Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கொளுத்துற வெயில்ல வயிறு குலு(ளு)ங்க சிரிக்க 2 நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது!
கொளுத்துற வெயில்ல குளு குளுன்னு வயிறு குலுங்க சிரிக்க 2 நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது!
ஒரு பக்கம் வெயில் வாட்டி எடுக்குது.. இன்னொரு பக்கம் அரசியல் களம் சூடு பிடிக்கிது. இப்படி மாறி, மாறி நம்ம நாட்டுல அனல் பறந்துட்டு இருக்க சூழல்ல.. உடம்பு, மனசு ரெண்டுமே கோஸ்ட் ரைடர் வாழ்க்கை மாதிரி தீப்பொறி பறக்குற மாதிரி ஆயிடுச்சு.
ரோட்ல எங்கடா மரம் கிடைக்கும் பைக்க சத்த நேரம் நிக்க வெச்சுட்டு காத்து வாங்கலாம்ன்னு யோசிச்சா... அதத்தான் சாலை விரிவாக்கம், மேம்பாலmம் கட்டுறோம்னு முழுசா வெட்டிட்டீங்களே அப்பறம் எப்படிடா மரம் இருக்கும்... காத்து வாங்க முடியும்ன்னு மானசாட்சி மூஞ்சி மேல கேள்வி கேட்கும். சரி அக்கவுண்டுல காசு இல்லாட்டியும் பரவால்ல... ஏசி காத்து வாங்க எ.டி.எம் மெஷின் தேடி சுத்துற கூட்டமும் இருக்கு.
சரி! இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... கொளுத்துற வெயில்ல... கொஞ்ச நேரம் குளுகுளுன்னு சிரிக்க.. இந்த போட்டோ கலக்ஷன பாருங்க...

பேச்சு மட்டும் தான்...
விவாத நிகழ்ச்சிகளுக்கு வர பொண்ணுக மட்டும் தான்... வீம்புக்கு நான் ஒரு பைக் ரேசர்... நூறு கிலோமீட்டர் வேகத்துல போவேன்... என் கூட போட்டிக்கு வர முடியுமான்னு எல்லாம் பேசுவாங்க. டிவி காரங்களும் டிஆர்பி எகிறணும்னு எதிருல அம்மாஞ்சி பசங்கள உட்கார வெச்சு எப்பிசோட் ஹிட் ஆக்கிடாவாங்க.
ஆனா, ரியாலிட்டி எப்படி இருக்கும் தெரியுமா... லெப்ட்ல திரும்புறதுக்கு ரைட்டுல ஏறி வருவாங்க... ப்ரேக் புடிக்க சொன்னா... ரோட்டுல செருப்ப தேச்சிக்கிட்டே போவாங்க... பார்க்கிங்ல வண்டிய நிறுத்தும் போதும், எடுக்கும் போதும் ஒரு ட்ராபிக் ஜாமே பண்ணுவாங்க. அப்பறம் இப்படி தான் எங்கயாச்சும் கார கொண்டு போயி சிக்க வெச்சிடுவாங்க.

பொண்ணுங்க, பொண்ணுக தான்!
அக்கா, தங்கச்சி கூட பிறந்த ஒவ்வொரு அண்ணனுக்கும் மட்டும் தன் தெரியும்... வீட்டுல இருக்கும் சாப்பாடு தட்டுல இருந்து, சிடி, டிவிடி'ன்னு எல்லாத்தையும் பொண்ணுங்க முகம் பாக்குற கண்ணாடியா யூஸ் பண்ணுவாங்கன்னு. இன்னும் எத்தன நாளைக்கு தான் மென் வில் பி மென் ஆல்வேஸ்ன்னு சொல்லிட்டே இருப்பீங்க. பல விஷயத்துல பொண்ணுங்களும் அப்படி தான். அவங்களையும் மாத்துறது ரொம்ப கஷ்டம்.

இப்போ தெரியுதா...
மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்ல ஏன் பசங்க மட்டும் படிக்கிறாங்கன்னு இப்போ தெரியிதா... ஒருவேளை மெக்கானிக் டிபார்ட்மெண்ட்ல பொண்ணுக அதிகமாகசேர்ந்திருந்தா... விளைவு இப்படி தான் இருந்திருக்கும். ஹீல்ஸ் மாடல்ல பைக்கு... ஹேண்ட் பேக் மாடல்ல காரு... போனி டெயில் மாடல்ல சைக்கிள்னு சும்மா தெறிக்க விட்டுருப்பாங்க. ஊரு முழுக்கு வண்டிங்க ஃபேஷன் ஷோ போற மாதிரி தான் இருந்திருக்கும்.

பண தட்டுப்பாடு...
ஒருவேளை நாசாவுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு... ராக்கெட் அனுப்ப பணம் பத்தாம போச்சுதுன்னு வெச்சுக்குங்க... அப்ப அவங்க சம்பாதிக்க ஒரு நல்ல யோசனை இருக்கு. அதான் இது. விண்ணுக்கு அனுப்புற ராக்கெட் முழுக்க விளம்பரம் பண்ணி ஸ்டிக்கரா ஒட்டிவிட்டுடலாம். அதுவும் பத்தாட்டி... நம்ம ஊரு விஞ்ஞானி தெர்மாக்கோல் ராசாவா அனுப்பிவிட்டுட வேண்டியது தான்.

எதுக்கு...
எம்.எல்.ஏ'வ ரிசார்ட்க்கு கடத்திட்டு போறவங்கள எல்லாம் ஈஸியா விட்டுடுங்க.. நாலு சக்கர பைக் ஓட்டிட்டு வர என்னைய மட்டும் கரக்டா புடிச்சு அபராதம் போடுங்க. அவங்கள எல்லாம் பிடிக்க மாட்டீங்களே... ஏன்னா பயப்படுவீங்க.. என்ன பண்றது நாங்க வரி கட்டுறதும்... அதுக்கு அவங்க பெட்ரோல் விலைய எத்துரதுமே வாடிக்கையா போச்சு. முதல்ல அத மாத்தனும்.

சீட்டுக்கட்டு!
கிட்டத்தட்ட சீட்டுக்கட்டுல கோட்டை கட்டுறது மாதிரி தான். எங்காவது ஒருத்தன் சறுக்கி விழுந்தாலும் அம்புட்டு தான் மொத்த பயலுக கதியும் அதோகதி தான்.

சிறப்பு!
ரோடு போடுற ஆளுங்களுக்கு தான் படிப்பு தேவையில்ல. பாவம் அவங்களே தின கூலி வேலைக்கு வரவங்க. இந்த காண்ட்ராக்டர், என்ஜினீயர், சூப்பர்வைசர் இவங்க எல்லாம் கண்டிப்பா படிச்சவங்கலா தான இருப்பாங்க. ஒருவேளை காண்ட்ராக்ட் கிடைச்சுட்டா தன் பங்கு லாபத்த சுருட்டிட்டு, வேலை எப்படி முடிஞ்சா என்னன்னு கண்டுக்காம ஓடிடுவாங்களோ... என்னம்மா நீங்கள் இப்படி பண்றீங்களேம்மா...

ஒரே வழி!
அனுதினமும் ஓவர் டைம் பார்க்க வெச்சு இரத்தத்த உறிஞ்சுட்டு... வருஷ கடைசியில ரேட்டிங்ல கை வைக்கிற மேனேஜர் கிட்ட இருந்த தப்பிக்க இத தவிர வேற வழியே இல்ல.

குசும்பு!
அடேய்களா... யாரு பார்த்த வேலைடா இது. நீரியானைக்கு எதுக்குடா பிகினி. உங்களோட கவர்ச்சி எண்ணத்துக்கு ஒரு எல்லையே இல்லையா... அதுவே ஓர கண்ணுல லுக்கு விடுது. ஏதாவது தப்பு தண்டா பண்ணிடாதிங்கடா... முதலையையே தூக்கி வீசிடும். உங்கள எல்லாம் ஒரே மிதியில ஒட்டு மொத்தமா சட்டினி பண்ணிடும்.

கியூட் செல்ஃபீ!
இந்த போட்டோவ பார்த்தவுடனே உங்க பிரெண்ட்ஸ்ல இருக்க அந்த கியூட் செல்ஃபீ குயின் நினைவுக்கு வராங்களா...
நிச்சயம் வரணுமே... எல்லா செல்ஃபியிலயும் அவங்க இப்படி நாக்க துருத்திட்டு ஒரு போஸ் கொடுத்திருப்பாங்க. இது ஒரு கியூட்டான போஸ்ன்னு பொண்ணுங்க மனசுல சில மன்மத குஞ்சுகள் நம்ப வெச்சிருக்குங்க. அது பொய்ன்னு தெரியாம பாவம் பொண்ணுகளும் அதையே நம்பி... அந்த போஸ் தான் கியூட்ன்னு எமார்ந்துட்டு இருக்காங்க.



Click it and Unblock the Notifications
