Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
கிருஷ்ணருக்கு ஏன் கிருஷ்ணர் என பெயர் வந்தது தெரியுமா? யார் வைத்தது தெரியுமா?
கடவுள் கிருஷ்ணருக்கு எப்படி அந்த பெயர் வந்தது என்பது பற்றி இங்கே பல புராணக் கதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
கடவுள் கிருஷ்ணர் என்று சொன்னாலே நம்முடைய மனதுக்குள் உருவித குதூகலங்கள் வந்து தொற்றிக் கொள்ளும். கிருஷ்ணரைப் பார்த்தாலே நம்முடைய வீட்டில் உள்ள குழந்தைகள் துள்ளிக் குதித்து விளையாடுவது போலவும், சேட்டைகள் செய்வது போலவுமே இருக்கும்.

அப்படி இருக்கின்ற பொழுது, இறைவனின் ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒரு பெயர் இருக்கும். அதற்கான காரணமும் இருக்கும். அப்படித்தான் கிருஷ்ண அவதாரத்துக்கும். சரி. கிருஷ்ணருக்கு கிருஷ்ணர் என்று யார் பெயர் வைத்தார்கள். ஏன் வைத்தார்கள் என்று பார்ப்போம்.

கிருஷ்ணன் எனப் பெயர் வரக் காரணம்
கிருஷ்ண பரமாத்மாவை அவரின் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கலாச்சார பின்னணி, பரம்பரை வழிபாடு இவற்றை கொண்டு நாம்கரன், கிருஷ்ணா, பரமாத்மா என்று வெவ்வேறு பெயர்களில் அழைத்து கொள்கின்றனர். இந்த கிருஷ்ணன் என்ற பெயரின் முழு அர்த்தம் என்பது ஒரு சந்தோஷமான, மகிழ்ச்சியான துள்ளித் திரியும் குழந்தையின் வாழ்க்கையை குறிக்கிறது. அதனால் தான் அவரின் பக்தர்கள் தங்கள் செல்ல சுட்டிக் குழந்தைகளுக்கு கூட ஸ்ரீ கிருஷ்ணன் பெயரை சூட்டி மகிழ்கின்றனர்.

பெயர் சூட்டும் விழா
இந்து மதத்தை பொருத்தவரை குழந்தைக்கு பெயர் சூட்டும் போது அவர்களின் பெற்றோர்கள் ஒரு தகுந்த அர்த்தமுள்ள பொருத்தமான பெயரை தேடுகின்றனர். சில சமயங்களில் அவர்களின் தேடல்கள் புகழ்பெற்ற மனிதர்கள் அல்லது கடவுள்களின் பெயரை தேர்ந்தெடுக்கின்றனர். புகழ்பெற்ற மனிதர்கள் பெயரை சூட்டும் போது அவர்களைப் போல் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

வெவ்வேறு கலாச்சாரங்கள்
வெவ்வேறு கலாச்சாரங்கள் உடையது தான் பெயர் சூட்டும் விழா. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நல்லபடியாக பிறந்தாலோ ஏதேனும் வேண்டி இருந்தாலோ கடவுளின் பெயரை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து வைத்து விடுகின்றனர். அப்படித்தான் இந்த ஸ்ரீ கிருஷ்ணன் என்ற பெயரும் நடைமுறைக்கு வந்தது.

கடவுளின் பெயர்
பெயருக்கு பின்னால் இருக்கும் அற்புதமான பொருள் சிலருக்கு பிடித்து போகிறது, அந்த பெயரை வைத்தவருடைய வாழ்க்கை முறைகள், அவர்கள் புகழ்ச்சி போன்றவை ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகிறது. சரி வாங்க கடவுள் கிருஷ்ணனுக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்று பார்ப்போம்

கிருஷ்ணனின் பெயர் சூட்டும் விழா
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குடும்பத்தில் இருக்கும் முன்னோர்கள், மூத்தவர்களின் பெயர்களை சூட்டுவார்கள். ஆனால் கடவுள் கிருஷ்ணனுக்கு அப்படி நிகழவில்லை.

கம்சனின் கோபம்
அந்த நேரத்தில் கிருஷ்ணன் என்ற ஆண் குழந்தை பிறந்ததை அறிந்தால் தாய்மாமன் கம்சன் கொன்று விடுவான் என்று அவரது பெற்றோர்கள் பயத்திலேயே இருந்தனர். எனவே 8 வதாக பிறந்த கிருஷ்ணனை மறைத்து, பராசக்தி தேவி பெண் குழந்தையாக தோன்றி கம்சனிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாசுதேவின் மதுரா பயணம்
அப்பொழுது வாசுதேவ் பிறந்த ஆண் குழந்தையை கூடையில் சுமந்து கொண்டு கோகுலத்துக்கு சென்றார். அங்கே வாழ்ந்து வந்த நந்தா மற்றும் யசோதா என்ற பெற்றோர்களுடைய அவர் அந்த ஆண் குழந்தையை ஒப்படைத்தார்.

கோகுலத்திற்கு வந்த ஆச்சாரியார்
சில நாட்கள் கழித்து மாபெரும் துறவியான ஆச்சாரியார் கோகுலத்தை நோக்கி ஒரு பயணம் புறப்பட்டார். அவரை நந்தாவும் மற்றும் யசோதாவும் வரவேற்றார்கள். அங்கேயே தங்கி மத போதனைகளையும், கல்வியையும் போதித்தார்.

குழந்தைகளை கொல்லுதல்
அப்பொழுது கோகுலத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனின் படை தேடி தேடி கொன்று குவித்து கொண்டு இருந்தார்கள். இந்த நேரத்தில் விஷயம் தெரியக் கூடாது என்று நந்தா மற்றும் யசோதா இருவரும் கவனத்துடன் இருந்தார்கள்.
எனவே மகனுக்கும் மருமகனுக்கும் ஒரே நேரத்தில் பெயர் சூட்டும் விழாவை தேர்வு செய்து இருந்தார் நந்தா. ஆச்சாரியார் உதவியுடன் பெயர் சூட்டும் விழாவை நடத்த ஆரம்பித்தார்கள்.

கிருஷ்ண அவதாரம்
ஆச்சாரியார் கடவுள் கிருஷ்ணனின் அவதாரத்தை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தார். எனவே ஆபூர்வமான அந்த ஆண் குழந்தையை மாட்டு கொட்டகையில் யார் கண்ணிலும் படாத வண்ணம் மறைத்து வைக்கும் படி சொன்னார்.

ஆச்சாரியார் கிருஷ்ணா என அழைத்தல்
உன்னுடைய மருமகனும், இந்த ஆண் குழந்தையும் இணை பிரியாத சகதோரர்கள். எப்பொழுதும் இருவரும் இணைந்தே காணப்படுவார்கள். எனவே உனது மருமகன் பெயர் பலராமன் என்று பெயர் சூட்டுகிறேன். பால என்றால் அதிக வலிமை கொண்டவன் என்பது பொருள்.

கிருஷ்ணா விஷ்ணு அவதாரம்
அடுத்து கடவுள் கிருஷ்ணனை கையில் தூக்கிய ஆச்சாரியார் இவன் விஷ்ணுவின் அவதாரம். அவர் வெள்ளை, சிவப்பு, மஞ்சள் என்று தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். இப்பொழுது அவர் எடுத்த அவதாரம் கரிய நீல நிறம். அதனால் இவனுக்கு கிருஷ்ணன் என்று பெயர் சூட்டுகிறேன் என்றாராம். கிருஷ்ணன் என்பதற்கு கரிய என்று பொருள். இப்படித்தான் ஸ்ரீ விஷ்ணு கடவுள் கிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார்.



Click it and Unblock the Notifications