கட்டிப்போட்டு,நாயை விட்டு வன்புணர்வு செய்யவைத்து டார்ச்சர் !

Subscribe to Boldsky

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏராளமான தண்டனைகளை கடந்து வந்திருப்போம். தாமதாமாக ரிப்ளை செய்வதில் ஆரம்பித்து, உன்கிட்ட பேசமாட்டேன் என்பதும் நமக்கான தண்டனைகளாக இருந்திருக்கிறது.

இதை அப்படியே ஒரு புறம் ஒதுக்கி வைத்திடுங்கள், இதே தண்டனை சற்று மூர்க்கமாக, அந்த தண்டனையே இன்னும் தீவிரமாக உனக்கு வலிக்க வேண்டும்.... நான் அனுபவிக்கிற வேதனையை நீயும் அனுபவிக்க வேண்டும் என்ற ரீதியில் செல்கிற போது கொலையாகவோ அல்லது உங்களை மனதளவில் காயப்படுத்தக்கூடியதாகவோ இருக்கிறது.

வீட்டுப் பாடம் செய்யாததால் முட்டிப் போட சொல்லும் வாத்தியார், தாமதாக வந்ததால் போன் அட்டெண்ட் செய்ய மறுக்கும் காதலி, என் பங்கு சொத்து கொடுக்காம என்னை ஏமாத்திட்டல்ல உன்னை கொல்லாம விடமாட்டேன் என்று துரத்தும் தூரத்து உறவினர், இப்படி சிறியதிலிருந்து பெரியது வரை நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக ஏற்றுக் கொண்டுவிட்டோம்.

தண்டனையைப் போலவே இன்னொரு விஷயம் இருக்கிறது..... சினிமாவில் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுக்கும் குற்றவாளியை போலீஸ் அடித்து டார்ச்சர் செய்து உண்மையை வரவைப்பாரே..... அப்படி குற்றவாளிகளுக்கு என்ன மாதிரியான டார்ச்சர் வழங்கப்படுகிறது என்று தெரியுமா?உண்மையில் டார்ச்சர் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள். உலகம் முழுவதும் தற்போது கடைபிடித்துக் கொண்டிருக்கும் நவீன டார்ச்சர் முறைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாக்கடை :

சாக்கடை :

இந்த முறை சீனாவில் பின்பற்றப்படுகிறது. குற்றவளியை ஒரு கூண்டில் அடைத்து விடுகிறார்கள். அதில் சாக்கடை நீரை நிரப்பி விடுகிறார்கள். கூண்டில் இருக்கக்கூடிய நபரின் கழுத்தளவுக்கு நிரப்பி டார்ச்சர் செய்கிறார்கள்.

Image Courtesy

ஏசி :

ஏசி :

CIA இப்படி டார்ச்சர் செய்வதற்கு அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஏசி முன்பாக குற்றவாளி போதிய உடைகள் இன்றி நிற்கவைக்கப்படுவான். சிறிது நேரத்தில் அறையின் தட்பவெட்ப நிலை குறைந்து அதீத வெப்பத்திற்கு ஆளாகி டார்ச்சர் ஆளாவார்கள். சில நேரங்களில் வருடக்கணக்கில் கூட இப்படி ஏசி தண்டனை வழங்கப்படுவது உண்டாம்.

ஷாக் :

ஷாக் :

இதையும் கூட நீங்கள் திரையில் பார்த்திருப்பீர்கள். ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்பது. உண்மையில் இந்தப் பழக்கம் பல காலங்களாக இருக்கிறது. மனிதனால் தாங்கிக் கொள்ள முடியாத கரண்ட் திடீரென்று கொடுக்கப்படுவதால் அந்த குற்றவாளிக்கு தலையிலிருந்து கால் வரை அதீத வலி உண்டாகும். அதோடு மரண பயத்தையும் அளிக்கும் என்பதால் பலரும் இதனை பின்பற்றுகிறார்கள்.

ஸ்குவேட் :

ஸ்குவேட் :

உடற்பயிற்சி, யோகா செய்பவர்களுக்கு இது மிகவும் பரிச்சயமானது தான். அதாவது கைகள் இரண்டையும் முன்னே நீட்டிக் கொண்டு சேர் பொசிசனில் நிற்பது. இடுப்பு எலும்புகள், கால் வலுப்பெறும்.

இதிலென்ன இருக்கிறது. இது மிகவும் எளிமையானது தானே என்று நினைக்கிறீர்களா? ஒரு நிமிடங்கள் அப்படி நிற்கவே அவ்வளவு சிரமப்படுவோம். ஆனால் இங்கே ஒரு நாள் முழுவதும் ஏன் ஒரு வாரம் கூட நிற்கச் சொல்லுவார்கள். இன்னும் சில நேரத்தில் காலுக்கு கீழே ஆணிகளைவைக்கிறார்கள்.

Image Courtesy

டேசர்கள் :

டேசர்கள் :

இதுவும் ஒரு வகை எலக்ட்ரிக் ஷாக் தான். துப்பாக்கி போல இருக்கும் இதிலிருந்து எலக்ட்ரோட்ஸ் மற்றும் இரண்டு டார்ட் வெளியாகி எதிராளியை தாக்கும். இதனால் தசைகள் மற்றும் நரம்புகள் இறுகி அதீத வலி உருவாகும்.

சுடுவது நின்றதும் சில நொடிகளில் சரியாகும். இந்த முறை பல்வேறு சர்வதேச போலீஸ் படையில் பயன்படுத்தப்படுகிறது. ராணுவத்தில் டேசர் சர்டிவிக்கேஷன் என்றே ராணுவ வீரர்களுக்கு இந்த சோதனை செய்யப்படுகிறது.

Image Courtesy

ஸ்ட்ரப்பாடோ :

ஸ்ட்ரப்பாடோ :

இதனை பாலஸ்தீனிய முறை என்று அழைக்கிறார்கள். தலைக்கு பின்புறம் கையை உயரச் செய்து கட்டுவது. நீண்ட நேரம் அல்லது தொடர்ந்து இரண்டு நாட்களாக இப்படி கட்டி வைக்கப்பட்டிருப்பதால் கை எலும்புகள் டிஸ்லொக்கேட் ஆகிடும் இதனால் அதீத வலி உண்டாகும்.

சில நேரங்களில் இவை மூச்சுவிடக்கூட சிரமத்தை ஏற்படுத்தும்.

Image Courtesy

வொயிட் :

வொயிட் :

வெண்மை நிறத்தில் ஒரு டார்ச்சரா? ஒரு வண்ணத்தைக் கொண்டு டார்ச்சர் செய்ய முடியுமா என்று பார்த்தால் ஆம், இது குற்றவாளியை மனரீதியாக தாக்கும் என்கிறார்கள். குற்றவாளிக்கு வெள்ளை நிற உடை, அவன் கண்களில் தெரிவது எல்லாமே வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். உணவுகூட வெள்ளை சாதம் மட்டுமே வழங்கப்படும். தனியறையில் அடைத்திருப்பார்கள். ஒரு துளிசத்தம் கூட கேட்காது.

அரிசி சாதம் இந்தியா போன்ற நாடுகளில் பிரபலம். அதுவும் வட இந்தியா பக்கம் போனால் என்றைக்காவது தான் அரிசி சாதத்தை கண்ணில் காட்டுகிறார்கள். அதுவும் மூன்று வேலைக்கும் தட்டு நிறைய வெள்ளை சாதம் மட்டும் கொடுத்தால் எப்படி கொழம்பு வேண்டாமா.....

இந்த தண்டனை வெளிநாடுகளில் தான் அதிக ஃபேமஸ்.

Image Courtesy

டக்கர் டெலிபோன் :

டக்கர் டெலிபோன் :

இது ஒரு வகையான டார்ச்சர் செய்ய பயன்படுத்தப்படும் கருவி. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை டெலிபோன் வயர் மூலமாக இந்த கருவி செயல்படுத்தப்படுகிறது. போனின் எலக்ட்ரிக் ஜென்ரேட்டருடன் இரண்டு ட்ரை பேட்ரி செல்கள் இணைக்கும் போது ஷாக் அடிக்கும்.

இதன் மூலம் இன்னொருவருக்கு ஷாக் வைக்க முடியும். இதனை குற்றவாளியின் பிறப்புறுப்பில் ஷாக் அடிக்க பயன்படுத்துகிறார்கள்.

Image Courtesy

சிரியன் பாக்ஸ் :

சிரியன் பாக்ஸ் :

பெயரிலேயே இது எங்கே நடைமுறைப்படுத்தப்பட்டது என்று தெரிந்திருக்கும். இன்றளவும் இப்படியான டார்ச்சர்கள் செய்யப்படுகிறது.

சிறிய பெட்டி ஒன்றில் குற்றவாளியை அடைத்து விடுகிறார்கள். மூச்சு விடவும், சாப்பாடு கொடுக்கவும் மட்டும் மிகச்சிறிய துளை இருக்கிறது. லெட்டர் பாக்ஸில் லெட்டர் போடுவதற்காக ஒரு துளையிருக்குமே அது போல.

அதன் வழியாக காலை ஒரு வேலை காய்ந்த ரொட்டி வழங்குகிறார்கள். அதிலேயே இரண்டு நாட்களோ அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களோ அடைந்து கிடக்க வேண்டும். அது சிறிய பெட்டி என்பதால் கைகால்களை அசைக்ககூட முடியாது. அதோடு நீண்ட நேரம் ஒரே பொசிசனில் இருப்பதால் உடல் முழுவதும் அதீத வலி உண்டாகும்.

Image Courtesy

மியூசிக் டார்ச்சர் :

மியூசிக் டார்ச்சர் :

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு இதுவும் ஒர் உதாரணம். பாட்டு கேட்கச் சொல்வது எப்படி டார்ச்சர் ஆக முடியும். புரியாத மொழியில் அதீத இரைச்சலுடன் ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டேயிருந்தால்..... நேரம் ஒரு மணி நேரம் கடந்து இரண்டு மணி நேரம் கடந்து சென்று கொண்டேயிருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு நாட்களையும் கடந்து விட்டது. ஆனால் பாட்டு நிற்கவேயில்லை என்றால் அப்படியானதொரு டார்ச்சர் இது. இது குற்றவாளியை மனரீதியாக குலைக்கக்கூடியது.அவனது ஸ்ட்ரஸ் லெவல் அதிகரிக்கும், தூக்கமின்மை ஏற்படும்,உணவு சாப்பிடுவதில் சிக்கல்கள் உண்டாகும், பாட்டை நிறுத்தினாலும் தொடர்ந்து காதில் உட்கார்ந்து யாரோ கத்துவது போல கேட்டுக் கொண்டேயிருக்கும்.

Image Courtesy

உயிருடன் புதைத்திடுங்கள் :

உயிருடன் புதைத்திடுங்கள் :

இந்த முறை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கிலிருந்து குறைந்து வருகிறது. அதவாது உயிருடன் இருக்கும் போதே புதைத்து விடுவார்கள். சில இடங்களில் கழுத்து வரை மண்ணில் புதைப்பார்கள். சில இடத்தில் மூச்சுவிடுவதற்கு மட்டும் ஒரு குழாய் வழங்கப்பட்டு முழுவதும் மூடியிருப்பார்கள்.

மூச்சு விட முடிந்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது.

Image Courtesy

ஒன்பது கயிறுகள் :

ஒன்பது கயிறுகள் :

ஒரு பிடியில் ஒன்பது கையிறுகள் கோர்க்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கயிற்றிலும் கூர்மையான இரும்புகோர்க்கப்பட்டிருக்கும். இதனைக் கொண்டு குற்றவாளியாய் தாக்கும் போது வரி வரியாக சதை கிழிந்து தொங்கும். ரத்தக்காயத்தை உண்டாக்கிடும்.

நஸ்ரேத்தில் இயேசுவை இதனைக் கொண்டு தான் தாக்கினார்கள்.

Image Courtesy

நாய் கற்பழித்தால் :

நாய் கற்பழித்தால் :

கேட்கவே சற்று அருவருப்பாக இருக்கிறதல்லவா? அமெரிக்காவில் ஆப்கான் கைதிகளை டார்ச்சர் செய்ய இந்த முறை பின்பற்றியிருக்கிறார்கள்.

சிறிய சேரில் முகத்தை மூடி கை கால்களை கட்டி கீழே குனிந்து உட்கார வைக்கிறார்கள். அதன் பின் அந்த அறைக்குள் நாய் அவிழ்த்துவிடப்படுகிறது.

டைகர் பென்ச் :

டைகர் பென்ச் :

நீளமான பலகையொன்றில் குற்றவாளியை காலை நீட்டி உட்கார வைப்பார்கள். முதுகையும் கையையும் கட்ட, முதுகில் நீண்ட பலகை ஒன்று வைத்து பலகையையு முதுகையையும் சேர்த்தும்,கையையும் வாயையும் கட்டுவார்கள்.

உட்கார்ந்திருக்கும் பலகையில் கால்களை நீட்டச் செய்து பெல்ட்களால் கட்டியிருப்பார்கள். இப்போது பாதமிருக்கும் இடத்தில் ஒவ்வொரு செங்களாக வைப்பார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்றோ அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒன்று என்றோ வைத்துக் கொண்டேயிருப்பார்கள்.இப்படி கூடிக் கொண்டே போய்.... கால்களை கட்டியிருக்கும் பெல்ட் தெரித்து அறுந்து விழும் வரை ஒவ்வொரு செங்கல் கூடிக் கொண்டேயிருக்கும்.

கால்களை நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது, அதோடு காலிலேயே பாதம் இருக்கும் பகுதி மட்டும் சற்று உயரத்தில் இருப்பது போன்றவை பெரும் வலியை கொடுக்கும்.

Image Courtesy

 தூக்கம் :

தூக்கம் :

இது ஆரம்பத்தில் டார்ச்சராக தெரியாது நேரம் செல்ல செல்ல அதன் வீரியம் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். தொடர்ந்து இரண்டு நாட்கள் அல்லது அதற்கும் மேல் நீங்கள் தூங்கவே கூடாது. உங்களை தூங்க விடாமல் டார்ச்சர் செய்வார்கள்.

Image Courtesy

கயிற்றால் கட்டி வை :

கயிற்றால் கட்டி வை :

ஏசியாவின் பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது. பொதுவாக அரசியல் கைதிகளுக்கு இந்த வகை தண்டனை வழங்கப்படும். மரண பயத்தை கண்ணில் காட்டினார்கள் என்பார்களே அது போல.

பலகையொன்றில் குற்றவாளியை கட்டி வைத்து விடுவார். தொடர்ந்து ஒருவாரம் ஒரேயிடத்தில் இப்படி கட்டப்பட்டிருப்பதால் அவரது தசைகள் வலுவிழந்து போகும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: insync pulse
    English summary

    Shocking Modern Torture Methods

    Shocking Modern Torture Methods
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more