரில் உறைந்து போய்விடுகிறது. சமீபத்தில் இப்பதியில் வாழும் பெண்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த படங்கள் சிலவன இண்டர்நெட்டில் வைரலாக பரவின.

இந்த படங்களை காணும் போதே சிலர் குளிரை உணர்ந்திருக்கலாம். ஆனால், அங்கே மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என தெரியவில்லை. ஒருவேளை அங்கே வாழும் மக்கள் நமது சென்னை வெளியில அதிசயமாக கண்டு, எப்படி இங்கே மக்கள் வாழ்கிறார்கள், எரிந்து விடமாட்டார்களா என திகைத்தாலும் திகைத்துப் போகலாம்.

கழிவறை!

ஒய்மியாகோன் பகுதியில் இருக்கும் மற்றுமொரு சோகம் என்னவெனில், இவர்கள் இந்த கடும்குளிரில் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாது. இவர்கள் கட்டயாம் ஒரு நாளுக்கு இரண்டு முறையாவது வீட்டுக்கு வெளியே வந்து தான் ஆகவேண்டும். காரணம் என்னவெனில், இவர்கள் வீட்டுக்கு வெளியே தான் கழிவறை கட்டி வைத்துள்ளனர். இதனால், எவ்வளவு குளிராக இருந்தாலும், இவர்கள் கழிவறை செல்ல வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இறுதி சடங்கு!

ஒருவரது உடலை புதைக்க வேண்டும் என்றால் அதற்கான குழிதோண்ட அதிகபட்சம் மூன்று மணிநேரம் ஆகலாம். ஆனால், ஒய்மியாகோன் கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கான புதைக்கும் இடத்தை ஏற்பாடு செய்ய மூன்று நாட்கள் ஆகும். நாம் முன்னர் கூறியது போலவே, இந்த கிராமத்தின் நிலப்பரப்பு முழுக்க உறைந்த நிலையில் தான் இருக்கும். எனவே, கரிகளை எரித்து அங்கே இருக்கும் உறைந்த நிலையை மாற்றி தான் குழி தோண்ட வேண்டும்.

கார்!

இவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் மேலும் சந்திக்கும் மற்றுமொரு பிரச்சனை வாகன போக்குவரத்து. இவர்கள் ஒருமுறை வெளியே செல்ல காரை ஸ்டார்ட் செய்துவிட்டால், இடையே ஆப் செய்யவே மாட்டார்கள். ஏனெனில், இந்த கடும் குளிரில் மீண்டும் கார் ஸ்டார் ஆவது மிகவும் கடினம். ஆகவே, நடுவே எங்கேனும் இறங்க வேண்டிய சூழல் வந்தாலோ, யாரேனும் வீட்டுக்கு சென்று பேசி திரும்ப வேண்டும் என்றாலும். இடைப்பட்ட நேரத்திற்கு கார் ஆனிலேயே தான் இருக்கும். ஆப் செய்யவே மாட்டார்கள்.

உணவு!

தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழ இவர்கள் தங்கள் இடத்தில் கரி மற்றும் மரக்கட்டைகளை எரித்து வைத்துக் கொள்கிறார்கள். மேலும், இவர்கள் ஒருவகை குளிர் பிரதேச மான்கள் மற்றும் குதிரை இறைச்சியை தான் உண்டு வருகிறார்கள். வேட்டையாடுவது, மீன் பிடிப்பது போன்றவற்றை தங்கள் வேலையாகவும் செய்து வருகிறார்கள்.

ஊட்டச்சத்து!

இதுபோன்ற மிகுந்த குளுமையான பகுதிகளில் வாழ்ந்து வந்தால் கண்டிப்பாக நிறைய வகை உணவுகள் கிடைக்காது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். ஆனால், இங்கே உள்ள மக்கள் விலங்குகளில் இருந்து பெறும் பாலில் அதிக மைக்ரோ ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளதால், இவர்களுக்கு பெரிதாக நோய் தாக்கங்கள் அண்டுவதில்லை என உள்ளூர் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கஷ்டங்கள்!

ஒருவர் இறந்தால் அடக்கம் செய்வதில் இருந்து, காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றால் வீடு திரும்புவது வரையிலும் இவர்கள் தங்கள் வாழ்வில் பல சிரமங்களை கண்டு வருகின்றனர். இவர்கள் வீட்டில் ஜன்னல் கண்ணாடி வழியே எதையும் காண முடியாது. முழுவதும் உறைந்த நிலையில் தான் இருக்கும். பேனாவை திறந்து எதுவும் எழுத முடியாது உடனே உறைந்துவிடும். பேட்டரி பேக்கப் எப்போதுமே இருக்க வேண்டும். பவர் கட் ஆனால், இவர்கள் நிலை இன்னமும் மோசமாகிவிடும்.

பயணம்!

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புது அனுபவத்தை அளிக்கிறது இந்த கிராமம். ஒரு உறைந்த இடம் எப்படி இருக்கும், அங்கே இருக்கும் வாழ்வியல் எத்தகைய சிரமங்கள் நிறைந்திருக்கும் என்பதற்கு ஒய்மியாகோன் கிராமம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இப்படி ஒரு அனுபவத்தை உணர வேண்டுமா? இங்கே வாருங்கள் என்று கூறி சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறார்கள். ஒருமுறை வந்தவர்கள் மீண்டும் வருவார்களா என்பது பெரிய கேள்விக்குறி. அனுபவம் புதியதாக இருந்தாலும், உலகின் வேறு இடங்களில் அனுபவிக்க முடியாது எனிலும்... மீண்டும் வருவதற்கான மன தைரியம் யாருக்கும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Most Coldest Place in the World, Oymyakon!

The Most Coldest Place in the World, Oymyakon!
Story first published: Tuesday, January 16, 2018, 14:33 [IST]
Desktop Bottom Promotion