Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஆசை ஆசையாய், திரையில் பெண் வேடம் ஏற்ற தமிழ் நடிகர்கள் - #Photos
ஆசை ஆசையாய், திரையில் பெண் வேடம் ஏற்ற தமிழ் நடிகர்கள் - #Photos

ஆங்கிலத்தில் Crossdressing என்றொரு சொல் இருக்கிறது. அதாவது, ஆண்கள் பெண் போன்ற தோற்றம் / உடை, அலங்காரம் இட்டுக்கொள்ள விருப்பம் கொள்வதும், பெண்கள் ஆண் போன்ற தோற்றம் / உடை, அலங்காரம் இட்டுக் கொள்ள விருப்பம் கொள்வதும் Crossdressing என்று கூறப்படுகிறது.
இதை நாம் ட்ரான்ஸ் என்று கூறிவிட இயலாது. இதுவொரு வகையான ஆசை என்ற காணப்படுகிறது. சிலருக்கு இதில் அதிகமான ஆசை இருக்க கூடும், சிலருக்கு இது மிக குறைவாக இருக்கும். உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமானால், குழந்தை அல்லது சிறு வயதில் இருக்கும் போது, பெண் குழந்தைகளுக்கு ஆண் போலவும், ஆண் குழந்தைக்கு பெண் போலவும் அலங்காரம் செய்து மகிழ்கிறோம் அல்லவா, அதை போல.
ஏன், உங்களுக்கோ, உங்கள் உடன் பிறந்தவர், உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் சிறு வயதில் இப்படியான ஆசைக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இது மிக இயல்பான காரியம் தான். இப்படியான காரியத்தை திரையில் விரும்பி ஏற்றுக் கொண்ட தமிழ் நடிகர்களை பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்...

ரஜினி!
பணக்காரன் திரைப்படத்தில், நூறு வருஷம் என்ற பாடலில் ரஜினி ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு பெண் வேடம் இட்டு தோன்றி இருப்பார்.

கமல்!
அனைவரும் இளம்பெண் போல வேடமிட்டு வந்த காலத்தில், அவ்வை சண்முகி திரைப்படத்தில் ஒரு நடுவயது பெண்ணாக வேடமிட்டு அசத்தி இருப்பார் கமல்.

விஜய்!
பிரியமானவளே திரைப்படத்தில், ஜூன், ஜூலை மாதத்தில் என்ற பாடலில் சிறு காட்சியில் பெண் வேடமிட்டு நடனம் ஆடியிருப்பார் விஜய்.

விக்ரம்!
கந்தசாமி திரைப்படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சியில், பெண் வேடமிட்டு வந்து பயமுறித்தி சென்றிருப்பார் விக்ரம்.

பிரசாந்த்!
ஆணழகன் என்ற படத்தில், வீடு வாடகைக்கு பெறுவதற்காக குடும்பம் போல நடிக்க, மனைவி போல பெண் வேடமிட்டு நடித்திருப்பார் பிரசாந்த்.

சரத் குமார்!
கட்டபொம்மன் என்ற திரைப்படத்தில் கல்யாண மண்டபத்தில் ஆள்கடத்தும் காட்சியில், கவுண்டமணியுடன் அய்யர் மாமி போல பெண் வேடமிட்டு காமெடி காட்சிகளில் நடித்திருப்பார் சரத் குமார்.

பிரகாஷ் ராஜ்!
அப்பு என்ற திரைப்படத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வரும் பெண் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் பிரகாஷ் ராஜ்.

சத்யராஜ்!
மாமன் மகள் திரைப்படத்தில், மீனாவை ஏமாற்ற, சத்யராஜ்க்கு அம்மா போல பெண் வேடமிட்டு காமெடி காட்சியில் நடித்திருப்பார் சத்யராஜ்.

சிவகார்த்திகேயன்!
ரெமோ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷை தன் காதல் வலையில் விழ வைக்க நர்ஸ் போல பெண் வேடமிட்டு படம் முழுக்க நடித்திருப்பார் சிவகார்த்திகேயன்.

விஜய் சேதுபதி!
சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் பெண் வேடம் ஏற்று நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில் பெண் வேடமா, திருநங்கை வேடமா என்பது திரைப்படம் வெளியாகும் போது தான் தெரியவரும்.

சந்தானம்!
ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் காமெடி காட்சிகளில் பெண் வேடமிட்டு நடித்திருப்பார் சந்தானம்.

சூர்யா!
அயன் திரைப்படத்தில் ஆரம்ப பாடலில், ஒரு சிறிய காட்சியில் சில நொடிகளுக்கு சிவாஜி படத்தில் ஸ்ரேயா உடுத்தியது போன்ற கவர்ச்சி காஸ்ட்யூம் உடுத்தி பெண்வேடத்தில் தோன்றி இருப்பார் சூர்யா.

விஷால்!
அவன் இவன் திரைப்படத்தில் நடிப்பில் பேரார்வம் கொண்டவராய் நடித்த விஷால், துவக்க பாடலில் பெண் வேடமிட்டு நடனம் ஆடி இருப்பார்.

விவேக்!
குரு என் ஆளு திரைப்படத்தில் எம்.எஸ் பாஸ்கரை ஏமாற்ற விவேக் பெண் வேடமிட்டு காதலிப்பது போல நடித்திருப்பார்.

வடிவேலு!
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... தமிழில் அதிக முறை பெண் வேடமிட்டு ரசிகர்களிடம் கைத்தட்டும், மறக்க முடியாத இடமும் பெற்றவர் வைகை பயல் வடிவேலு. இன்று திரைப்படங்களில் மட்டுமின்றி, இவரது பெண் வேட தோற்றங்களையும் மிஸ் செய்கிறார்கள் ரசிகர்கள்.



Click it and Unblock the Notifications