For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பானிபூரி கடையில் வேலை பார்த்த சிறுவன் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்!

|

இந்திய மக்களை பொருத்தவரையில் கிரிக்கெட் என்பது அவர்களது வாழ்வோடு இரண்டர கலந்து விட்ட ஓர் விஷயமாகவே இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிரிக்கெட் பற்றியும், அதை விளையாடும் வீரர்களைப் பற்றியும் தங்களுக்கென்ற ஓர் அபிப்ராயத்தை வைத்துக் கொண்டு அதில் அளவுக்கு அதிகமான ஆர்வத்தை செலுத்தி வருகிறார்கள்.

இந்திய அணியில் சேர வேண்டும் என்ற பெரும் கனவோடு ஏராளமான வீரர்கள் தொடர்ந்து வாய்ப்புக்காக போராடி வருகிறார்கள். அப்படி பெருங்கனவோடு பல இடையூறுகளை கடந்து இன்றைக்கு இந்திய அணியின் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் இடம்பெற்றிருக்கும் ஒரு வீரர் யாசவி ஜெய்ஸ்வால். தற்போது இலங்கையில் நடக்கிற போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக பங்கேற்றிருக்கிறார்.

தன்னுடைய இந்த லட்சியக் கனவை அடைவதற்கு ஜெய்ஷ்வால் பல தியாகங்களை செய்திருக்கிறார். தற்போது பதினேழு வயது கொண்ட ஜெய்ஸ்வால் எப்படி இந்திய அணியில் இடம்பிடித்தார் என்பதே பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இவர் உத்திரபிரதேசத்தில் உள்ள பஹதோஹி என்ற ஊரில் பிறந்தார். அப்பா ஒரு சிறிய கடையில் வேலை பார்த்து வந்தார். ஒரு வேலை உணவுக்கு கூட சிரமம். இந்ந்த சூழலில் மகனின் கிரிக்கெட் கனவை எப்படி நிறைவேற்றுவது?

சராசரி தந்தையைப் போன்றே அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என்று மகனை ஆரம்பத்தில் தடுத்திருக்கிறார். ஆனால் ஜெய்ஸ்வால் கிரிக்கெட் வீரனாக வேண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று வெறியுடன் இருந்தவர் இங்கேயிருந்தால் எதுவும் வேலைக்கு ஆகாது நான் மும்பைக்கு கிளம்பிச் செல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்

அப்படிச் சொன்ன போது அந்த சிறுவனின் வயது வெறும்11.

Image Courtesy

#2

#2

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் மும்பையில் கிரிக்கெட் கனவுடன் அதற்குரிய வேலைகளுடனே சுற்றியிருக்கிறார். தங்குவதற்கு கூட வழியின்றி நடைபாதையில் உறங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த இடமும் இவருக்கு மறுக்கப்பட யாருமற்ற அந்த பெரும் நகரத்தில் தனியாய் தவிர்த்திருக்கிறான் ஜெய்ஸ்வால்.

ஜெய்ஸ்வால் உறவினர் ஒருவர் மும்பையில் வசிப்பதை அறிந்து அங்கே செல்ல, அவரோ மிகச் சிறிய வீட்டில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்திருக்கிறார். அதனால் அங்கே தங்க முடியாத சூழல் எனினும் சிறுவனை தனியாக விட மனமின்றி இஸ்லாமிய க்ளப் மக்களிடம் கேட்டு இந்த சிறுவனுக்காக ஒரு டென்ட் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

Image Courtesy

#3

#3

அசாத் மைதான் கிரவுண்டில் டென்ட் அமைத்து அங்கே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வரை தங்கி கிரிக்கெட் பயிற்சி எடுத்திருக்கிறார். அப்போது செலவுக்காக பானிபூரி விற்பது, தெருவில் பழங்களை விற்பது போன்ற வேலைகளை செய்திருக்கிறார்,

காலையில் வேலை பகல் முழுவதும் பயிற்சி முடித்து இருட்டிய பிறகு தான் தன்னுடைய டென்ட்டுக்கு திரும்புவாராம். பல இரவுகள் பட்டினியுடன் தான் தூங்கியிருக்கிறார். அப்படி தனிமையில் தூங்கும் போது தன்னையும் அறியாமல் அழுவேன் என்றிருக்கிறார் ஜெய்ஸ்வால். இந்த அழுகை பசியினாலோ அல்லது பெற்றோரை விட்டு இங்கே வந்திருக்கிறோம் வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தினாலோ அல்ல...

Image Courtesy

#4

#4

அந்த மைதானத்தில் கழிப்பிட வசதி இருக்கவில்லை. இரவில் நான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் மைதானத்தை விட்டு வெளியில் உள்ள தெருவில் இருக்கிற கழிப்பிடத்திற்கு செல்ல வேண்டும். சில நேரங்களில் கழிவரையும் பூட்டியிருப்பார்கள். அதனாலேயே பல முறை அழுதிருக்கிறேன்.

நான் பானி பூரி விற்கும் பகுதிக்கு என் நண்பர்கள் யாரும் வந்துவிடக்கூடாது என்று தினமும் நினைத்துக் கொள்வேன். கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளும் போது எல்லாரும் உணவு,ஜூஸ் என்று பெரிய பெரிய டப்பாக்களில் அடைத்து கொண்டு வந்திருப்பார்கள். சிலருடைய பெற்றோர் உணவுடன் என் நண்பர்கள் பயிற்சி முடிக்கும் வரை அங்கேயே காத்திருப்பார்கள். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பெல்லாம் இல்லை. நானே சமைத்து நானே சாப்பிட வேண்டும். அடுத்த வேலை உணவு கிடைக்குமா என்றே சொல்லமுடியாது.

Image Courtesy

#5

#5

அப்பா அந்த வறுமையிலும் எனக்கு எப்போதாவது பணம் அனுப்புவார். என்னுடைய கஷ்டத்தை வீட்டில் சொல்லி அவர்களை மேலும் துன்புறுத்தக்கூடாது என்று நினைத்திருந்தபடியால் இங்கே நான் படுகிற சிரமங்கள் எதுவும் அவர்களுக்கு நான் தெரியப்படுத்தவில்லை.

யாசவி ஜெய்ஸ்வால் ஜ்வாலா சிங் என்ற பயிற்சியாளர் கண்களில் சிக்குகிறார். இது தான் ஜெய்ஸ்வாலின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைகிறது. பதினோறு வயதில் மும்பைக்கு வந்த சிறுவனின் திறமையை அவனது பன்னிரெண்டாவது வயதில் கண்டுபிடிக்கிறார்.

Image Courtesy

#6

#6

இது குறித்து பயிற்சியாளர் ஜ்வாலா கூறுகையில், அவனை நான் பார்க்கும் போது அவனுக்கு பன்னிரெண்டு வயது இருக்கலாம். அவன் எந்த பயிற்சி நிலையத்திலும் பயிற்சி எடுத்திருக்கவில்லை ஏன் சரியான உணவு கூட அவனுக்கு கிடையாது. அப்படியிருந்தும் மைதானத்திற்கு வந்துவிட்டால் அவனை யாராலும் பிடிக்க முடியாது.

இவன் பயிற்சி எடுப்பதைப் பார்த்து என்னுடைய நண்பர் ஒருவரும் அருமையாக பந்துவீசுகிறான் என்று பாராட்டினார்.

Image Courtesy

#7

#7

பயிற்சிக்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவான். அதுவரை அவனது குடும்பத்தைப் பற்றியோ படிப்பைப் பற்றியோ எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. ஒரு நாள் பேட்டிங் பயிற்சி முடித்து திரும்புகையில் உன் வீடு எங்கே நான் வேண்டுமானால் இறக்கிவிடுகிறேன் என்றேன்.... இல்லை சார் நான் இங்கே தான் டென்ட் கட்டி தங்கியிருக்கிறேன் என்றான். எனக்கு ஒரு கணம் அதிர்ச்சியாக இருந்தது.

அதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை ஒரு பன்னிரெண்டு வயது சிறுவன் டென்ட்டில் தனியாக அவனை சமைத்து அவனே சம்பாதித்து தன்னுடைய லட்சியக் கனவுக்காக வாழ்கிறானா?

Image Courtesy

#8

#8

தன்னுடைய சூழ்நிலையை காரணம் காட்டி ஒரு நாளும் என்னிடமிருந்து சலுகைகள் எதிர்ப்பார்க்கவில்லை. ஏன் தான் இப்படியான பின்னணியிலிருந்து வருகிறேன் என்று கூட அவனாக என்னிடம் சொன்னதில்லை.

அவனது திறமையின் மீது வீடாமுயற்சியின் மீதும் எனக்கு அபார நம்பிக்கை இருந்தது. அதனால் தொடர்ந்து அவனுக்கு பயிற்சியளிக்கவும் உதவி செய்யவும் முன்வந்தேன். பவ்லிங் மட்டுமல்ல இவன் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டான். ஆனால் அதற்கு நிறைய பயிற்சிகள் தேவைப்பட்டது. நீ பேட்டிங்கில் கண்டிப்பாக ஜொலிப்பாய் என்று சொல்லி தினமும் உடற்பயிற்சி மற்றும் பேட்டிங் பயிற்சி அளித்தேன்.

Image Courtesy

#9

#9

பேட்ஸ்மேன் கிரிக்கெட் நுணுக்கங்களை முழுமையாகவும் அதே சமயம் தெளிவாகம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதோடு அவர் மனதளவிலும் உடல் அளவிலும் பயங்கர ஃபிட்டாக இருக்க வேண்டும்.

ஜூஹூ பீச்சுக்கு அழைத்துச் சென்று ஜெய்ஸ்வாலுக்கு ஃபிட்னஸ் பயிற்சி கொடுப்பேன். ஜெஸ்ய்வால் விஷயத்தில் பெரும் பிரச்சனையாக இருந்தது அவனுக்கு போதிய ஊட்டச்சத்துக்கு மிக்க உணவுகள். ஃபிட்னஸுக்கு பயிற்சி மட்டுமல்ல உணவும் மிக முக்கியமானது. சிறு வயதில் என்னுடைய லட்சியம் இது தானென்று என்னால் நிலையான ஒரு முடிவைக்கூட எடுக்க முடியாத சூழல் ஆனால் தன்னுடைய லட்சியத்திற்காக எத்தகைய போராட்டத்தையும் சந்திக்க தயாராகிவிட்டான் என்று நினைக்கும் போதே மிகவும் பெருமையாக இருந்தது. முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும் அவன் லட்சியத்தை உதவ வேண்டும் என்று முடிவெடுத்தேன் என்கிறார் பயிற்சியாளார்.

Image Courtesy

#10

#10

உங்களுக்கு கிரிக்கெட் விளையாடும் போது மனதளவில் எப்படி தயாரானீர்கள் உங்களுக்கு எந்த பிரசரும் இருக்கவில்லையா? என்று ஆச்சரியமாக கேட்டார்கள். அதற்கு ஜெய்ஸ்வால் மிக சாதாரணமாக என் அன்றாட வாழ்க்கையில் பல ஆண்டுகளாக ஓர் அழுத்தத்தை நான் சந்தித்து தானே வருகிறேன். அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்பது எனக்கு முக்கியமாக இருக்காது. ஏனென்றால் எனக்குத் தெரியும். நான் சிறந்த ஸ்கோரை எடுப்பேன். ஃபீல்டிங்,பவ்லிங் எல்லாம் என்னுடைய முழு கவனத்துடன் செயல்படுவேன் என்பது நிச்சயமான ஒன்று,

எனக்கு இருக்கும் ஒரே கவலை அடுத்த வேளை உணவு கிடைக்குமா? என்பது தான். என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறான் ஜெய்ஸ்வால்.

Image Courtesy

#11

#11

இவருடன் சேர்ந்து பத்தொன்பது வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற இன்னொரு வீரர் அர்ஜூன், கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்படும் சச்சினின் மகன். தன் மகனுடன் விளையாடும் சிறுவனான ஜெய்ஸ்சாலைப் பற்றி அறிந்து கொண்டவர் ஜெய்ஸாலை சந்திக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.

சச்சினை சந்தித்த அந்த அனுபவத்தை கூறுகையில், ஒரு நாள் அர்ஜூன் என்னிடம் வந்தான், அப்பா உன்னை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார் நீ என் வீட்டிற்கு வர வேண்டும் என்றான். எனக்கு மிகவும் பயமாய் இருந்தது. அவர் என்ன கேள்வி கேட்பார் அதற்கு என்ன சொல்லவேண்டும் என்று எதுவும் எனக்கு தெரியவில்லை.ஒரு வித பதட்டத்துடன் தான் அர்ஜூன் வீட்டிற்கு சென்றேன்.

Image Courtesy

 #12

#12

என்னிடம் ரொம்பவும் சகஜமாக பேசினார். பேசப் பேச கொஞ்சம் பயம் தெளிந்து சகஜமாக பேச ஆரம்பித்தேன் நானும் சச்சினிடம் கேள்விகள் கேட்டேன். நான் அவரிடம்... சார், பெரிய போட்டிகளில் விளையாடும் போது எப்படி உங்களுடைய எமோஷன்களை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர்,சிரித்துக் கொண்டே... விளையாடும் போது முடிவு என்னவாகும் என்று ஒரு போதும் யோசிக்க மாட்டேன். அந்த பிரசரில் என்னை நோக்கி வீசப்படுகிற பந்தை அடிக்க வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் இருக்கும் என்றார்.

Image Courtesy

#13

#13

சச்சின் ஜெய்ஸ்வாலுக்கு கொடுத்து இன்னொரு முக்கியமான அட்வைஸ் இது : பேட்டை பிடித்துக் கொண்டு நீ களத்தில் நிற்கிறாய் பந்து வீச்சாளார் பந்து வீச தயாராக நிற்கிறார். இந்த நேரத்தில் உன்னுடைய முழு கவனமும் உன்னை நோக்கி ஓடி வரும் அந்த பந்து வீச்சாளரிடம் தான் இருக்க வேண்டும்.

பந்து வீசுவதற்கு முன்னால் அவரின் அசைவுகளை வைத்து அவர் வீசும் திசை, வேகம் ஆகியவற்றை கணித்து அதற்கேற்ப வரும் பந்தை நீ சந்திக்க வேண்டும். இப்படி செய்வதால் வருகிற பந்தில் மட்டுமே உன் கவனம் இருக்கும். அதே நேரத்தில் வேறு எந்த விஷயத்திலும் உன் நாட்டம் செல்லாது.

மேலும் எத்தகைய பயிற்சி எடுக்க வேண்டும் என்று ஏகப்பட்ட டிப்ஸ் கொடுத்தாராம். நேசிக்கும் கிரிக்கெட் பற்றி கடவுளே நேரில் வந்து வாழ்த்து சொன்னது போல சச்சினிடம் பேசியது இருந்தது. அவருடன் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்ததில் அவருடன் சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுக்கவில்லையே என்று வீட்டிற்கு வந்த பிறகு தான் தோன்றியது என்கிறார் ஜெய்ஸ்வால்!

லட்சியக் கனவு வெல்லும்!

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Story About Young Indian Cricketer Yashasvi Jaiswal

Story About Young Indian Cricketer Yashasvi Jaiswal
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more