For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்வையாளர்களை வாய் பிளக்க செய்யும் தென் கொரியாவின் ஆண்குறி பார்க்!

பார்வையாளர்களை வாய் பிளக்க செய்யும் தென் கொரியாவின் ஆண்குறி பார்க்!

By Staff
|

உலகில் விசித்திரங்கள் பலவிருந்தாலும், அந்த விசித்திரங்களுக்கு எல்லாம் விசித்திரமாக ஒன்று இருக்கும் அல்லவா? நமது சின்ஷான் பேச்சுவழக்கில் கூற வேண்டும் என்றால், விசித்திரம், விசித்திரம், விசித்திரங்களுக்கு எல்லாம் விசித்திரம் இது.

வட கொரியா என்றால் உலக மக்கள் மனதில் பீதி கிளம்புகிறது. இதுவே, தென் கொரியா என்றால் உலக மக்கள் மனதில் என்னென்னவோ கிளம்புகிறது. அந்தளவிற்கு வேற லெவலில் இருக்கிறது அவர்களது சில சமாச்சாரங்கள்.

ஏற்கனவே பேய்களை விரட்ட பூட்டானில் இருக்கும் ஒரு இடத்தில் ஊர் முழுக்க ஆண்குறி வரைந்து வைத்து அலப்பறையை கூட்டியதை நாம் அறிவோம். ஆனால், தென் கொரியாவின் இந்த ஆண்குறி பூங்கா வேற லெவல். இது ஏன் உருவாக்கப்பட்டது என்பதற்கு ஒரு வரலாற்று கதை வேறு இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹெசிண்டங் (Haeshindang)

ஹெசிண்டங் (Haeshindang)

2018 விண்டர் ஒலிம்பிக் நடக்கும் இடத்தில் இருந்து ஒரு மணிநேரத்தில் இந்த இடத்திற்கு சென்று விடலாம். உள்ளூர் மக்கள் இதை ஹெசிண்டங் பார்க் என்று அழைத்தாலும். உலக அளவில் இந்த பார்க் பிரபலம் அடைந்து காணப்படுவது ஆண்குறி பார்க் என்ற பெயரால் தான்.

இந்த பார்க்கில் மொத்தம் வெவ்வேறு வடிவிலான ஐம்பது பெரிய சைஸ் ஆண்குறி சிலைகள் உள்ளன, இவற்றுக்கு பின்னால் சில காரணங்களும் இருக்கின்றன.

Image Source© Reuters

எல்லாமுமே!

எல்லாமுமே!

இந்த பார்க்கில் இருந்து இருக்கைகளில் இருந்து பல வினோதமான சிலைகள் மற்றும் அமைப்புகள் என அனைத்தும் ஆண்குறி வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இப்படியான ஒரு பூங்காவை உலகில் வேறு எந்த ஒரு இடத்திலும் காண முடியாது என்று அடித்துக் கூறுகிறார்கள், ஹெசிண்டங் பூங்காவிற்கு சென்று வந்த சுற்றுலா பயணிகள்.

Image Source© Reuters

நிபந்தனை!

நிபந்தனை!

இந்த ஆண்குறி பூங்காவில் இருக்கும் ஆண்குறி இருக்கைகளில் அமர்ந்துக் கொள்ளலாம், அனைத்து சிலைகள் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அங்கே இருக்கும் பீரங்கி வடிவிலான ஆண்குறி சிலை மீது மட்டும் யாரும் ஏற கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Image Source© Reuters

தென் கொரியா மட்டுமல்ல

தென் கொரியா மட்டுமல்ல

ஆண்குறியை வழிப்படும் முறையானது தென் கொரியாவில் மட்டுமல்ல, இது ஜப்பானிலும் இருக்கிறது. ஜப்பானில் கன்னமார மட்சூரி என்ற பெயரில் ஆண்குறியை வணங்கி வருகிறார்கள். இந்த திருவிழாவில் ஜப்பான் மக்கள் ஆண்குறி வடிவிலான சிலைகளை தங்கள் தோள்களில் ஏந்தி சென்று வழிபடுகிறார்கள்.

Image Source© Reuters

கதை!

கதை!

ஜப்பானில் கன்னமார மட்சூரி என்ற திருவிழா கொண்டாட ஒரு காரணமும் இருக்கிறது, அங்கே ஒரு பெண்ணின் பிறப்புறுப்புக்குள் கூர்மையான பற்கள் கொண்ட பேய் ஒன்று இருந்தது.

அது பெண்ணுடன் உறவு கொள்ளும் ஆணின் விரைகளை அறுத்துவிடும் என்ற கருத்தும் நிலவி வந்தது. அப்போது அந்த பெண் இரும்பு ஆண்குறி கொண்டு அந்த பேயை கொன்றதாகவும், அதை தொடர்ந்து இந்த விழா கொண்டாடப்படுவதாகவும் ஒரு மூட நம்பிக்கை கதை கூறப்படுகிறது.

Image Source© Reuters

ஆண்குறி பூங்காவின் கதை...

ஆண்குறி பூங்காவின் கதை...

ஆண்குறி பூங்காவின் பின்னணியிலும் ஒரு கதை கூறப்படுகிறது. இது ஜப்பானியர்கள் கூறும் கதையுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் சுமாராக இருக்கிறது. சரி கதைக்கு போவோம்...

முன்னொரு காலத்தில் ஒரு இளம் கன்னிப்பெண் வசித்து வந்தாலும், அவள் தனது காதலனுக்காக கடற்கரை அருகே காத்திருந்த போது புயல் காற்றில் சிக்கி நீரில் மூழ்கி இறந்து போய்விட்டாளாம். அந்நாளில் இருந்து அவர்களுக்கு மீனே கிடைக்கவில்லையாம். இதற்கு அந்த பெண்ணின் ஆவி தான் காரணம் என்று கருதியுள்ளனர்.

Image Source© Reuters

திடீர் ஹீரோ!

திடீர் ஹீரோ!

ஆனால், ஒரு மீனவன் தோன்றி திடீர் ஹீரோ ஆகியுள்ளார். அவர் கடலில் சிறுநீர் கழித்த பிறகு, மீன்கள் மீண்டும் தோன்றினவாம். அந்த மீனவனின் ஆண்குறிய, அந்த கன்னிப்பெண் ஆவியை சாந்தப்படுத்திவிட்டது என்று கருதி இந்த ஆண்குறி பூங்கா வைத்துள்ளனர்.

இந்த கதை அறியப்பட்டதில் இருந்து இணையங்களில் தென் கொரியாவின் மானம் கப்பல் ஏறி போய்க்கொண்டிருக்கிறது.

Image Source© Reuters

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

South Korea Weird Penis Theme Park!

South Koreas Weird Penis Theme Park!
Desktop Bottom Promotion